ஜேப்பியாரை வீழ்த்தி.. சத்தமே இன்றி ஸ்டாலின் சம்பவம்! அம்மாடி இவ்வளவு கோடியா? சென்னைக்கு குட்நியூஸ்
சென்னை; தமிழ்நாட்டில் அமைய உள்ள விளையாட்டு நகரம் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. செம்மஞ்சேரியில் 105 ஏக்கரில் விளையாட்டு நகரம் அமைய உள்ளது.
இந்த விளையாட்டு நகரம் ஜேப்பியார் கல்வி குழுமத்தினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலத்தில் கட்டப்பட உள்ளது. 91.04 ஏக்கர் நிலம் செம்மஞ்சேரியில் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 2010 கோடி ரூபாய். இந்த மீட்கப்பட்ட நிலத்தில்தான் விளையாட்டு நகரம் அமைக்கப்பட உள்ளது.

ஜேப்பியார் கல்வி குழுமத்தை சேர்ந்த செயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகம் 91.4 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நிலம் ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ஜேப்பியார் கல்வி குழுமத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.2010 கோடி மதிப்பிலான 91.04 ஏக்கர் நிலத்தை திமுக அரசு 18/செப்டம்பர்/2021 இல் மீட்டது. இங்குதான் தற்போது விளையாட்டு நகரம் அமைக்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
விளையாட்டு நகரம்; செம்மஞ்சேரியில் 105 ஏக்கரில் விளையாட்டு நகரம் அமைய உள்ளது. தொழில்நுட்ப - பொருளாதார சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரி உள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம். ஓஎம்ஆர் சாலையில் சத்தியபாமா பல்கலைக்கழகத்திற்கு அருகில் அமைக்கப்படவுள்ளது.
விளையாட்டு நகரம்: தமிழ்நாடு அரசு கடந்த சில மாதங்களாக விளையாட்டு துறை மீது அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெற்றது. உலக அளவில் இப்படி ஒரு செஸ் ஒலிம்பியாட் நடந்தது இல்லை என்று மெச்சும் அளவிற்கு மிக பிரம்மாண்டமாக இந்த தொடர் நடைபெற்றது. அதன்பின் மகளிர் டென்னிஸ் சென்னை ஓபன் நடைபெற்றது.
இப்படி தமிழ்நாடு அரசு விளையாட்டு போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு வீரர்களை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் தயார் செய்யும் திட்டங்களை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது. மேலும் உலக அளவில் தமிழ்நாட்டை விளையாட்டிற்கான இருப்பிடமாக மாற்றும் திட்டத்திலும் தமிழ்நாடு அரசு களமிறங்கி உள்ளது. இதற்காக விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்தையும் அரசு கையில் எடுத்துள்ளது.
இதற்காக செம்மஞ்சேரியில் 105 ஏக்கரில் விளையாட்டு நகரம் அமைய உள்ளது. தொழில்நுட்ப - பொருளாதார சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரி உள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்.
ஏன் விளையாட்டு நகரம்: சர்வதேச போட்டிகளை நடத்தும் விதமாகவும், சர்வதேச அளவில் தமிழ்நாடு வீரர்களை தயார் செய்யும் விதமாகவும் இந்த நகரம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமானம் விரைவில் தொடங்க உள்ளது.
இந்த நிலையில்தான் தற்போது இந்த விளையாட்டு நகரத்தின் மாதிரி புகைப்படம் வெளியாகி உள்ளது. சர்வதேச நாடுகளில் இருப்பது போன்ற பிரம்மாண்ட விளையாட்டு அரங்கத்தின் புகைப்படம் வெளியாகி உள்ளது மிகப்பெரிய முகப்பு அரங்கு இதில் அமைக்கப்பட்டு உள்ளது. நான்கு கால்பந்து அரங்குகளும் இதில் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் 4 டென்னிஸ் கோர்ட்கள் இங்கே அமைக்கப்பட்டு உள்ளன.
விளையாட்டு அரங்குகள்: உள் விளையாட்டு அரங்குகளும் அமைக்கப்பட்டு உள்ளன. அதற்காக தனியாக மிகப்பெரிய அரங்கு இங்கே உருவாக்கப்பட்டு உள்ளது. தடகள போட்டிகளுக்கான அரங்கு தனியாக இன்னொரு இடத்தில் வைக்கப்பட்டு உள்ளன. மற்ற விளையாட்டு அரங்குகள் முகப்பு பகுதிக்கு பின்பாக அமைக்கப்பட்டு உள்ளன. தொடக்க விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தும் அரங்குகளும் இங்கேயே அமைக்கும்படி வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதன் மாதிரி படம்தான் தற்போது வெளியாகி உள்ளது.
இதில் மிகப்பெரிய அளவில் பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. பார்க்கவே வியக்க வைக்கும் வகையில் இந்த மாதிரி படம் உள்ளது. இதை பகிர்ந்து, இது அடுத்த ஒலிம்பிக் நடக்கப்போகும் இடமல்ல! அடுத்த ஆசிய போட்டிகள் நடக்கவிருக்கும் இடமுமல்ல! தமிழ்நாட்டில் அமையவுள்ள விளையாட்டு நகர அமைப்பின் படம் என்று இந்த ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டு உள்ளது. இங்கே ஒலிம்பிக் போட்டிகள் நடந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications