மயிரிழையில் உயிர் தப்பிய சந்திரசேகர் ஆசாத்.. கொலைவெறி தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்த ஸ்டாலின்!
சென்னை: உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கியமான அரசியல் செயற்பாட்டாளர் சந்திரசேகர் ஆசாத். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு பீம் ஆர்மி என்ற தலித் உரிமைகள் அமைப்பைத் தொடங்கி, இந்த அமைப்பின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். ஆசாத் சமாஜ் கட்சி - கன்ஷிராம் என்ற கட்சியின் தேசிய தலைவராகவும் உள்ளார் சந்திரசேகர் ஆசாத்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களில் சந்திரசேகர் ஆசாத் தலைமையிலான பீம் ஆர்மி அமைப்பு பங்கேற்றது. சந்திரசேகர் ஆசாத் மீது பல்வேறு வழக்குகளும் உள்ளன. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதாகி தற்போது ஜாமினில் வெளியே உள்ளார் ஆசாத்.
இந்நிலையில், கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டு நிகழ்வில் பங்கேற்றுவிட்டு காரில் வீடு திரும்பும் வழியில் தியோபந்த் பகுதியில் மர்ம நபர்கள் சந்திரசேகர ஆசாத்தின் காரை நோக்கி சுட்டுள்ளனர். இரண்டு தோட்டாக்கள் பாய்ந்த நிலையில், சந்திரசேகர் ஆசாத்தின் வயிற்றில் ஒரு குண்டு பாய்ந்துள்ளது. மற்றொன்று காரின் பின் கதவில் பாய்ந்தது.

இந்த தாக்குதல் குறித்து பீம் ஆர்மி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சந்திரசேகர் ஆசாத் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதல், பகுஜன் மிஷன் இயக்கத்தைத் தடுத்து நிறுத்தும் கோழைத்தனமான செயல். குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைவாகக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சந்திரசேகர் ஆசாத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சந்திரசேகர் ஆசாத், உடனடியாக தியோபந்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சஹாரன்பூர் சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், சந்திரசேகர் ஆசாத் மீதான துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவத்தைக் வன்மையாகக் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.
இந்த வன்முறை சம்பவம் உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை அம்பலப்படுத்துகிறது. சந்திரசேகர் ஆசாத் விரைவில் குணமடைய வாழ்த்துவதுடன், இந்தக் கோழைத்தனமான தாக்குதலுக்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்" என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications