Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இளையராஜாவுக்கு நடந்தது என்ன? இந்து அறநிலையத்துறை விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சென்றபோது இசைஞானி இளையராஜாவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து இந்து அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது. அர்த்த மண்டபத்திற்குள் மற்றவர் செல்லும் வழக்கமில்லை என்றும், அர்த்த மண்டபம் வரை அர்ச்சகர், பரிசாரகர், மடாதிபதிகள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்றும், இந்த விளக்கத்தை ஏற்று அர்த்த மண்டபத்திற்கு முன்பு இருந்து இளையராஜா தரிசித்தார் என்று இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பிரசித்தி பெற்றது. மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் ஆண்டாள் கோவிலில் இன்று காலை திவ்ய பாசுரம் என்ற பெயரில் இசை நிகழ்ச்சி, நாட்டியஞ்சலி நடைபெற்றது. இதில் இசைஞானி இளையராஜா இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

ilayaraja srivilliputhur andal temple

அப்போது அவரை அர்த்த மண்டபத்துக்கு அனுமதிக்கவில்லை என்று சர்ச்சை பரவியது. மேலும் அர்த்த மண்டபமும் கருவறை போன்றது என்றும், இளையராஜா தவறுதலாக நுழைந்ததால் உடனே கோவில் நிர்வாகம் அவரிடம் எடுத்து கூறியது என்றும், இதன் பிறகு அவரே வெளியில் நின்று தரிசனம் செய்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சென்றபோது இசைஞானி இளையராஜாவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து இந்து அறநிலையத்துறை விருதுநகர் மாவட்ட நிர்வாகத்துக்கு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம் மற்றும் நகர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயிலுக்கு 15.12.2024 அன்று இசையமைப்பாளர் திரு.இளையராஜா அவர்கள் வருகை புரிந்ததன்பேரில், 16.12.2024 முதல் ஊடகங்களில் வரும் செய்தி குறித்து மேற்படித் திருக்கோயில் செயல் அலுவலர் பார்வை 2-ன் மூலம் பின்வருமாறு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 46(iii)- ன் கீழ் உள்ள திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயிலானது முதல் நிலை செயல் அலுவலர் மற்றும் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட அறங்காவலர் குழு கூட்டுப் பொறுப்பில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.

பார்வை 2- காணும் குறிப்பில், 15.12.2024 அன்று இத்திருக்கோயிலுக்கு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மற்றும் இசையமைப்பாளர் திரு.இளையராஜா அவர்கள் சுவாமி தரிசனத்திற்கு திருக்கோயிலுக்கு வருகை புரிந்தனர் என்றும், இத்திருக்கோயிலில் ஆண்டான் ரெங்கமன்னார், கருடாழ்வார், மூலவர் கருவறையிலும், கருவறையினை அடுத்த அர்த்த மண்டத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் உற்சவரும் எழுந்தருளியுள்ளனர்.

எனவே, இத்திருக்கோயில் மரபு படியும், பழக்க வழக்கபடியும் அர்த்த மண்டபம் வரை திருக்கோயிலின் அர்ச்சகர், பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை என்றும் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

15.12.2024 அன்று இசையமைப்பாளர் திரு. இளையராஜா அவர்கள் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் உடன் வருகை புரிந்த போது அவருடன் இணைந்து அர்த்த மண்டப வாசல் படி ஏறிய போது உடன் இருந்த ஜீயர் சுவாமிகள் மற்றும் திருக்கோயில் மணியம் அர்த்த மண்டபம் முன்பு இருந்து சாமி தரிசனம் செய்யலாம் என கூறிய உடன் அவரும், ஒப்புக் கொண்டு அர்த்த மண்டபத்தின் முன்பு இருந்து சுவாமி தரிசனம் செய்தார் என்றும், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மட்டும் அர்த்த மண்டபத்தின் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்தார் என்ற விவரம் பணிவுடன் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+