Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சர்ச் பக்கத்தில்.. மசூதி முன்பு, பெரியார் சிலை இல்லையே ஏன்.. கஸ்தூரிக்கு வந்த டவுட் .. சரவெடி பதில்

நடிகை கஸ்தூரி பெரியார் சிலை குறித்து சந்தேகம் ஒன்றை ட்வீட் போட்டு கேட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கஸ்தூரி ஒரு டவுட் கேட்டுள்ளார்.. "மசூதி முன்போ சர்ச் பக்கத்திலோ எங்கேனும் பெரியார் சிலையோ, கடவுள் இல்லை என்ற வாசகமோ பார்த்ததுண்டா?" என்று தன் சந்தேகத்தை ட்வீட் போட்டு கேட்டிருக்கிறார்.

3 நாட்களுக்கு முன்பு ஸ்டண்ட் நடிகர் கனல் கண்ணன் பேசிய பேச்சின் காட்டம் இன்னும் குறையவில்லை... சர்ச்சைகளும் ஓயவில்லை.

"ஸ்ரீரங்கத்தில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்" என்று பேசியிருந்தார்.

கனல் கண்ணன் பேசிய வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று புகார்கள் போலீசில் தொடர்ந்து தரப்பட்டு வருகின்றன.. இதையடுத்து அவர் எந்நேரமும் கைதாக கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.. மற்றொருபுறம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் எச்.ராஜா, வானதி சீனிவாசன் வரை கனல் கண்ணன் பேச்சுக்கு ஆதரவு தந்து வருகின்றனர்.

 மடையன்

மடையன்

இந்நிலையில், நேற்றைய தினம் தமிழக பாஜகவின் துணை தலைவர் நாராயணன் திருப்பதி ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார்.. அதில், "கடவுள் இல்லை! கடவுள் இல்லை !! கடவுள் இல்லவே இல்லை!!! கடவுளை கற்பித்தவன் முட்டாள்! கடவுளை பரப்பியவன் அயோக்கியன் ! கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி! என்று சொல்வது கருத்துரிமை என்றால், கடவுள் உள்ளார்! கடவுள் உள்ளார்!! உறுதியாக உள்ளார் !!! கடவுள் இல்லை என்று கற்பிக்க நினைத்தவன் மடையன்! கடவுள் இல்லை என பரப்பியவன் மதி கெட்டவன் ! கடவுளை வணங்காதிருப்பவன் வன்மம் கொண்ட மிருகம்! என்று சொல்வதும் கருத்துரிமை தானே?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

 தர்மமா?

தர்மமா?

இந்த ட்வீட்டுக்கு பலரும் திரண்டு வந்து, ஆதரவும், எதிர்ப்புமாக கருத்துக்களை பதிவிட்டனர்.. "கடவுள் உண்டு என்று சொல்லுங்கள் யாரும் மறுக்கமாட்டார்கள்! அதற்காக கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலையை உடைக்க வேண்டும் என்று சொல்வதுதான் இந்துக்களின் தர்மமா? மக்களிடத்தில் மோதலை உருவாக்கும் வகையில் பேசுவது எந்த வகையில் நியாயமானது? என்று கேள்வி எழுந்தது.. அதுமட்டுமல்ல, "கடவுள் இல்லை என்று, இந்து கடவுளை மட்டுமா பெரியார் சொன்னார்? ஒரு கடவுளும் இல்லை என்று தானே சொன்னார்.. மற்ற இரண்டு மதங்களும் அமைதியாக இருக்கும்போது, உங்களுக்கு மட்டும் ஏன் கோபம் வருகிறது? என்றும் கேள்வி கேட்கப்பட்டது.

 டவுட் கேட்ட கஸ்தூரி

டவுட் கேட்ட கஸ்தூரி

இந்நிலையில், நடிகை கஸ்தூரியும் ஒரு கேள்வி கேட்டுள்ளார்.. சமூகத்தின் மீதான அக்கறையை, துணிச்சலுடன் வெளிப்படுத்தி வருபவர் கஸ்தூரி.. திமுக உள்ளிட்ட எந்த கட்சி என்றாலும் நறுக்கென கேள்வி கேட்டு, விமர்சனங்களை முன்வைப்பார்.. காட்டமான கேள்வியையும் எழுப்புவார்.. சில சமயம் தனக்கு மனதில் தோன்றும் சந்தேகங்களையும் ட்வீட் போட்டு வெளிப்படையாகவே கேட்பார்.. அந்த வகையில்தான் இன்று கஸ்தூரிக்கு ஒரு சந்தேகம் வந்துள்ளது.

 நடிகை கஸ்தூரி

நடிகை கஸ்தூரி

அதுகுறித்த ட்வீட்டில், "Sincere qn. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். மசூதி முன்போ சர்ச் பக்கத்திலோ எங்கேனும் பெரியார் சிலையோ, கடவுள் இல்லை என்ற வாசகமோ பார்த்ததுண்டா? அரசியல் தலைவர்களின் மாடமாளிகைகள், நிறுவனங்கள், பள்ளிகளில் உள்ளேயோ வெளியேயோ பெரியார் சிலை உண்டா? கடவுள் சிலை பார்த்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

அறிவாலயம்

அறிவாலயம்

கஸ்தூரியின் இந்த ட்வீட்டுக்கு பலரும் அவருக்கு ஆதரவு தந்து வருகிறார்கள்.. "ஆமாம்.. சரியான கேள்வி.. அறிவாலயத்தில்கூட சிலை இல்லையே.. கலைஞர் வீட்டுக்கு முன்பே கிருஷ்ணர் கோயில் உண்டே தவிர பெரியார் சிலை கிடையாது... எந்த வீட்டின் வரவேற்பரையிலும் இல்லை... கலைஞர் அண்ணா படங்கள் இருக்கும் வீடுகளிலும் பெரியார் இல்லை என்பதே உண்மை... வாசல் வரை பெரியார்..- பூசலுக்குப் பெரியார். ஆட்சி மீது அவப்பெயர் வரும்போது பெரியாரைத் தூக்கி வந்து கவசமாக்கிக்கொள்வார்கள். ஆனால், அடியை அவர் வாங்குவார்" என்று ஆதரவு கமெண்ட்கள் விழுகின்றன.

 சர்ச் - கருவறை

சர்ச் - கருவறை

அதேபோல, கஸ்தூரி இப்படி டவுட் கேட்டதுமே, ட்விட்டர்வாசிகள் ஓடிவந்து அவரவர்க்கு தெரிந்த பதில்களை பதிவிட்டு வருகிறார்கள்.. அந்த பதில்களின் தொகுப்புதான் இவை: "முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் அவர்களை கடவுளாக பார்க்கவில்லை. இறை தூதர்களாக தான் பார்க்கிறார்கள். ஆனால் நம் இந்து மதத்தில் தான், ஒரு மனிதரை கூட சாமி சாமி என்று சொல்கிறோம். எந்த சர்ச்லேயும் மசூதிலேயும் ஜாதி பார்த்து உள்ளே அழைப்பதில்லை.. இந்த இடங்களில் அனைவரும் சமமே. ஆனால் கருவறைக்கு அப்படி இல்லையே.

 யாரு வேணாங்குறா

யாரு வேணாங்குறா

இந்த கேள்விக்கான பதில் பார்ப்பனர்களுக்கு நல்லாவே தெரியும்.. 50 வருடங்களாக விளக்கி விளக்கி சொல்லியாச்சு. ஆனாலும் பலரும் திரும்ப திரும்ப கேட்பதன் நோக்கம், சிலரை தூண்டிவிட்டு கலவரம் பண்ணும்நோக்கம் மட்டுமே. எங்கே மூடநம்பிக்கை பெருகி வழிகிறதோ, அங்கெல்லாம் தான் பெரியார் இருக்கிறார்.. நீங்கள் குறிப்பிட்ட இடங்களில் சிலைகள் இல்லை என்றால், கஸ்தூரியே அங்கு பெரியார் சிலைகளை வைக்கலாம்.. யாரு வேணாங்குறா..

 பைபிள் - குரான்

பைபிள் - குரான்

உங்களிடம் ஒரு கேள்வியை நாங்கள் கேட்கிறோம் கஸ்தூரி, "பெரியார் கோவில் நுழைவு போராட்டம் நடத்துவதற்கு முன்பாக சாதாரண மக்கள் கோவிலுக்குள்ளே செல்ல முடிந்ததா?? இன்றும் கூட கருவறைக்குள் மற்ற இன மக்களை ஆரியம் அனுமதிக்க மறுக்கிறதே.. கிறிஸ்துவ இஸ்லாமிய மதத்தில் சூத்திரன் தீண்டத்தகாதவர்கள் என்று பிரிவினை கிடையாது. இந்த ஜாதி தான் பூஜை செய்யணும் என்று சொல்வதில்லை. இந்த ஜாதி தான் பைபிள் குரான் படிக்க வேண்டும். மற்றவர்கள் படிக்க கூடாது என்று தடை இல்லை. பூஜை செய்வது பரம்பரை வழி இல்லை.‌ அதனால் பெரியார் அங்கு இல்லை" என்று கஸ்தூரிக்கு விளக்கங்களை தந்து கொண்டிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+