அமைச்சராக சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் கன்னிப் பேச்சு.. என்ன சொன்னார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கபடி மற்றும் சிலம்பம் ஆகிய விளையாட்டுகளை உள்ளடக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட மற்றும் மாநில அளவில் ஜூன் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் கூறியுள்ளார். அமைச்சாரன பின்னர் முதன் முறையாக சட்டசபையில் கேள்வி நேரத்தில் பதில் அளித்துள்ளார் உதயநிதி.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் திருப்பூரில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா என திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் கேள்வி எழுப்பினார். அப்படி உள்ளது என்றால் எப்போது என்றும் அவர் வினவினார்.

Sports competitions for the Chief Ministers Cup Minister Udhayanidhis first answer in the Assembly

திருப்பூரில் திறந்த வெளி விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி கூடம், 400 மீட்டர் தடகள ஓடு பாதை, கால்பந்து மைதானம், டென்னிஸ் மைதானம், வாலிபால், கூடைப்பந்து மைதானங்கள் ஆகிய ஆடுகட வசதிகள் அடங்கிய விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

அதே போல நவீன விளையாட்டு அரங்கத்திற்கான கட்டுமான பணிகள் பொதுப்பணித்துறையால் கடந்த 2021 நவம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. சுமார் 60 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளன. 2023ஆண்டுக்குள் பார்வையாளர் மாடம், ஆடுகள பணிகள் முழுமையாக நிறைவடையும் என்றும் பதில் அளித்தார்.

அத்துடன் கபடி மற்றும் சிலம்பம் ஆகிய விளையாட்டுகளை உள்ளடக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட மற்றும் மாநில அளவில் ஜூன் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என்றும் சட்டசபையில் உறுதியளித்தார். அமைச்சரான பின்னர் முதன் முறையாக சட்டசபையில் இன்றைய கேள்வி நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை நடத்தவும், மொத்த பரிசுத்தொகை ரூ. 25 கோடி உட்பட, ரூ. 47.05 கோடி நிதி ஒதுக்கீடு செய்யும் அரசாணையில் முதல் கையெழுத்திட்டார். அதன்படி www.sdat.tn.gov.in இணையதளத்தின் மூலம் இதுவரை பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் தமிழ்நாட்டில் பணிபுரியும் ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்களிடம் இருந்து 1,21,686 முன்பதிவுகள் வரப்பெற்றுள்ளன. தனி நபர் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் குழுவினரின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு முதல் பரிசாக ரூ. 6 லட்சம் முதல் ரூ. 9 லட்சம் வரை வழங்கப்படும். இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும்.

தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணவர்களுக்கும், 15 வயது முதல் 35 வரை பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு மற்றும் அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், தமிழ்நாட்டில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள் ஆகியோருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

முன்பதிவு செய்திட கடைசி நாள் வரும் 17ம் தேதி ஆகும். எனவே விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் தவறாமல் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலமும், தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் மாவட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514 000 777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இன்றைய தினம் சட்டசபையிலும் கேள்வி நேரத்தில் பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின், கபடி மற்றும் சிலம்பம் ஆகிய விளையாட்டுகளை உள்ளடக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட மற்றும் மாநில அளவில் ஜூன் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+