துணைவேந்தர் தேடுதல் குழுவை இனி ஆளுநரே நியமிப்பார்.. மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.. UGC ஷாக்
சென்னை: துணைவேந்தர் தேடுதல் குழுவை இனி ஆளுநரே நியமிப்பார் என்ற புதிய உத்தரவை UGC பிறப்பித்து உள்ளது. பல்கலைக்கழக தேர்வாணையமான யூ.ஜி.சியின் இந்த அறிவிப்பு கடுமையான விமர்சனங்களை விவாதங்களை சந்தித்து உள்ளது. இதனால் மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவிக்கும், ஆளும் திமுக தரப்பிற்கும் பல்வேறு விவகாரத்தில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. தொடக்கத்தில் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி ஏற்றுக்கொள்ளாதது இரண்டு தரப்பு மோதலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு இருப்பதும் கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது.

இந்த நிலையில்தான் சமீபத்தில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்ந்தெடுக்க, தமிழ்நாடு ஆளுநர் ரவி அமைத்த குழு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மீண்டும் சர்ச்சை: அதன்படி சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைத்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் எதிர்ப்பை மீறி யுஜிசி சார்பில் உறுப்பினரையும் இந்தக் குழுக்களில் சேர்த்து ஆளுநர் ரவி நியமித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. 3 பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமனம் செய்ய கமிட்டி அமைத்து ஆளுநர் ஆர்என் ரவி உத்தரவிட்டார். ஒவ்வொரு பல்கலைக்கழகங்களுக்கும் தலா நான்கு உறுப்பினர்களை கொண்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் முதல் முறையாக யுஜிசியின் பிரதிநிதி துணை வேந்தர்கள் நியமன தேர்வு குழுவில் இடம்பெற்றுள்ளனர். பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்யும் தேடுதல் குழுவில் யுஜிசி உறுப்பினர்கள் கட்டாயம் இல்லை என தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது தமிழக அரசின் எதிர்ப்பை மீறி, தேர்வு குழுவில் யுஜிசியின் பிரதிநிதியை நியமித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களுக்காக துணைவேந்தர் பணியிடங்களுக்கு மூவரது பெயரை பரிந்துரைக்க வேண்டும் என்று ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில்தான் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்ந்தெடுக்க, தமிழ்நாடு ஆளுநர் ரவி அமைத்த குழுவை மாற்றி அமைத்து தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. துணைவேந்தர் தேர்வுக்கு ஏற்கனவே ஆளுநர் ரவி குழு அமைத்த நிலையில், தற்போது புதிய குழு அமைத்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
உத்தரவு; இப்படிப்பட்ட நிலையில்தான் துணைவேந்தர் தேடுதல் குழுவை இனி ஆளுநரே நியமிப்பார் என்ற புதிய உத்தரவை UGC பிறப்பித்து உள்ளது. பல்கலைக்கழக தேர்வாணையமான யூ.ஜி.சியின் இந்த அறிவிப்பு கடுமையான விமர்சனங்களை விவாதங்களை சந்தித்து உள்ளது. இதனால் மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என்று UGC வெளியிட்டுள்ள புதிய விதிகளின் வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தலைவராக ஆளுநர் பரிந்துரைப்பவரும், உறுப்பினராக யூஜிசி பரிந்துரைப்பவரும் இருப்பார்கள் என்று புதிய விதி அறிவித்து உள்ளது. மற்றொரு உறுப்பினராக பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவர் இருப்பார்.
இந்த மாற்றப்பட்ட விதிமுறையால் மாநில அரசு பரிந்துரைக்கும் உறுப்பினர் இனி இடம்பெற முடியாது. இதனால் மாநில அரசுகளின் அங்கீகாரம் முழுமையாக பறிக்கப்படும்.












Click it and Unblock the Notifications