ராமேஸ்வரம் முதல் காசி வரை ஆன்மிகப் பயணம்..அறநிலையத்துறை ஏற்பாடு.. அமைச்சர் சேகர்பாபு
சென்னை: ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயிலிலிருந்து காசி விஸ்வநாதசுவாமி கோயிலுக்கு தமிழகத்தில் உள்ள 20 மண்டலங்களிலிருந்து 200 நபர்கள் கோயில் நிர்வாகத்தின் மூலம் அழைத்துச் செல்லப்படவுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இந்துக்களாகப் பிறந்த எவரும் வாழ்வில் ஒருமுறையேனும் காசி யாத்திரை செல்ல விரும்புவார்கள். கடமையை முடித்தால் காசிப்பயணம்' என்ற சொலவடையே இதனால்தான் வந்தது.
காசியாத்திரை என்பது ராமேஸ்வரத்தில் தொடங்கி மறுபடியும் ராமேஸ்வரத்தில் பூர்த்தியாக வேண்டும். இன்றைக்கு போக்குவரத்து வசதிகள் பெருகிவிட்ட நிலையில், ஒவ்வொருவரும் காசியாத்திரையை மேற்கொள்ள வேண்டும்' என்று காசி யாத்திரையின் மகத்துவம் பற்றி காஞ்சி பெரியவர் அருளியிருக்கிறார்.

காசி யாத்திரை
காசியாத்திரை என்பது வடக்கையும் தெற்கையும் இணைக்கும் அற்புதமான யாத்திரை. வடக்கில் இருப்பவர்களுக்கு ராமேஸ்வரம் யாத்திரை என்றால், தெற்கில் இருப்பவர்களுக்குக் காசி யாத்திரை. காசி யாத்திரை மேற்கொள்வதற்கு சில நடைமுறைகள் இருக்கின்றன.

ராமேஸ்வரம் முதல் காசி வரை
காசியாத்திரை செல்ல வேண்டும் என நினைப்பவர்கள், காசிக்கு மட்டும் செல்வதால் யாத்திரை நிறைவு பெற்றுவிடாது. காசிக்குச் செல்ல நினைப்பவர்கள் முதலில் செல்ல வேண்டிய புனிதத் தலம் ராமேஸ்வரம்.
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடிய பின் ராமநாதசுவாமியை மனமுருக வேண்டிக்கொண்டு சொந்த ஊருக்கு வந்து அங்கிருந்து காசியாத்திரையை மேற்கொள்ளலாம்.

அறநிலையத்துறை மானியக்கோரிக்கை
2022-2023 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில், "இராமேஸ்வரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலிலிருந்து காசி அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயிலுக்கு இவ்வாண்டில் 200 நபர்கள் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்பவர். இதற்கான செலவினத் தொகை ரூ.50 இலட்சத்தை அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது.

200 நபர்களுக்கு ஆன்மீக பயணம்
அதன்படி, இந்த ஆன்மிகப் பயணத்திற்கு அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில், மண்டலத்திற்கு 10 நபர்கள் வீதம் 200 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர் இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர்கள்
இதற்கான விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலிருந்து நேரில் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய இணைப்புகளுடன் மீள அதே மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு 15.12.2022 க்குள் அனுப்பி வைக்க வேண்டும். மண்டல இணை ஆணையர்கள் பரிந்துரைக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆன்மிகப் பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications