சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

1,2,3,4.. வந்தாச்சு புது அறிவிப்பு.. இன்று முதல் 4 நாட்களுக்கு செம்ம மழை இருக்காம்.. ஹேப்பி

இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: வட தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

4 நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் ஆந்திரா மற்றும் சென்னை கடலோர பகுதிகளில் வறண்ட காற்று நிலவியது..

இந்த வறண்ட காற்று தாழ்வு பகுதியானது, பலம் பெறுவதை தடுத்ததுடன், தாழ்வு மண்டலம் உருவாகவும் தாமதம் ஏற்பட்டது.. இறுதியில், அது தாழ்வு மண்டலமாக மாறியது.

வாவ்! இரவை வண்ணமயமாக்கும் 'விண்கல் மழை'.. வெறும் கண்ணிலே பார்க்கலாம்.. தமிழ்நாட்டில் எங்கு தெரியும்?வாவ்! இரவை வண்ணமயமாக்கும் 'விண்கல் மழை'.. வெறும் கண்ணிலே பார்க்கலாம்.. தமிழ்நாட்டில் எங்கு தெரியும்?

 நகரவேயில்லை

நகரவேயில்லை

எனினும், வறண்ட காற்று காரணமாக, இந்த தாழ்வு மண்டலம் நகர்ந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டு, சென்னைக்கு அருகே 150 கிமீ தூரம் வரை வந்து வங்கக்கடலில் மையம் கொண்டது. அப்போதும், இந்த தாழ்வு மண்டலம் நகராமல், சென்னைக்கு அருகே 40 கிமீ தூரத்தில் நின்றது.. இப்படி வங்கக்கடலில் மாற்றங்கள் கடந்த 4 நாட்களாகவே நடந்து வந்த நிலையில்தான், சென்னை உட்பட பல இடங்களில் மழை பெய்ய துவங்கியது. அந்தவகையில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது..

 காற்றழுத்த தாழ்வு பகுதி

காற்றழுத்த தாழ்வு பகுதி

வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பில் உள்ளதாவது: தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த 23-ம் தேதி நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழகத்தின் மேல் நகர்ந்து 24-ம் தேதி காலை வலுவிழந்தது.. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

சேன்ஸ்

சேன்ஸ்

ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 4 நாட்களுக்கு மழை

4 நாட்களுக்கு மழை

25.11.2022 முதல் 28.11.2022 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பக்கத்தில் 10 செண்டி மீட்டர் மழையும், திருத்தனி மற்றும் காஞ்சிபுரத்தில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Super announcement and chance of moderate rain for four days from today in Tamilnadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X