"ஹாட்ரிக் வெற்றி!" சாதித்த "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.." ஆளுமையை மீண்டும் நிரூபித்த முதல்வர்
முதல்வர் ஸ்டாலின் 3வது முறையாக வெற்றியை பெற்றுள்ளார்
சென்னை: முதல்வர் ஸ்டாலினுக்கு லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சி (கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில்) என ஹாட்ரிக் வெற்றி, அசைக்க முடியாத தலைவராக உருவெடுத்துள்ளார்.
மிசா காலத்தில் இருந்து அரசியலில் வேரூன்றி இருப்பவர் மு.க. ஸ்டாலின்.. ஆனால், இவர் சந்தித்த தேர்தல்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானது.. அதன் முடிவுகள் அதைவிட சுவாரஸ்யமானது.
கருணாநிதிக்கு முன்பு, கருணாநிதிக்கு பின்பு என்று 2 வகையாக ஸ்டாலினின் அரசியலை பிரித்து பார்க்கலாம்.. அந்த வகையில், முதல்முறையாக சட்டமன்ற தேர்தலில் 1984ம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில்தான் இவர் போட்டியிடுகிறார். ஆனால் முதல் தேர்தலிலேயே தோல்வி அடைகிறார்.

சட்டமன்றம்
இதற்கு பிறகு, 1989ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மறுபடியும் திமுக சார்பில் போட்டியிட்டார். இந்த முறை வெற்றி பெறுகிறார்.. 1991ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மறுபடியும் தோல்வியுற்றார்... 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் மறுபடியும் போட்டியிட்டு, அதிக அளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்... இந்த தேர்தலில் 69.72 சதவீத ஓட்டுக்களை பெற்றார்... இது தான் ஸ்டாலின் பெற்ற அதிக ஓட்டு சதவீதமாகும்.

ஆயிரம் விளக்கு
அதன் பிறகு நடந்த 2001 மற்றும் 2006ம் ஆண்டு தேர்தல்களில் தொடர்ந்து ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி வாகை சூடினார்... இதனால்தான் ஆயிரம் விளக்கு தொகுதி ஒருகட்டத்தில் ஸ்டாலினின் தொகுதி என்றே அழைக்கப்பட்டுவிட்டது.. இதற்கு பிறகு கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட்டாலும், ஸ்டாலின் தொகுதி என்று இன்றளவும் பெயரை பெற்றது ஆயிரம் விளக்கு தொகுதிதான்.. 2011, 2016 ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 2வது முறையாக வெற்றி பெற்றார் ஸ்டாலின்.

கருணாநிதி
அப்போது முதல் இப்போது வரை தொடர் வெற்றியை தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் பெற்றுவருகிறார்.. ஆனால், திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு, மிகப்பெரிய சுமை ஸ்டாலினுக்கு வந்து சேர்ந்தது.. திமுகவை கட்டிக்காப்பாற்றி, ஆட்சிபொறுப்பை ஏற்றாக வேண்டிய நெருக்கடிக்கும், கட்டாயத்துக்கும் ஸ்டாலின் ஆளானார்.. மிகப்பெரிய கடினமான பணி என்றாலும், இதற்கு ஓரளவு ஸ்டாலினுக்கு ஆறுதலை தந்தது அதிமுகவின் பலவீனமான தலைவர்கள்தான்.

சாதக சூழல்கள்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் இறந்துவிட்ட நிலையில், அக்கட்சியின் உட்கட்சி பூசல் தலைவிரித்தாட, கோஷ்டி மோதல் அதிகரிக்க, சசிகலா ஜெயிலுக்குபோக, அணிகள் 2 ஆக பிரிய.. இப்படி அதிமுகவுக்குள் நடந்த பல சறுக்கல்கள் திமுகவுக்கு சாதகமான சூழலை பெற்று தந்தது.. மற்றொரு பக்கம் மத்திய பாஜகவின் அதிருப்திகள் மக்களுக்கு கூடிக் கொண்டே போனது.. முத்தலாக் முதல் மொழி திணிப்புவரை நடந்த அத்தமீறல்களை பார்த்து தமிழக மக்கள் சோர்ந்தே போனார்கள்.. இதெல்லாம்தான் நடந்து முடிந்த எம்பி தேர்தலில் திமுக வெற்றிக்கு அடித்தளம் போட்டு தந்தது.

எம்பிக்கள்
டெல்லியே வியந்து போகும் அளவுக்கு எம்பிக்கள் அவையை கலங்கடித்தனர்.. அந்த கலக்கம் இப்போதுவரை மத்திய பாஜகவுக்கு இருக்கவே செய்கிறது.. இதற்கடுத்தபடியாக நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக மீதான வெறுப்பும், மாற்று அரசியல் தேவை என்ற மக்களின் இயல்பான மனோபாவமும் திமுகவுக்கு மீண்டும் உதவியது.. அதனால்தான் ஜஸ்ட் பாஸ் வெற்றியை பெற்றாலும், திமுகவினால் ஆட்சியை பிடிக்க முடிந்தது.. 10 வருடம் கழித்து கிடைத்த ஆட்சியை திமுக மிக சரியாக பயன்படுத்தி கொண்டது..

வெளுத்த சாயம்
8 மாத கால ஆட்சியை திறன்படவே ஸ்டாலின் நடத்தினார்.. கொடுத்த வாக்குறுதிகளை முடிந்தவரை நிறைவேற்றினார்.. போதாக்குறைக்கு மாஜிக்கள் ஊழலின் சாயம் வெளுக்க ஆரம்பித்துவிடவும், திமுகவுக்கு மேலும் செல்வாக்கு கூடிவிட்டது.. ஆக, எம்பி தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என ஹாட்ரிக் வெற்றியை திமுக இன்று பெற்றுள்ளது என்றால், அதற்கு முக்கிய காரணம் முத்துவேல் கருணாநிதியின் மகன் முக. ஸ்டாலினின் செம்மையான ஆட்சிதான் என்பதை வலிய சொல்லலாம்..!
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!










Click it and Unblock the Notifications