தூய்மை பணியாளர்களுக்கு சூப்பர் திட்டம்.. 3 வேளையும் இலவச உணவு! முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
சென்னை: சென்னையில் தாய்மை பணியாளர்களுக்கு 3 வேளைகளும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை வரும் 15 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக சென்னை மாநகராட்சி சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் நலன் கருதி, அவர்களுக்கு மூன்று வேளையும் கட்டணமில்லா உணவு வழங்கும் திட்டத்தை முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு 3 ஆண்டு காலத்திற்கு 3 வேளை இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு ரூ.186 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் 14.08.2025 அன்று நடைப்பெற்ற அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கப்படுவது முக்கிய இடம் பெற்றது.
தூய்மைப் பணியாளர்கள் தங்களது பணியை அதிகாலையில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், காலை உணவு சமைப்பதற்கும், அதை பணிபுரியும் இடத்திற்கு கொண்டு வந்து அருந்துவதற்கும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வாக நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புக்களால் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேற்காணும் இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் பொருட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களுக்கு மூன்று ஆண்டு காலத்திற்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்குவதற்கான செயற்குறிப்பினை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அரசிற்கு அனுப்பியுள்ளார். போக்குவரத்து மற்றும் டிபன் கேரியர் உணவு விநியோகம் உட்பட உணவுக்கான செலவின விவரங்களையும் தெரிவித்தார்.
தூய்மை பணியாளர்களுக்கு தினசரி 3 வேளை உணவு, மாநகராட்சியின் உணவகங்கள் மூலம் வழங்கப்படும். காலை உணவில் இட்லி, போன்றவை, மதியம் ரசம், சாம்பார், கூட்டு. இரவு சப்பாத்தி அல்லது ரொட்டி உள்ளிட்டவை அடங்கும். இந்த உணவுகள், ஊட்டச்சத்து நிறைந்தவையாக இருக்கும்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை கல்விக்கும், மருத்துவத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கல்வி நிலையங்களின் கட்டடங்கள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பணிகள் முடுக்கி விடப்படுகின்றன.
பள்ளிகளின் கல்வித் தரமும் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமுதாய நலக் கூடங்களை மேம்படுத்துவதற்கு பொதுமக்கள் தொடர் கோரிக்கைகள் முன்வைத்து வருகின்றனர். இதுபற்றி பரிசீலனை செய்து சமுதாய நலக் கூடங்களை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக துறைமுகத்தில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பில் கட்டடப் பணிகள் நடக்கின்றன.
கீழ் தளத்தில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பிரத்யேக பார்க்கிங் வசதி செய்யப்படுகிறது. முதல் தளத்தில் டைனிங் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பந்தியில் ஒரே சமயத்தில் 600 பேர் அமர முடியும். இரண்டாம் தளத்தில் கல்யாண மண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் மணமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் தங்கும் வகையில் 8 அறைகள் அமைக்கப்படுகின்றன. வரும் டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிவடைந்து விடும்.
இதேபோல் கொளத்தூர் தொகுதியிலும் சமுதாய நலக்கூடப் பணிகள் நடந்து வருகின்றன. இது ஜனவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். ஒட்டுமொத்தமாக 180 கோடி ரூபாய் மதிப்பில் 16 சமுதாய நலக் கூடப் பணிகள் நடந்து வருகின்றன. வடசென்னைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 11 சமுதாய நலக் கூடப் பணிகள் நடக்கின்றன.
தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் வரும் 15ஆம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் சிறப்பு வாய்ந்த திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. தூய்மை பணியாளர்கள் மத்தியில் இந்த திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எத்தனையோ நாட்கள் சாப்பிடாமல் பல மணி நேரம் தொடர்ந்து வேலை செய்வதை பார்க்க முடிகிறது. அவர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இந்த திட்டம் இருக்கும். 3 வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தின் மூலம் 31,373 தூய்மை பணியாளர்கள் பயன்பெறுவார்கள்" என்று தெரிவித்தார்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம்












Click it and Unblock the Notifications