தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரியும் மாநிலங்களுக்கான நிதி பகிர்வை பட்ஜெட்டில் உயர்த்தாத மத்திய அரசு!
சென்னை: மாநிலங்களுக்கான நிதி பகிர்வு 41 சதவீதமாகவே தொடரும் என்றும் அந்த வகையில் மாநிலங்களுக்கு ரூ 1.4 லட்சம் கோடி விடுவிக்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மாநிலங்களுக்கான நிதி பகிர்வு 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது.

2026- 2027 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா உரையாற்றி வருகிறார். அவர் கூறுகையில் 3 முக்கிய காரியங்களை மையமாக கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.
தனது உரையில் புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மாநிலங்களுக்கான நிதி பகிர்வு 41 சதவீதமாகவே தொடரும் என்றும் அந்த வகையில் மாநிலங்களுக்கு ரூ 1.4 லட்சம் கோடி விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சென்னையில் நடந்த தமிழகத்திற்கான நிதிப் பகிர்வு தொடர்பாக நிதி குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், முக்கிய திட்டங்களை தீட்டி அதனை நிறைவேற்றுவது என்பது மாநில அரசின் கையில்தான் உள்ளது.
வரி பகிர்வு முறையாக வழங்காத காரணத்தால் மாநிலங்களுக்கு சுமை அதிகரித்துள்ளது. கூட்டாட்சி தத்துவம் மூலம் மாநிலங்கள் தங்கள் தேவையை நிறைவேற்றிக் கொள்கின்றன.
சுகாதாரம், கல்வி, வேளாண்மை போன்ற திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. போதிய அளவு நிதியை மத்திய அரசு ஒதுக்காததால் தமிழகத்தின் நிதிநிலைமை பாதிக்கப்பட்டுள்ளது.
வரி பகிர்வு அடிப்படையில் தமிழகத்திற்கு நிதி வழங்க வேண்டும். ஆனால் மத்திய அரசு குறைந்த அளவு நிதி வழங்கி வருகிறது. 41 சதவீதம் நிதி பகிர்வு வழங்க வேண்டும் என்றாலும் தமிழகத்திற்கு 33.16சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் தமிழகத்திற்கான வரி பகிர்வு என்பது தொடர்ந்து வீழ்ந்து வருகிறது. எனவே மாநிலங்களுக்கான நிதி பகிர்வை 50 சதவீதமாக மத்திய அரசு உயர்த்த வேண்டும். கடந்த 45 ஆண்டுகளாக உள்ள வரி பகிர்வு முறையில் மாநிலங்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதால் 50 சதவீதம் வரி பகிர்வை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அது போல் இன்றைய தினம் காலையில் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டியவை என்பது குறித்த சமூகவலைதள பதிவில் முதல்வர் ஸ்டாலின் 50 சதவீத வரி பகிர்வு குறித்து நினைவூட்டியும் தற்போதைய பட்ஜெட்டில் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications