அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் பிரம்மாண்ட கட்சி எது? சபாநாயகர் அப்பாவு சொன்ன பதில்!
சென்னை: பிரம்மாண்டமான கட்சி ஒன்று, அதிமுகவுடன் கூட்டணிக்கு வரும் என எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், அது எந்தக் கட்சி என்ற கேள்விக்கு தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு பதில் அளித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு முனைப்பு காட்டி வருகிறது. அதிமுக - பாஜக கூட்டணியில் வேறு சில கட்சிகளும் இணைய உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வருகிறார்.

அண்மையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு அமைப்பது சரியாக இருக்கும். அடுத்து பாருங்கள்.. ஒரு பெரிய கட்சி எங்கள் கூட்டணிக்கு வரப்போகிறது.. பிரமாண்டமான கட்சி அதிமுக கூட்டணிக்கு வருகிறது. பொறுத்திருந்து பாருங்கள். நாங்கள் 234 தொகுதிகளில் 230 தொகுதிகளில் வெல்வோம். அதோடு தனித்து ஆட்சி அமைப்போம். எனக் கூறினார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பிரம்மாண்டமான கட்சி ஒன்று விரைவில் அதிமுகவுடன் கூட்டணிக்கு வரும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, "பிரம்மாண்டமான கட்சி அதிமுகவுடன் கூட்டணி சேருகிறது என்றால், அது சசிகலா, டிடிவி தினகரன் அல்லது ஓ.பன்னீர்செல்வமாகவே இருக்க முடியும்" என்றார்.
இவர்கள்தான் பிரமாண்டமான கட்சியா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "ஏன் அவர்கள் நடத்தும் கட்சிகள் உங்களுக்கு சிறிய கட்சிகளாக தெரிகிறதா?" என மறு கேள்வியெழுப்பிய அப்பாவு, "சசிகலா தான் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் அமர வைத்தார்" எனக் கூறினார்.
-
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்!












Click it and Unblock the Notifications