இத்தனை நாள் வராதவர்.. எட்டிக்கூட பார்க்காதவர்.. குஷ்புவிற்காக "அவரே" களமிறங்கிட்டாரே.. சக்ஸஸ் தானா?
சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்பு பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக வீடு வீடாக சென்று குஷ்பு பிரச்சாரம் செய்து வருகிறார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக பாஜக கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பாஜக மொத்தம் 20 இடங்களில் போட்டியிடுகிறது.
ஸ்டார் வேட்பாளர்களை பாஜக பல இடங்களில் களமிறக்கி உள்ளது. குஷ்பு, எல்.முருகன், வானதி சீனிவாசன், எச். ராஜா ஆகியோர் பாஜக சார்பாக களமிறங்குகிறார்கள்.

பிரச்சாரம்
இந்த நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்புவிற்காக அவரின் கணவர் சுந்தர் சி இன்று பிரச்சாரம் செய்தார். பொதுவாக சுந்தர் சி அரசியல் தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிப்பதில்லை.குஷ்புவிற்கு ஆதரவாக எங்கும் சுந்தர் சி அரசியல் கருத்துக்களை தெரிவித்தது இல்லை.

அரசியல்
குஷ்பு திமுகவில் இருந்து காங்கிரஸ் சென்ற போதும், அதன் பின் பாஜக சென்ற போதும் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். ஆனால் அப்போதெல்லாம் குஷ்பு குறித்து சுந்தர் சி கருத்து தெரிவிக்கவில்லை. அரசியலில் இருந்து சுந்தர் சி விலகியே இருந்தார் .

ஆச்சர்யம்
ஆச்சர்யமாக தற்போது குஷ்புவிற்காக சுந்தர் சி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.ஆயிரம் விளக்கு தொகுதியில் வீடு வீடாக குஷ்பு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் . அவருடன் சுந்தர் சியும் இன்று களத்திற்கு சென்று வாக்கு சேகரித்தார். இருவரும் ஜோடியாக ஒவ்வொறு தெருவாக நடந்து சென்றனர்.

சினிமா
இரண்டு பேருமே சினிமா பிரபலங்கள் என்பதால் இவர்களை பார்க்க மக்கள் கூட்டம் அதிகமாக கூடியது. இத்தனை நாள் அரசியல் பக்கம் எட்டிக்கூட பார்க்காத சுந்தர் சி, குஷ்புவின் முதல் தேர்தல் இது என்பதால் நேரடியாக களத்திற்கே வந்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து பிரச்சாரம் செய்யும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications