சென்னைவாசிகளே திணறிட்டாங்க.. கோயம்பேட்டில் அதை கவனிச்சீங்களா.. ஆயுதபூஜை வேற இப்போ 4 நாள் லீவு
சென்னை: ஆயுதபூஜை உள்ளிட்ட 4 நாள் தொடர் விடுமுறைகளை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பி சென்று வருகிறார்கள். இதனால், கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை நாட்களுடன் சனி, ஞாயிறு என மொத்தமாக 4 நாட்கள் அரசு விடுமுறை வருகின்றன.. அதனால், சென்னையில் தங்கி வேலைபார்ப்பவர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் என பலரும், தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தமிழக அரசு: ரெயில்களில் டிக்கெட் புக்கிங் முன்கூட்டியே ஆரம்பமாகிவிட்டது. அரசு பஸ்களிலும் கூட்டம் நெருக்கி தள்ளிவிடும். அதனால்தான், நேற்று வெள்ளிக்கிழமை முதல் 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்க தமிழக அரசு முடிவு செய்தது..
அந்தவகையில், சென்னை கோயம்பேடு, மதுரவாயல், தாம்பரம் போன்ற பஸ் ஸ்டாண்டுகளிலிருந்து மொத்தம் 2264 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பையும் கடந்த வாரம் வெளியிட்டிருந்தது.
அதன்படி, நேற்று முதல், 20, 21, 22 ஆகிய தேதிகளில் கூடுதலாக 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட முடிவானது.. இதில், சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படுகிற 2,100 பேருந்துகளுடன், கூடுதலாக 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், கோயம்புத்தூர், திருப்பூர், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களிலிருந்து 1,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில், முதல்கட்டமாக, நேற்று மட்டும் 1000 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்டது.
வெளிமாவட்ட பேருந்துகள்: சென்னையை பொறுத்தவரை கோயம்பேடு பேருந்து ரயில் நிலையத்தில் இருந்து புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை, நெல்லை, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். தாம்பரம் பஸ் ஸ்டாண்டிலிருந்த இருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, சிதம்பரம், புதுச்சேரி, கடலூர் ஆகிய நகரங்களுக்கு செல்லும் பேருந்து இயக்கப்படும்.
பூவிருந்தவல்லி பஸ் ஸ்டாண்டிலிருந்து வேலூர், காஞ்சிபுரம், ஓசூர், திருத்தணி, திருப்பதிக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். ஆக, அறிவிக்கப்பட்டுள்ள 4 ஆயிரம் பேருந்துகளில் 2,265 பேருந்துகள் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இருந்து புறப்பட்டு செல்லும். எஞ்சிய 1,735 பஸ்கள், கோவை, சேலம், திருச்சி, மதுரை, பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து தமிழகத்தின் மற்ற நகரங்களுக்கு இயக்கப்படும்.
வெப்சைட்கள்: முன்பதிவு செய்யப்படாத பஸ்கள் அதிக அளவில் இயக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் பேருந்து நிலையங்களுக்கு நேரடியாக செல்லும் பயணிகள் தான் அதிகம். அதற்கேற்ப எண்ணிக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முன்பதிவு செய்ய விரும்புவோர் www.tnstc.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் TNSTC மொபைல் ஆப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்நிலையில், கோயம்பேடு பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது... கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் அதிக அளவிலான மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக குவிந்து வருகிறார்கள்.. இதனால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகரித்து கானப்படுகிறது.
போலீஸ் குவிப்பு: எனவே, அசம்பாவிதங்கள் எதுவும் நடந்துட கூடாது என்பதற்காக, 200க்கும் மேற்பட்ட போலீசார் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் கூட்டநெரிசலை தவிர்க்க சென்னை கோயம்பேடு தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி ஆகிய இடங்களிலிருந்து பிற மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்கிவந்தாலும், பயணிகளின் கூட்டம் அதிகமாகவே உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications