ஒரே நாளில் சென்னையில் இன்று இரு நிகழ்வு.. 644 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் இன்று 22ம் தேதி வெள்ளிக்கிழமை, 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது. அதேபோல ஏ.ஜெ.எஸ். நிதி மேல்நிலைப்பள்ளியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம் 23-ந்தேதி நடைபெற உள்ளது. மேற்கண்ட இரு நிகழ்வுகள் குறித்தும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் இன்று (22.08.2025) 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் இன்று (22.08.2025) திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-11ல் எல்லையம்மன்கோயில் தெருவில் உள்ள ஶ்ரீராம் தயாள் கேம்கா விவேகானந்தா வித்யாலயா ஜூனியர் கல்லூரி, மணலி மண்டலம் (மண்டலம்-2), வார்டு-21ல் பாடசாலை தெருவில் உள்ள ஜெயம் மஹால், மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-30ல் கொளத்தூர், கல்பாளையம் லட்சுமிபுரம், பெரம்பூர் ரெட்ஹில்ஸ் நெடுஞ்சாலையில் உள்ள ஶ்ரீசெல்வலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
உங்களுடன் ஸ்டாலின்
அதேபோல, தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4), வார்டு-39ல் புதுவண்ணாரப்பேட்டை, செரியன் நகரில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி மைதானம், திரு.வி.க.நகர்மண்டலம் (மண்டலம்-6), வார்டு-71ல் பெரம்பூர், பள்ளி சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-88ல் பாடி, டி.வி.எஸ். நகர் 2வது தெருவில் உள்ள அன்னை மண்டபத்தில் நடைபெறுகிறது.
அண்ணாநகர் மண்டலம் (மண்டலம்-8), வார்டு-108ல் சேத்துப்பட்டு, மேயர் ராமநாதன் சாலையில் உள்ள மாநகராட்சி வவிளையாட்டுத் திடல், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-118ல் இராயப்பேட்டை, ஶ்ரீநிவாச பெருமாள் சன்னதி தெருவில் உள்ள மாநகராட்சி சமுதாயக் கூடம், வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்-11), வார்டு-146ல் மதுரவாயல், பி.எச். சாலையில் உள்ள சீதாலட்சுமி திருமண மண்டபம், ஆலந்தூர் மண்டலம் (மண்டலம்-12), வார்டு-159ல் மீனம்பாக்கம், காமராஜர் சாலையில் உள்ள ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளி, சோழிங்கநல்லூர் மண்டலம் (மண்டலம்-15), வார்டு-195ல் துரைப்பாக்கம், ஏலீம் மெட்ரிகுலேசன் பள்ளி ஆகிய 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்
அதேபோல, ஏ.ஜெ.எஸ். நிதி மேல்நிலைப்பள்ளியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம் 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதுகுறத்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
"தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி வைக்கும் விதமாக, 02.08.20025 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியில் முதல் மருத்துவ முகாமினை தேனாம்பேட்டை மண்டலம், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேலும் 14 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில்,
23.08.2025 அன்று (சனிக்கிழமை) ஆலந்தூர் மண்டலம், ஏ.ஜெ.எஸ். நிதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த மருத்துவ முகாம்கள் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
சிகிச்சைகள் என்னென்ன
இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதயவில் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம், இந்தியமுறை மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம் மற்றும் ஸ்கேன் பரிசோதனை ஆகிய 17 சிறப்பு மருத்துவர்களின் மருத்துவ ஆலோசனைகள், அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவப் பரிசோதனை, முழுமையான உடல் ஆரோக்கிய பரிசோதனை, காசநோய், தொழுநோய் பரிசோதனை, ஆரம்ப புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை ஆகிய மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது.
அமைப்புசாரா தொழிலாளர்கள்
மேலும், முதல்-அமைச்சரின் விரிவாக மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்குதல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்துவிழிப்புணர்வு பிரச்சாரம் போன்ற இணைச் சேவைகளும் வழங்கப்படுகிறது.
ஆலந்தூர் மண்டலத்தில் வரும் 23-ந்தேதி நடைபெற உள்ள 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் 644 பேர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் இன்று வழங்குகிறார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் இன்று (22.08.2025) வெள்ளிக்கிழமை காலை 10.15 மணியளவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 182 உதவி மருத்துவ அலுவலர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 48 பல் மருத்துவர்கள், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 324 அறுவை அரங்கு உதவியாளர்கள், தமிழ்நாடு சுகாதார போக்குவரத்து துறைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு திறன்மிகு உதவியாளர் நிலை-2 மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககததிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 18 உளவியல் உதவி பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ உளவியலாளர்கள், மருந்து கட்டுப்பாடு இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 17 மருந்துகள் ஆய்வாளர்கள், குடும்ப நல இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 54 வட்டார சுகாதார புள்ளியிலாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட மொத்தம் 644 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications