ஏப்ரல் 18 முதல்.. சென்னை 'டூ' மதுரை சிறப்பு ரயில்.. அதுவும் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸாம்!
சென்னை: வாரம் இருமுறை இயங்கும் அதிவேக சிறப்பு ரயில், மதுரை- எழும்பூர் இடையே ஏப்ரல் 18 முதல் இயக்கப்படுகிறது.
தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. எனினும், முன்பதிவு இல்லாத டிக்கெட் பயணத்திற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. அட்வான்ஸ் புக்கிங் செய்த பயணிகள் மட்டுமே இதுவரையில் ரயில்களில் பயணம் செய்கின்றனர்.

தற்போது தேர்தல் நடைமுறையோடு, கோடை காலமும் தொடங்கி விட்டதால் தென் மாவட்டத்தில் கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் வாரம் இருமுறை இயங்கும் அதிவேக சிறப்பு ரயில் மதுரை- சென்னை எழும்பூர் இடையே அடுத்த மாதம் ஏப்ரல் 18 முதல் இயக்கப்படுகிறது.
மதுரையில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும், சென்னை எழும்பூரில் இருந்து வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
எழும்பூரில் இருந்து இரவு 10.05 மணிக்கு புறப்படும் இந்த சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், காலை 8.10 மணிக்கு மதுரை சென்றடைகிறது. அதேபோல், மதுரையில் இருந்து இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு காலை 6.55 மணிக்கு வந்து சேருகிறது.
இந்த அதிவேக ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரையை சென்றடைகிறது. ஆகவே, நீங்களும் தேவைக்கேற்ப அட்வான்ஸ் புக்கிங் செய்து கொள்ளுங்க.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications