அந்தியோதயா ரயில் ஜன்னலை உடைத்துக்கொண்டு வந்த கல்.. பயணி காயம்.. நாகர்கோவில் அருகே ஷாக்!
சென்னை: நாகர்கோவிலில் இருந்து சென்ற அந்தியோதயா ரயில் மீது ஆரல்வாய்மொழி பகுதி அருகே மர்ம நபர்கள் கல் வீசியுள்ளனர். இதில் ரயில் கண்ணாடி உடைந்து, இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணி காயமடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக நாகர்கோயில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
"ஏழைகளின் ரதம்" என்று அன்போடு அழைக்கப்படும் அந்தியோதயா ரயில், முன்பதிவு இல்லாத பெட்டிகளைக் கொண்ட ஒரு முக்கிய விரைவு ரயில். தாம்பரத்தில் இருந்து மதுரை, நெல்லை வழியாக நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா ரயில் மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும்.

சென்னைக்கு அதிகாலையில் சென்றடைய விரும்பும் பயணிகளுக்கும், தென் மாவட்டங்களுக்கு இரவு நேரத்தில் பயணம் செய்ய விரும்பும் பொதுமக்களுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது அந்தியோதயா ரயில். நாகர்கோவில் - தாம்பரம் இடையிலான அந்தியோதயா அதிவிரைவு ரயில் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி முதல் 45 நிமிடங்கள் வேகமாக சென்று வருகிறது.
அந்தியோதயா ரயில் நேற்று ஆரல்வாய்மொழி அருகே வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் திடீரென்று ரயில் மீது சரமாரியாக கற்களை வீசினர். இதில் ஒரு கல், 5-வது பெட்டி பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடி மீது விழுந்தது. அந்த கண்ணாடியில் ஓட்டை விழுந்து கண்ணாடி துகள்கள் சிதறின. ஜன்னல் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த ரீனா அன்னமேரி என்ற பயணியின் மீது கண்ணாடி துண்டுகள் விழுந்தன.
இதில் அவருக்கு தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டது. ரயில் நெல்லை வந்ததும் ரீனா அன்னமேரிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரல்வாய்மொழி பகுதிக்கு சென்று ரெயில் மீது கற்களை வீசிய கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications