தமிழ்நாடு அரசே மாதம் தரும் ரூ.7000.. இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்.. எளிதாக பெறலாம்.. எப்படி?
சென்னை: தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்ட 1000 மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 7 ஆயிரம் நிதி வழங்கப்படும் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்து இருந்தார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்திற்கான விண்ணப்பம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
UPSC 2025 தேர்வுக்கான விண்ணப்ப காலம் ஜனவரி 22, 2025 முதல் பிப்ரவரி 21, 2025 வரை இருந்தது. அதிகாரப்பூர்வ UPSC இணையதளத்தில் விண்ணப்ப செயல்முறை ஆன்லைனில் செய்யப்பட்டது. இதில் பதிவு செய்தவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம்.

தமிழ்நாட்டில் மாணவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட யுபிஎஸ்சி தேர்வுகளில் வெற்றிபெற சிறப்பு வகுப்பு அமைக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். தேர்வு செய்யப்பட்ட 1000 மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 7 ஆயிரம் நிதி வழங்கப்படும். 10 மாதங்களுக்கு இந்த நிதி வழங்கப்படும்.
முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும். நேர்முக தேர்வில் வென்றவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
எப்படி விண்ணப்பம் செய்வது
நீங்கள் UPSC தேர்வுக்கு விண்ணப்பம் செய்திருக்க வேண்டும்.
வருமான வரி சான்றிதழ் இருக்க வேண்டும். வருமானம் அரசின் நிர்ணயத்தை விட குறைவாக இருக்க வேண்டும்.
பெற்றோர் அல்லது கணவர் யாரும் அரசு வேலை, அரசு பென்ஷன் வாங்க கூடாது.
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பம் ஏற்கப்படுவதற்கான தகுதி இருக்க வேண்டும்.
நீங்கள் வட்டாச்சியர் அலுவலகத்தில் இதற்காக விண்ணப்பிக்கலாம். ஆட்சியர் அலுவலகத்திலும் விண்ணப்பங்களை செய்ய முடியும்.
UPSC தேர்வுக்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 1, 2025 தேதியின்படி குறைந்தபட்சம் 21 வயது மற்றும் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே இந்த திட்டத்திற்கும் விண்ணப்பம் செய்ய முடியும்.
யுபிஎஸ்சி தேர்வு எழுதும் காலம், பயிற்சி காலம் என்று 10 மாதத்திற்கு மட்டுமே இந்த தொகை வழங்கப்படும்,
இப்போது UPSC 2025 தேர்வுக்கான விண்ணப்ப காலம் ஜனவரி 22, 2025 முதல் பிப்ரவரி 21, 2025 வரை இருந்தது. இதனால் இந்த வருடம் விண்ணப்பித்தவர்கள் தற்போது இந்த திட்டத்தில் பணம் பெற விண்ணப்பம் செய்யலாம்.
ஆனால் தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்ட 1000 மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 7 ஆயிரம் வழங்கப்படும்.
உங்கள் ஆதார் அட்டையில் விலாசம் தமிழ்நாடாக இருக்க வேண்டும்.
UPSC 2025 சிவில் சர்வீசஸ் பிரிலிம்ஸ் தேர்வு மே 25, 2025 அன்று நடைபெற்றது. UPSC 2025 சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு ஆகஸ்ட் 22, 2025 முதல் நடைபெற்றது. இதற்கு பயிற்சி பெறுபவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் .
மற்ற அறிவிப்புகள்
கல்வி தொடர்பாக மற்ற சில திட்டங்களும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில், நீலகிரி குன்னூர், சென்னை ஆலந்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும். அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு வளர்ந்து வரும் துறைகளின் புதிய பிரிவுகள் ஏற்படுத்தப்படும்.
ரூ.50 கோடியில் அரசு பொறியியல் கல்லூரிகளில் திறன் மிகு மையங்கள் அமைக்கப்படும். பழங்குடி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க 14 உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அரசு பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications