இந்தியாவுக்கு தெற்கு ரொம்ப முக்கியம்.. ஜிடிபியில் இவ்வளவு பங்களிப்பா? வெளியானது அசத்தல் டேட்டா
சென்னை: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சர்வதேச அளவில் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது. இப்படி இருக்கையில், இந்த வளர்ச்சிக்கு தென் மாநிலங்களின் பங்கு இன்றியமையாததாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.
ஒவ்வொரு நாட்டிற்கும் ஜிடிபி வளர்ச்சி என்பது மிக முக்கியமானது. இதுதான் சர்வதேச அளவில் அந்நாட்டிற்கான அங்கீகாரத்தையும், அதன் குரலையும் பிரதிபலிக்க உதவும். அந்தவகையில் இந்தியா இப்போது சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் வரிசையில் 5வது இடத்தில் இருக்கிறது. ஆனால் இந்த வளர்ச்சியை மத்திய அரசால் தனியாக சாதித்துவிட முடியவில்லை. இதற்கு பின்னால் மாநிலங்களின் பங்களிப்பு இருக்கிறது.

இந்த வளர்ச்சியை மேலும் அதிகரிக்க மத்திய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. இதற்காக சில சிறப்பு திட்டங்களும் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன.
வளர்ச்சிக்காக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், அதனால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஒவ்வொரு 10 ஆண்டும் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு, ஆய்வு செய்து அதை அறிக்கையாக மத்திய அரசுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில், 1960-61 முதல் 2023-24 வரையிலான மாற்றங்களை இக்குழு தற்போது தொகுத்த வழங்கியிருக்கிறது. இதில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தென் மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் பங்களிப்பை கொடுத்திருக்கின்றன என்பது தெரிய வந்திருக்கிறது.
இந்த அறிக்கையில், "கடந்த 1991க்கு முன்பு வரை தென் மாநிலங்கள் எதிர்பார்த்த வளர்ச்சியை காட்டவில்லை. ஆனால், 1991க்கு பிறக்கு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் முக்கிய பங்கை வகித்து வருகின்றன. 2023-24 ஆம் ஆண்டில், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 30 சதவிகித பங்களிப்பை அளித்திருக்கின்றன.
அனைத்து தென் மாநிலங்களின் தனிநபர் வருமானம் 1991க்குப் பிறகு தேசிய சராசரியை விட அதிகமாகியுள்ளது. தெலங்கானா மக்களின் தனிநபர் வருமான தேசிய சராசரி வருமானத்தை விட 193.6 சதவிகிதம் அதிகம். கர்நாடகாவில் இது 181 சதவிகிதமாகவும், தமிழ்நாட்டில் இது 171 சதவிகிதமாகவும், கேரளவில் 152.5 சதவிகிதமாகவும் இருக்கிறது.
கர்நாடகா: மாநில வாரியான வளர்ச்சியை தனித்தனியாக எடுத்துக்கொண்டால், 1991க்கு பிறகு கர்நாடகாவின் வளர்ச்சி அபாரமாக இருந்திருக்கிறது. கடந்த 1960-61ல் கர்நாடக மாநிலத்தின் ஜிடிபி 5.4% ஆக இருந்தது. 1990-91 வரை கூட இதே நிலையில்தான் இருந்தது. ஆனால், இதற்கடுத்து எட்டிய வளர்ச்சிதான் அபாரமாக இருந்தது. 2000-01ம் ஆண்ல் கர்நாடகாவில் ஜிடிபி 6.2% ஆக இருந்தது. 2023-24ல் இது 8.2% என வளர்ந்திருக்கிறது.
ஆந்திரா & தெலங்கானா: ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் வளர்ச்சியும் ஏறத்தாழ இதே போன்றுதான் இருந்திருக்கிறது. 1990-91களில் இதன் ஜிடிபி வெறும் 2.1ஆக இருந்தது. ஆனால், 2023-24ம் ஆண்டில் 8.9% ஆக இருக்கிறது. சுருக்கமாக சொல்வதெனில், நவீன தாராளமயம் அமல்படுத்தப்பட்டதற்கு பிறகு தென் மாநிலங்களில் அசுர வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு: தென் மாநிலங்களில் தமிழ்நாட்டின் வளர்ச்சி சற்று வித்தியாசமாக இருக்கிறது. அதாவது, இங்கு 1991 காலத்திலேயே 7.1 அளவுக்கு ஜிடிபி வளர்ந்திருந்தது. இதனையடுத்து இப்போது இது 8.9ஆக உயர்ந்திருக்கிறது. தனியார் முதலீட்டை ஈர்ப்பதில் மாநிலங்களிடையே போட்டி உருவானபோது தமிழ்நாடு அரசு 1992ஆம் ஆண்டிலேயே தொழில் கொள்கை ஒன்றினை வெளியிட்டு இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டது. இந்த தொழில் கொள்கைதான் மாநிலத்தின் புதிய தொழிற்சாலைகள் உருவாவதற்கு அடித்தளமாக அமைந்தது. தமிழ்நாட்டில் மின்னணு மற்றும் மோட்டார் வாகனத் தொழிற்புரட்சிக்கு இத்தொழில் கொள்கை வழிவகுத்தது.
தொழில் வளர்ச்சியினை மாநிலத்தில் துரிதமாக்கியது, பெருந்தொழில் நிறுவனங்களிடமிருந்து பெருந்திட்டங்களை ஈர்ப்பதற்கு வழிவகுத்தது. இப்பெருந்திட்டங்களைச் சார்ந்து உதிரி, பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிக அளவில் உருவாகும் சூழ்நிலை உண்டானது. எனவே அரசின் கொள்கையிலும் மாற்றம் ஏற்பட்டது.
அதாவது, "உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் அதிகமான தனியார் மற்றும் பொதுத்துறை முதலீட்டை ஈர்க்க வேண்டும், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தொழில் துறை வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சியை அடைந்து, அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட வேண்டும்" என்கிற கொள்கையோடு தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
இந்த நான்கு மாநிலங்களில் கேரளா மட்டுமே விதி விலக்காக இருக்கிறது. ஏனெனில் கேரளாவின் பொருளாதார வளர்ச்சி முன்பை விட இப்போது சரிந்திருக்கிறது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
-
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு












Click it and Unblock the Notifications