ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம்
சென்னை: தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. தேர்தல் களமும் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.. இப்படிப்பட்ட சூழலில் ஆளுங்கட்சியான திமுகவிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் தலைநகர் சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் அரசியல் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன... போஸ்டர் விவகாரத்தில் என்ன நடக்கிறது? இதுகுறித்த பிரத்யேக தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன..!!
சென்னை மாநகரின் முக்கியப் பகுதிகளான கோயம்பேடு, வடபழனி மற்றும் வளசரவாக்கம் போன்ற இடங்களில் இன்று அதிகாலை முதலே தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன..

அந்தப் போஸ்டர்களில், "வார்த்தைக்கு வார்த்தை சமூகநீதியைக் காப்பாற்றுவேன் என்று சொல்லி ஆட்சியை பிடித்த ஸ்டாலின் அவர்களே, கடந்த 5 ஆண்டுகளில் தென் தமிழகத்தில் சாதி ரீதியாக நடைபெறும் படுகொலைகளைத் தடுக்கத் தவறியது ஏன்?" என்ற நேரடியான கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.. இது முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான ஒரு வெளிப்படையான போஸ்டர் யுத்தமாகவே பார்க்கப்படுகிறது ..
நாடார் சமூகத்தினரின் நீண்டகால அதிருப்தி
திமுக ஆட்சியில் சாதி ரீதியிலான மோதல்களும், படுகொலைகளும் அதிகரித்து வருவதாக நாடார் சமூக அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.. குறிப்பாக தென் தமிழகத்தில் நாடார்களுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்படும் வன்முறைகளைத் தடுக்க அரசு போதிய அக்கறை காட்டவில்லை என்பது அவர்களின் முக்கியப் புகாராக இருந்து வருகிறது..

மேலும், சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நாடார் இன மக்களுக்கு உரியப் பிரதிநிதித்துவமும், பாதுகாப்பும் இந்த ஆட்சியில் வழங்கப்படவில்லை என்கிற ஆதங்கம் அந்த சமூக மக்களிடையே நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.. தேர்தல் நெருங்கும் இந்த சூழலில், தங்கள் அதிருப்தியைப் பகிரங்கப்படுத்தும் விதமாகவே இந்த செயலில் அவர்கள் இறங்கியுள்ளாக தெரிகிறது.
உளவுத்துறையின் அலர்ட்
தலைநகரின் முக்கியமான இடங்களில் முதல்வருக்கு எதிராக இத்தகைய போஸ்டர்கள் ஒட்டப்பட்டது மாநில உளவுத்துறையின் கவனத்திற்கு உடனே சென்றுள்ளது.. இதனை தொடர்ந்து, உடனடியாக தலையிட்ட அரசுத் தரப்பு, இந்த போஸ்டர் விவகாரத்தின் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து விசாரிக்க உளவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது..
குறிப்பாக, தமிழ்நாடு நாடார் சங்கத்தின் இந்த போராட்டத்திற்கு பின்னால் எதிர்க்கட்சியான அதிமுகவின் தூண்டுதல் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்தும் தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.. ஒருவேளை இது திட்டமிட்ட அரசியல் சதித்திட்டமாக இருக்குமோ என்கிற கோணத்திலும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாம்.. இதுதான் தற்போதைய ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது..

ஆளுங்கட்சிக்கு சறுக்கல்?
ஜனநாயகத்தில் போஸ்டர் மூலம் எதிர்ப்பு தெரிவிப்பது ஒரு வழிமுறை என்றாலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ஒட்டுமொத்தமாக அரசுக்கு எதிராக திரும்புவது ஆளுங்கட்சிக்கு சற்று சறுக்கலாகவே அமையும்..
அதிலும் சமூகநீதி பேசும் ஒரு அரசு, அனைத்து சமூகங்களுக்கும் பாதுகாப்பு உணர்வை வழங்க வேண்டியது அவசியமாகும்.. தென் தமிழகத்தின் வாக்கு வங்கி அரசியலில் நாடார் சமூகத்தின் பங்கு மிக முக்கியமானது என்பதால், இந்த விவகாரத்தை சாதாரணமாக கடந்து செல்லாமல், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலிப்பதே ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும்..
அதே சமயம், இதுபோன்ற போராட்டங்கள் உண்மையான ஆதங்கமா அல்லது தேர்தலுக்காகத் தூண்டிவிடப்பட்ட அரசியலா என்பதையும் உற்றுநோக்க வேண்டிய கட்டாயம் உள்ளது... அதைத்தான் அரசு தற்போது முடுக்கி விட்டுள்ளதாக தெரிகிறது...!!
- சிறப்பு நிபுணர் எழில்
-
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
இன்றே கடைசி.. கடையை மூடும் தேர்தல் ஆணையம்! 2026ல் ஓட்டுப் போட முடியாது? என்ன செய்ய வேண்டும்? -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி!












Click it and Unblock the Notifications