தீவிரமடையும் தென்மேற்குப் பருவமழை: நீலகிரி கோவை, தேனியில் பலத்த காற்றுடன் கனமழை - வானிலை அறிவிப்பு
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைவதால் வரும் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரைக்கும் தேனி, நீலகிரி, கோவையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: நீலகிரி, கோவை, தேனி, வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. ஏனைய உள் மாவட்டங்களிலும் புதுவை, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடையும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் 13 செமீ மழை பதிவாகியுள்ளது. ரிஷிவந்தியத்தில் 11 செமீ மழையும், திருவையாறு, ஊத்தங்கரை, நந்தியார் ஹெட் பகுதியில் 6 செமீ மழை பதிவாகியுள்ளது.
உள் தமிழ்நாடு முதல் மன்னார் வளைகுடா வரை 1 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 மாவட்டங்களில் மழை
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, தேனி,வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. ஏனைய உள் மாவட்டங்களிலும் புதுவை, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

பருவமழை தீவிரம்
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைவதன் காரணமாக 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரைக்கும் நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் மற்றுட் ஈரோடு, விருதுநகர், திருநெல்வேலி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மிக மிக கனமழை
நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மலைப்பகுதிகளில் மண் சரிவுக்கு வாய்ப்பு உள்ளது எனவே மலையேற்றத்தை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

இடி மின்னல் காற்று
சென்னையில் 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வனிலை மையம் அறிவித்துள்ளது. 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரைக்கும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். கேரளா, அரபிக்கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் 4 நாட்களுக்கு இந்த கடலோர பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications