“லைஃப் டைம் செட்டில்மெண்ட் லெட்டர்” கைப்பட கடிதம் எழுதிய கமல்ஹாசன்! நெகிழ்ந்து போன லோகேஷ் கனகராஜ்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை : விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் தனது கைப்பட கடிதம் ஒன்றை கமல் எழுதியுள்ள நிலையில், "லைஃப் டைம் செட்டில்மெண்ட் லெட்டர்.. என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'விக்ரம்'.

கடந்த 3ஆம் தேதி வெளியான விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா இந்த படத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ள நிலையில், படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதோடு, சுமார் 150 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக கமல்ஹாசனின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விக்ரம் படம்

விக்ரம் படம்

இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் தனது கைப்பட கடிதம் ஒன்றை கமல் எழுதியுள்ளார். அந்த கடித்தத்தில் "அன்பு லோகேஷ், பெயருக்கு முன் திரு போடாமல் விட்டது விபத்தல்ல. திரு.கனராஜ் அவர்களுக்கு உங்கள் பால் உள்ள உரிமையை உங்களை கேட்காமலேயே நான் எடுத்துக் கொண்டுவிட்டேன். இது நமக்குள்ளான தனிப்பட்ட கடிதம் என்பதால். மற்றபடி உங்கள் சாதனைக்கான பதவிக்கான மரியாதை பழையபடியே தொடரும்.

கைப்பட கடிதம்

கைப்பட கடிதம்

பொதுவெளியில், என் ரசிகர்கள் மற்ற ரசிகர்களை விட வித்யாசமானவர்களாக இருப்பது அவசியம் என்ற என் ஆசை, பேராசை என்றனர் என் விமர்சகர்கள். ஆனால் அதையும் தாண்டி என் முன்னணி ரசிகர் முன்னணித் திறமையாளராகவும் இருப்பது நான் ஆசைப்பட்டதை விட அதிகம். உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று நான் உட்பட யார் சொன்னாலும் நம்ப வேண்டாம்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

யூ டியூபைத் திறந்தால் வார்த்தைகளின் களஞ்சியமே தென்படும். அதில் உள்ள திரு லோகேஷ் கனகராஜ் தோத்திர மாலையிலிருந்து யார் வேண்டுமானாலும் வார்த்தை மலர்களை எடுத்து கொள்ளலாம். இவையெல்லாம் தொடர வாழ்த்துக்கள். அயராது விழித்திருங்கள், தனித்திருங்கள். பசித்திருங்கள் உங்கள் அன்ன பாத்திரம் என்றும் நிறைந்திருக்கும் உங்கள் நான் கமல்ஹாசன்" என எழுதியுள்ளார்.

லைஃப் டைம் செட்டில்மெண்ட்

லைஃப் டைம் செட்டில்மெண்ட்

இந்த கடிதத்தால் நெகிழ்ந்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "லைஃப் டைம் செட்டில்மெண்ட் லெட்டர்.. இதைப் படிக்கும் நான் எவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது! நன்றி ஆண்டவரே" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ஆயிரக்கணக்கானோர் லைக், கமெண்ட், செய்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+