இப்படி பண்ணா போதும்.. வங்கி கணக்கில் பணம் தேடி வரும்.. செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் செம சான்ஸ்
சென்னை: செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் எளிமையாக சேமிக்க பல்வேறு வழிகளை வல்லுனர்கள் வழங்கி உள்ளனர். அதிக லாபம் ஈட்டும் வகையில் சில முக்கிய வழிகளை அவர்கள் வழங்கி உள்ளனர்.
அதன்படி மாதத்திற்கு வெறும் ₹250 முதலீடு செய்வதன் மூலம், பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கலாம். இது எப்படி சாத்தியம் என்பதை இங்கே பார்க்கலாம்.

இத்திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், கணக்கைத் தொடங்க பெரிய தொகை தேவையில்லை. வெறும் ₹250 இல் முதலீட்டைத் தொடங்கலாம். ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ₹1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். சில வருடங்கள் முதலீடு செய்ய முடியாவிட்டால், ₹50 அபராதம் செலுத்தி கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரலாம்.
செல்வமகள் சேமிப்பு திட்டம்
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ், குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். 21 ஆண்டுகள் நிறைவடைந்ததும் கணக்கு முதிர்ச்சியடையும், அப்போது முழுத் தொகையையும் பெற்றுக் கொள்ளலாம். 15 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றோர்கள் கூடுதலாக முதலீடு செய்யத் தேவையில்லை. மீதமுள்ள 6 ஆண்டுகளுக்கு, கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி தொடர்ந்து வழங்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் ₹64 லட்சம் நிதியை எவ்வாறு பெறுவது என்பதைப் பார்ப்போம். ஒவ்வொரு மாதமும் ₹11,550 முதலீடு செய்தால், ஆண்டுக்கு ₹1,38,600 டெபாசிட் செய்யப்படும். 15 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம், மொத்த வைப்புத் தொகை ₹20,79,000 ஆகும்.
இந்தத் தொகைக்கு 8.2% வட்டி விகிதத்தில், முதிர்ச்சியின் போது ₹64,01,082 மொத்தமாக கிடைக்கும். இதில், ₹43,22,082 வட்டியாகக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வமகள் சேமிப்பு திட்டம், பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி தொடங்கப்பட்டது. பெண்களின் சேமிப்பிற்காகவும், அவர்களது உயர் கல்வி, திருமணம் மற்றும் மருத்துவத் தேவைகளுக்காகவும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம்
மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. அவற்றில் ஒன்றுதான் செல்வமகள் சேமிப்பு திட்டம். பெண்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, குறைந்த சேமிப்பில் அதிக வருமானம் தரும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் வட்டி மூலம் கணிசமான லாபம் கிடைப்பதால், பல பெற்றோர்கள் இதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். பிரதமர் மோடி தொடங்கி வைத்த இந்த திட்டத்தில் ₹11,16,815 வரை சேமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் பெயரில் இத்திட்டத்தைத் தொடங்கலாம். குழந்தை 10 வயதை அடைந்ததும், அவர்களது பெயருக்கு கணக்கை மாற்றிக் கொள்ளலாம். 15 ஆண்டுகள் வரை இத்திட்டத்தில் டெபாசிட் செய்யலாம், 21 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சித் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்ட முதலீடு
இத்திட்டத்தில் மாதத்திற்கு ₹1000 அல்லது ₹2000 முதலீடு செய்ய முடியும். 8% வட்டி விகிதத்துடன், மாதத்திற்கு ₹2000 வீதம் 15 ஆண்டுகள் முதலீடு செய்தால், 21 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியுடன் சேர்த்து ₹11.16 லட்சம் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ₹1000 ஆகும். அருகிலுள்ள அஞ்சல் அல்லது வங்கிகளில் இந்தத் தொகையைச் செலுத்தி கணக்கைத் தொடங்கலாம். பெண் குழந்தைகளுக்குத் திருமணம் ஆகும் வரை பணத்தைச் செலுத்தலாம். அதிகபட்சமாக மாதத்திற்கு ₹1.5 லட்சம் வரை வைப்புத் தொகையாகச் செலுத்த முடியும்.
ஆண் குழந்தைகளுக்கான தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) திட்டமும் உள்ளது. இத்திட்டம் மூலம் ₹2 லட்சம் வருவாய் ஈட்ட முடியும். இது அரசாங்கத்தால் வழங்கப்படும் குறைந்த ஆபத்துள்ள நிலையான வருமானத் திட்டமாகும், மேலும் நாடு முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் கிடைக்கிறது.
ஆண் குழந்தைகளுக்கான இந்த அஞ்சலக சேமிப்புத் திட்டம், அவர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு சிறந்த அம்சங்கள் மற்றும் பலன்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நிலையான மற்றும் உத்தரவாதமான வருமானத்தை அளித்து, சிறந்த வருவாயை உருவாக்க உதவுகிறது. தற்போது இத்திட்டம் ஆண்டுக்கு 7.7% வட்டி விகிதத்தில் கிடைக்கிறது.
-
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்! -
சரியான நேரத்தில் எச்சரித்த ஆனந்த் சீனிவாசன்... சட்டென எகிறிய தங்கம் விலை.. இனி என்ன நடக்கும்? -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
உன்னை கட்சியில் வைத்திருந்தால்.. அதிமுகவையே விற்றுருப்பாய்.. ஓபிஎஸ்ஸை தரக்குறைவாக பேசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications