ஓட்டு போட ஊருக்கு போறீங்களா? சென்னை டூ நாகர்கோவிலுக்கு நாளை சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே
சென்னை: சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு நாளை சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் தமிழக சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில் சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக இந்த சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், சொந்த ஊருக்கு வாக்களிக்க செல்லும் பயணிகள் வசதிக்காக ஒன்வே ஸ்பெஷல் ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை டூ நாகர்கோவில்
நாகர்கோவிலிருந்து சென்னை எழும்பூருக்கு இன்று மாலை 4 மணிக்கு சிறப்பு ரயில் கிளம்பும். இந்த ரயில் திருவனந்தபுரம், கொல்லம், காயன்குளம், கோட்டயம், ஆலுவா, திரிச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்ககோணம், பெரம்பூர் வழியாக சென்னை எழும்பூருக்கு நாளை பிற்பகல்11.45 மணிக்கு வந்து சேரும்.
மறுமார்க்கத்தில் இந்த ரயில் 22 ஆம் தேதி அதாவது புதன் கிழமை சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் கிளம்பும். வண்டி எண்: 06072 சென்னை எழும்பூரில் 1.25 மணிக்கு கிளம்பும் இந்த ரயில், தாம்பரத்திற்கு 1.53 க்கு வந்து சேரும் . தாம்பரத்தில் இருந்து 1.55 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம் வழியாக திருச்சிக்கு இரவு 7.35 மணிக்கு சென்றடையும்.
முன்பதிவு எப்போது?
திருச்சியில் இருந்து 7.45 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் திண்டுக்கலுக்கு இரவு 8.55 மணிக்கு சென்றடையும். திண்டுக்கல்லில் இருந்து 9 மணிக்கு கிளம்பும் ரயில் மதுரை (இரவு 9.50 மணிக்கு வந்து 10 மணிக்கு கிளம்பும்), விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக நெல்லைக்கு நள்ளிரவு 12.20 மணிக்கு வந்து சேரும்.
நெல்லையில் இருந்து 12.30 மணிக்கு கிளம்பி நாகர்கோவிலுக்கு 23 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு வந்து சேரும். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தொடங்குகிறது. நாகர்கோவிலில் இருந்து இன்று கிளம்பும் ரயில் ( 06071) முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications