அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர அனுமதி.. மத்திய அரசுக்கு எதிராக கொதிக்கும் சு.வெங்கடேசன்!
சென்னை: மத்திய அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர்ந்து கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக இருக்கக்கூடாது என்பது அரசு விதி. அதன்படியே தற்போது வரை மத்திய மாநில அரசு மற்றும் பொது நிறுவனங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேரும் வகையில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களை ஆர்எஸ்எஸ்-க்கு அனுப்பி வைக்கும் வேலையைச் செய்யும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மத்திய அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், இப்பொழுது மத்திய அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர அனுமதி கொடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்றத்தை திறந்து, அரசு ஊழியர்களை ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அனுப்பிவைக்கும் வேலையை துவக்கியிருக்கிற மோடி அரசுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications