‘வெடி’ வைத்த ராஜகண்ணப்பன்.. உடனே அழைத்த தலைமை.. நெல்லை கூட்டத்தை கேன்சல் செய்து சென்னைக்கு ஃப்ளைட்!
சென்னை: அமைச்சர் ராஜகண்ணப்பன், காங்கிரஸ் கட்சி பற்றியும், தேமுதிக பற்றியும் கடுமையாக விமர்சித்துப் பேசியது அரசியல் களத்தில் பரபரப்பைப் பற்ற வைத்தது. அமைச்சர் ராஜகண்ணப்பனின் பேச்சால் திமுக தலைமை டென்ஷனாகி இருப்பதாக கூறப்படும் நிலையில், தலைமை அழைப்பின் பேரில் சென்னைக்கு விரைந்துள்ளார் ராஜ கண்ணப்பன்.
நெல்லைக்குச் சென்றிருந்த அமைச்சர் ராஜகண்ணப்பன், அங்கு நடைபெற இருந்த கூட்டத்தில் பங்கேற்காமல் சென்னைக்கு விரைகிறார் ராஜகண்ணப்பன். தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜகண்ணப்பன் - தேமுதிக
மதுரை மாவட்டம் மேலூரில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பேசும்போது, "விஜயகாந்த் இருந்தபோது தேமுதிக எதிர்க்கட்சியாக இருந்தது. இல்லை என்று நாம் சொல்ல முடியாது. தேமுதிக இரு கட்சிகளிடமும் கூட்டணி பேசக்கூடாது. இங்கேயும் பேசுவது, அங்கேயும் பேசுவது என்பது சரியாக வராது. விசுவாசமாக இருந்தால் ஒரு பக்கம்தான் இருக்க வேண்டும்" என்று பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள், தேமுதிக பற்றி அவரிடம் கேட்டபோது, 'தேமுதிகவெல்லாம் ஒரு கட்சியா, பெரிய கட்சிகளை பற்றி கேளுங்கள்' என்று காட்டமாகக் கூறினார். இது தேமுதிகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. அமைச்சர் ராஜகண்ணப்பன் தேமுதிகவை கடுமையாக விமர்சித்து பேசியது, அக்கட்சியுடன் கூட்டணி வைக்க முயற்சிக்கும் திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
பிரேமலதா பதிலடி
ராஜகண்ணப்பன் பேச்சு தொடர்பான கேள்விக்கு, "தேமுதிக எப்படிப்பட்ட கட்சி என்பதை தமிழக மக்கள் அறிவார்கள். நாங்கள் இரண்டு பக்கமும் பேசுகிறோம் என்ற கருத்தைச் சொன்னவர் எப்படிப்பட்டவர் என்பது மக்களுக்குத் தெரியும்" என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜகண்ணப்பன் - காங்கிரஸ்
முன்னதாக, காங்கிரஸ் கட்சியையும் கடுமையாகச் சீண்டிப் பேசி இருந்தார் ராஜகண்ணப்பன். "நம்முடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்து வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை பற்றி முதல்வர் பேசிக் கொள்வார். வந்தால் வரட்டும்.. வராவிட்டால் போகட்டும். அது நமக்குத் தேவையில்லை. கூட்டணியை நம்பி அரசியல் கட்சிகள் இல்லை. ஆட்சியில் பங்கு கிடையாது என்று முதல்வர் தெளிவாக சொல்லிவிட்டார். முதல்வரின் இஷ்டம் அது." என்றார்.
ராஜகண்ணப்பனின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளது. இது தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே காங்கிரஸ் குறித்து திமுக நிர்வாகிகள் யாரும் விமர்சனம் செய்யக் கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்த நிலையில், திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் பொதுவெளியில் பேசியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விரையும் ராஜகண்ணப்பன்
இந்நிலையில், நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்கும் கட்சி கூட்டத்திற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக நெல்லை சென்றார் ராஜகண்ணப்பன். இன்று மதியம் வரை நெல்லையில் இருந்தார். இந்நிலையில், திமுக தலைமையின் அழைப்பை அடுத்து உடனடியாக சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையம் சென்று அங்கிருந்து அமைச்சர் ராஜகண்ணப்பன் சென்னை விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜகண்ணப்பன், காங்கிரஸ், தேமுதிக ஆகிய கட்சிகள் குறித்து கடுமையாகப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அவர் பங்கேற்க இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டு, அவர் சென்னைக்கு அழைக்கப்பட்டுள்ளது திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
வட தமிழகத்தில் திமுகவுக்கு சிக்கல்? வன்னியர்கள் ஓட்டு மொத்தமா காலி? வேல்முருகன் முடிவால் நெருக்கடி! -
இந்த 7 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் இவர்கள் தானா? ஒரே ஒருவர் பெயரில் மட்டும் வந்த விருப்பமனுக்கள்! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போகாத மா.கம்யூனிஸ்ட்! என்ன நடந்தது? -
கோவையில் போட்டியா?... முதல்வரின் விருப்பத்தால் விரக்தியில் செந்தில் பாலாஜி! -
BJP- TVK- DMK: தவெகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் திமுகவில் ஐக்கியம்! -
நள்ளிரவில் ‘செக்’ வைக்கும் காக்கிகள்.. சென்னையில் இரவு நேரத்தில் வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தவாக.. கூடுதல் சீட் தராததால் வேல்முருகன் அதிரடி முடிவு! -
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்? -
மார்ச் 23.. 6 சீட்டுக்கு 1 குறைஞ்சா கூட மீண்டும் அழைக்காதீங்க.. திமுகவுக்கு கெடு விதித்த சிபிஎம்! -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
கோவையை விடமாட்டோம்.. 3 தொகுதிகளை குறிவைத்த காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் முட்டி மோதும் கட்சிகள் -
காத்திருக்கும் எதிர்பாராத ட்விஸ்ட்.. கேரள தேர்தலில் இப்படியொரு சம்பவமா.! புதிய தேர்தல் சர்வே












Click it and Unblock the Notifications