சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அக்டோபர் 21ல் தீபாவளி... நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு..தெற்கு ரயில்வே அறிவிப்பின் முழுவிபரம்

Google Oneindia Tamil News

சென்னை: அக்டோபர் மாதம் 21ம் தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை (வியாழக்கிழமை) துவங்க உள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பல பண்டிகைகளை வெளியூரில் வசிக்கும் மக்கள் திரளாக சொந்த ஊர் சென்று செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் பஸ், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதும்.

எடப்பாடி பழனிசாமிக்கு 4 பி.எஸ்.ஓ.க்கள்! பாதுகாப்பு அதிகரிப்பு! கிட்ட நெருங்க முடியாது! எடப்பாடி பழனிசாமிக்கு 4 பி.எஸ்.ஓ.க்கள்! பாதுகாப்பு அதிகரிப்பு! கிட்ட நெருங்க முடியாது!

குறிப்பாக சென்னை அதனை சுற்றிய பகுதிகள் மற்றும் கோவை உள்பட பல நகரங்களில் இருந்து மக்கள் தங்களின் சொந்த கிராமங்களை நோக்கி படையெடுப்பதால் சிறப்பு பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றனர்.

அக்டோபர் 21ல் தீபாவளி

அக்டோபர் 21ல் தீபாவளி

கட்டணம் குறைவால் பெரும்பாலானவர்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர். இதனால் ஒவ்வொரு தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போதும் முன்கூட்டியே ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 24ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த முறை தீபாவளி திங்கட்கிழமை வர உள்ளது. இதனால் வெளியூர்களில் வசிக்கும் மக்கள் சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி அக்டோபர் மாதம் 21ம் தேதியே ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

நாளை முதல் முன்பதிவு

நாளை முதல் முன்பதிவு

இதனால் பொதுமக்கள் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக ரயிலில் முன்பதிவு செய்ய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே அதாவது நாளை (23-ந் தேதி) முதல் ரெயில் முன்பதிவு சேவை தொடங்க உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.

எந்தெந்த தேதிகளில் முன்பதிவு

எந்தெந்த தேதிகளில் முன்பதிவு

அதன்படி அக்டோபர் 21ல் ரயில் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் நாளையும்(வியாழக்கிழமை), அக்டோபர் 22ல் பயணிக்க விரும்புவோர் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை), அக்டோபர் 23ல் பயணம் செய்ய விரும்புபவர்கள் ஜூன் 25ம் தேதியும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். வருகிற 25-ந் தேதியும் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

திட்டமிடல் அவசியம்

திட்டமிடல் அவசியம்

வழக்கமாக தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்களின் டிக்கெட் முன்பதிவு துவங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்து விடும். இதனால் பயணிகள் ரயில் கால அட்டவணைப்படி திட்டமிட்டு உரிய இண்டர்நெட் வசதி உடைய இடத்தில் இருந்து பயணிகள் முன்பதிவு செய்து பயன்பெறுவது அவசியாகும்.

English summary
Southern Railway has announced that train ticket booking will start tomorrow (Thursday) as Deepavali is to be celebrated on October 21 (Monday).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X