Sunita Williams: பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் - மயில்சாமி அண்ணாதுரை
சென்னை: சர்வதேச விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த 9 மாதங்களாக பூமிக்குத் திரும்ப முடியாமல் உள்ளனர். அவர்களை பூமிக்குத் திரும்பி அழைத்து வருவதற்காக டிராகன் விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், பூமிக்குத் திரும்பும் சுனிதா வில்லியம்ஸின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் என்றும், பூமிக்கு வந்தால் இயல்பு நிலைக்கு திரும்ப சில நாட்கள் ஆகும் என்றும் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் சென்றனர். விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர்கள் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கடந்த 9 மாதங்களாக விண்வெளி நிலையத்திலேயே அவர்கள் இருவரும் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

தற்போது அவர்களை பூமிக்கு அழைத்து வருவதற்காக ஸ்பேஸ் எக்ஸின் க்ரூ டிராகன் 9 என்ற விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவுக்கு மேல் டிராகன் விண்கலம் பூமியை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் விடுவிக்கப்படும் காட்சி, பூமிக்கு வந்து சேரும் காட்சிகளை நேரலையாக ஒளிபரப்ப நாசா ஏற்பாடு செய்துள்ளது.
இந்நிலையில், பூமிக்குத் திரும்பும் சுனிதா வில்லியம்ஸின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் என்றும், பூமிக்கு வந்தால் இயல்பு நிலைக்கு திரும்ப சில நாட்கள் ஆகும் என்றும் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவையில் மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது: செயற்கை நுண்ணறிவால் கல்வியில் மாற்றம் ஏற்படும். செயற்கை நுண்ணறிவுக்கு ஏற்றபடி மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் தயாராகி கொள்ள வேண்டும். இந்த காலகட்டம் அடுத்து ஒரு பாய்ச்சலுக்கு போகும் காலமாக இருக்கும். முதலில் விமான பயணமே சவாலாக இருந்தது. அதன் பின் எளிதாகிவிட்டது.
இப்போது விமான பயணம்போல் விண்வெளி பயணம் எளிதாகிவிட்டது. விண்வெளிக்கு பலவகைகளில் செல்ல முடியும். அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. 72 வயது பெண்மணி அங்குபோய் விட்டு மீண்டும் போக போகின்றேன் என சொல்லும் அளவிற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், இந்த பயணங்களை ஒரு வருடம் முன்பாக திட்டமிட வேண்டும். சர்வதேச விண்வெளி மையத்திற்கு மாதம் ஒரு கலன் சென்றே ஆக வேண்டும். ஒரு வருடத்திற்கு 100 டன் எரிபொருள் கொண்டு செல்ல வேண்டும்
அங்கு எப்போதும் 7 முதல் எட்டு பேர் இருப்பார்கள். ஆட்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். சுனிதா வில்லியம்ஸ் போயிங் கலனில் சென்ற நிலையில் அது பழுதானதால் வேறு கலனை உடனே அனுப்ப முடியவில்லை. இந்த பயணங்கள் மிக மிக சகஜமானவை. சுனிதா வில்லியம்ஸ் இதைவிட அதிக நாட்கள் விண்வெளியில் இருந்திருக்கிறார். அவருடைய உடல்நலம், மனநலன் ஆகியவை சிறப்பாக இருக்கிறது. அவ்வாறு இருப்பதால்தான் கமாண்டராக இருந்து வழிநடத்தி இருக்கிறார்.
சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காக்காரர். தற்பொழுது ரஷ்யாவை சேர்ந்தவரிடம் ஒப்படைத்து வந்திருக்கிறார். சர்வதேச விண்வெளி மையம் என்பது ஒருவருக்கு ஒருவர் உதவி கொள்ளும் விதமாக இருக்கிறது. குலசேகரபட்டினத்தில் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. தனியார் துறையில் ராக்கெட் அனுப்புவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது. பெரிய ஏவுதளங்கள் வேண்டும் என்று கிடையாது. குறைந்த எரிபொருள் செலவில் இருந்து அனுப்பக்கூடிய இடமாக குலசேகரப்பட்டினம் இருக்கிறது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் குலசேகரப்பட்டினம் செயல்பட தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
சுனிதா வில்லியம்ஸ் ஒரு பெண்ணால் எவ்வளவு நாள் அங்கு இருக்க முடியும் என்பதை உணர்த்தி இருக்கிறார். பத்து நாட்களில் திரும்பி இருக்க வேண்டியவர், ஆனால் நீண்டநாள் அவர் அங்கு இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சர்வதேச விண்வெளி மையத்தில் தலைமை பொறுப்பு ஏற்று பணிபுரியும் அளவிற்கு உடல் நலம் சிறப்பாக இருக்கிறது. விண்வெளிக்கு சென்று வரும் எல்லாருக்கும் உடல் நல பிரச்சினைகள் இருக்கும். உடலில் பல மாற்றங்கள் இருக்கும்.
பூமிக்கு வந்தால் இயல்பு நிலைக்கு திரும்ப சில நாட்கள் ஆகும். அவருக்கு அதை தவிர வேறு எந்த பிரச்சனையும் இருக்காது என்றார்.
மேலம், கல்வி தான் எல்லாம். மாணவர்கள் கல்வியை கற்க வேண்டும். நாளை விண்வெளியில் பறக்கும் வாய்ப்பு இந்த கல்வி நமக்கு வழங்கும். மனிதன் உயர காரணம் கல்வி தான். சரியான வேகம், சரியான திசை, சரியான விசை என்பது அனைத்திலும் இருக்க வேண்டும். இந்தியா விண்வெளிக்கு போகணுமா? என்ற கேள்வி இருந்த நிலையில், இப்போது இந்தியா விண்வெளியில் சாதிக்கும் நிலை வந்துள்ளது.
உலக தரம் வாய்ந்த தொழில் நுட்பங்களை நாம் உருவாக்க வேண்டும். அதற்கான நேரம் வந்து விட்டது. சுனிதா வில்லியம்ஸ் பற்றி பேசும் நாம், நம்முடைய மாணவர்கள் பற்றி நாளை பேச வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications