அரசியல் மாநாட்டுக்கு அத்தனை கேள்விகள் கேட்குறீங்களே? மெரினாவில் என்ன செய்திருக்கீங்க? சவுமியா
சென்னை: சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் இறந்ததற்கு காரணம் என்ன என்பதை சவுமியா அன்புமணி விளக்கியுள்ளார்.
இதுகுறித்து சவுமியா அன்புமணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: நேற்று இந்திய விமான படை நடத்திய சாகச நிகழ்ச்சி அருமையான நிகழ்ச்சி. நாங்களும் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் பார்த்து வீடியோ எடுத்தோம். விமான படை சாகசம் என்பது நமக்கு பெருமையான விஷயம்.

விமான சாகசத்தை பார்க்க மக்களும் ஆர்வமாக வந்திருந்தார்கள். பெரிய சாதனையே படைக்கப்பட்டது. இது எவ்வளவு பெரிய நிகழ்வு? இத்தனை லட்சம் பேர் இந்த சாகசத்தை பார்க்கத்தான் கூடினார்கள். இதை பார்க்க சென்னை, சுற்றியுள்ள பகுதிகள், வெளி மாவட்டங்களில் இருந்து கூட வந்திருந்தார்கள்.
நேற்றைய தினம் 32 டிகிரி வெயில் இருந்தது. இந்த நிகழ்வுக்கு வந்த 4, 5 பேர் இறந்துவிட்டதாக சொல்கிறார்கள். ஏனென்றால் அத்தனை வெயில் இருந்தது. இந்த பலி எண்ணிக்கை குறைந்திருப்பதற்கு காரணம் சென்னைவாசிகள்தான் என நான் நினைக்கிறேன். அவர்கள்தான் தண்ணீர், தொப்பி, குடை, உணவு, நொறுக்குத் தீனி என தயார் நிலையில் வந்துள்ளார்கள்.
அந்த தயார் நிலையில் அவர்கள் வராமல் இருந்திருந்தால் இன்னும் நிறைய பேர் இறந்திருப்பார்கள். நேற்று ஈரப்பதமும் 61 சதவீதம் இருந்துள்ளது. ஈரப்பதம் அதிகமானால் உடலில் இருந்து வரும் வியர்வை ஆவியாக வேண்டும். அப்படி ஆனால்தான் உடலில் உள்ள வெப்பநிலை குறையும்.
ஈரப்பதம் அதிகமாகி உடலில் இருந்து வியர்வை ஆவியாகாமல் வெளியே வெப்பமும் அதிகமாக இருந்தது. அதிலும் 32 டிகிரி என்பது மெரினா மணலில் 42 டிகிரியாக தெரிந்திருக்கும். உடல் வெப்பநிலையும் குறையாததால்தான் அத்தனை பேருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் , பாதுகாப்பு வசதியெல்லாம் செய்ததாக கூறுகிறார்கள். ஆனால் போக்குவரத்து ஏற்பாடுகள் சரியில்லை. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கே சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த போட்டியில் 15 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அப்படியிருக்கும் போது போக்குவரத்து வசதிகளை செய்திருக்க வேண்டும்.
இதை அவர்கள் இலவசமாக பார்க்க வருகிறார்கள். அப்படியிருக்கும் போது போக்குவரத்தை அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் எதையும் செய்யவில்லை. தண்ணீர், நிழற்குடைகள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டுள்ளனர். 15 லட்சம் பேர் வரும் இடத்தில் 200 பேருக்கு ஒரு போலீஸ் என போட்டால் எப்படி?
ஒரு அரசியல் மாநாட்டிற்கு காவல் துறையில் அனுமதி கேட்டால் எங்களிடம் போலீஸார் என்னென்ன கேட்பார்கள் தெரியுமா? பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளனவா, அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்றெல்லாம் கேள்விகள் கேட்பார்கள். விமான சாகசத்திற்கு சென்னையை சுற்றியுள்ளவர்கள் மட்டும்தான் வந்தார்கள்.
ஆனால் அரசியல் கட்சி மாநாட்டுக்கு தமிழகம் முழுவதிலிருந்தும் வருவார்கள். ஆனாலும் ஒரு உயிருக்குக் கூட ஆபத்து ஏற்படக் கூடாது என எண்ணி அவர்கள் சொந்த ஊருக்கு செல்லும் வரை அத்தனை முன்னேற்பாடுகளை செய்வோம். இவ்வாற சவுமியா கூறியிருந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications