Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கையில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்க லைசென்ஸ்- சீனா ஆதரவு டக்ளஸ் தேவானந்தா கடும் எதிர்ப்பு

தமிழ்நாட்டு மீனவர்களுக்கு மீன்பிடிக்க லைசென்ஸ் தர இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கையில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்க லைசென்ஸ் வழங்கும் நடைமுறைக்கு இலங்கை அமைச்சரும் சீனா ஆதரவாளருமான டக்ளஸ் தேவானந்தா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இந்திய கடல் எல்லைக்குள் ஊடுருவியே தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை, நாகை மீனவர்களை கோடியக்கரை கடற்பரப்புக்குள் நுழைந்து இலங்கை கடற்படையினர் தாக்கி உள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம் அனுப்பி உள்ளார். இந்தியாவுக்கான இலங்கை தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருந்தார்.

Srilankan Minister Douglas Devananda opposes to paid licence for Tamilnadu fishermen

இதனிடையே இலங்கை கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு லைசென்ஸ் வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக இலங்கை நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படது. உரிய கட்டணம் செலுத்தி லைசென்ஸ் வழங்கப்படும்; இந்த கட்டணம் இலங்கை தமிழ் மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே விரைவில் இந்தியா வருகை தர உள்ளார். அப்போது இது தொடரர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகக் கூடும் எனவும் கூறப்பட்டது. இலங்கைக்கு அண்மையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பயணம் மேற்கொன்டார். அப்போதும் இந்த தகவல் ஊடகங்களில் வெளியானது.

ஆனால் இலங்கை அமைச்சரும் சீனாவின் ஆதரவாளருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு லைசென்ஸ் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரின் கீழ் செயல்படும் ஈழத் தமிழ் மீனவர் அமைப்புகளும் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக பிபிசி ஊடகத்துக்குப் பேட்டியளித்த டக்ளஸ் தேவானந்தா, தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்து பின்னர் விடுவிப்பது, படகுகளை பறிமுதல் செய்வது என்கிற நடைமுறை தொடரவே செய்யும். ரணிலின் இந்திய பயணத்தின் போது இப்படியான ஒப்பந்தம் கையெழுத்தாகாது. இலங்கை கடல்வளத்துக்கு பாதிப்பு தரக் கூடிய எதனையும் செய்யமாட்டோம் என்றார்.

Srilankan Minister Douglas Devananda opposes to paid licence for Tamilnadu fishermen

முன்னதாக இலங்கை மன்னார் மாவட்ட மீனவர் பிரதிநிதி ஆலம் கூறுகையில் தற்போது தமிழ்நாட்டு மீனவர்கள் குறித்து ஆலம் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதிக்கவே முடியாது. தமிழ்நாட்டு மீனவர்களிடம் இருந்து இதுவரை எந்த ஒரு பணத்தையும் ஈழத் தமிழ் மீனவர்களுக்கு பெறுத்தரவே இல்லை. இதுவரை தமிழ்நாட்டில் இருந்து அரிசிதான் வந்துள்ளது. இலங்கை கடற்பரப்புக்குள் தமிழ்நாட்டு மீனவர்களை அனுமதித்தால் நிச்சயம் ஈழத் தமிழ் மீனவர்களுக்குதான் பேரிழப்பு ஏற்படும். இதுவரையில் தமிழ்நாட்டு மீனவர்களால் ஏற்பட்ட பேரிழப்புக்கு என்ன நிவாரணம் கிடைத்தது? அப்படி எதுவுமே தராத போது தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைக்குள் அனுமதிப்பது யாருடைய நன்மைக்கானது?
இலங்கை கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்களை அனுமதித்தால் கடற்பரப்பு மட்டுமல்ல நிலப்பரப்பையும் இந்தியாவிடம் இலங்கை இழந்துவிடும். இலங்கை நாட்டில் தற்போது மலேரியா தொற்று பாதிப்பு இல்லை. ஆனால் தமிழ்நாட்டு மீனவர்களை அனுமதித்தால் மலேரியா தொற்று பாதிப்பு வரும். ஆகையால் தமிழ்நாட்டு மீனவர்களுடன் பேச்சுவார்த்தையும் இல்லை; தமிழ்நாட்டு மீனவர்களை அனுமதிக்கவும் கூடாது. கச்சத்தீவு தொடர்பாக எந்த ஒரு பேச்சையுமே நாங்கள் விரும்பவும் இல்லை என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+