ஹைய்யா சூப்பர்.. சென்னைவாசிகளுக்கு பறந்து வந்த குட்நியூஸ்.. தமிழக அரசின் அடுத்த அதிரடி.. ஸ்பீக்கராமே
பஸ் நிறுத்தங்கள் பெயர் அறிவிக்கும் திட்டத்தை தமிழக போக்குவரத்து துறை அறிமுகப்படுத்துகிறது
சென்னை: சென்னை மாநகர பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கு, அடுத்தடுத்த பஸ் ஸ்டாப்களின் பெயரை ஸ்பீக்கர்கள் மூலம் அறிவிக்கும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.. இந்த திட்டத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழக போக்குவரத்து துறை, பல்வேறு அதிரடிகளையும், அறிவிப்புகளையும் அடிக்கடி வெளியிட்டு வருகிறது.. பயணகளின் வசதிக்காகவும், நலனுக்காகவும் இத்தகைய முயற்சிகளையும், செயல்பாடுகளையும் நடைமுறைப்படுத்தியும் வருகிறது.
அந்தவகையில், இன்று ஒரு புதிய திட்டம் அமலாகிறது.. பஸ்களில் பயணிக்கும் பயணிகளின், பஸ் ஸ்டாப்கள், அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், முன்கூட்டியே ஸ்பீக்கர்கள் மூலம் அறிவிக்கப்படுகிறது.

பஸ் ஸ்டாப்கள்
எத்தனையோ பயணிகள், பஸ்களில் பயணிக்கும்போது, தங்கள் பஸ் ஸ்டாப்களை மறந்துவிடக்கூடும்.. அல்லது எங்கே இறங்குவது என தெரியாமல், அந்த ஸ்டாப்பிங்கை கடந்துவிடவும் கூடும்.. எனவே, அவர்களின் வசதிக்காகவே இந்த திட்டம் இன்று செயல்படுத்தப்பட்டுள்ளது.. அதன்படி, பஸ் நிறுத்தங்களை அடைவதற்கு முன்பாக 300 மீட்டர் தூரத்தில், நிறுத்தங்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிபரப்பு செய்ய போகிறது தமிழக போக்குவரத்துத்துறை.

ஸ்பீக்கர்கள்
பஸ் ஸ்டாண்ட்களின் பெயர்களை, ஸ்பீக்கரில் ஒலிபரப்பும் வகையில் சென்னை மாநகர பேருந்துகளின் உட்புறத்தில் ஜிபிஎஸ் உதவியுடன் முன்பக்கம், பின்பக்கம், பக்கவாட்டு பகுதிகளில் தலா 2 என மொத்தம் 6 ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது.. இதன்மூலம் பேருந்து செல்லும் வழித்தடத்தில் அடுத்தடுத்து வரும் பேருந்து நிறுத்தங்களின் பெயரை குறிப்பிட்ட நிறுத்தத்தை அடைவதற்கு 300 மீட்டர் முன்பாக பயணிகளுக்கு தெரிவிக்கும்விதமாக அறிவிப்பு செய்யப்படும். இந்த சேவை இன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

பல்லவன் உதயநிதி
மேலும் பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்புகளின் இடையே விளம்பரங்கள் ஒலிபரப்பப்பட்டு போக்குவரத்து கழகத்திற்கு அதன் மூலம் வருவாய் திரட்டப்படும் என்றும் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்லவன் இல்லத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.. ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் சேவையை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். அதன்பின், அந்த பஸ்ஸில் அமைச்சர் சிவசங்கர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஒன்றாக பயணித்தனர்.

ADVT வசதி
இதே ஜிபிஎஸ், வசதியைப் பயன்படுத்தி, மின்சார ரயில், மெட்ரோ ரயில்களில் உள்ளதுபோல், மாநகர பேருந்துகளிலும், அடுத்த பேருந்து நிறுத்தம் குறித்து ஒலிபெருக்கியின் வாயிலாக அறிவிக்க, 2019லேயே ஏற்பாடுகள் செய்யப்பட்டன.. ஆனால் அந்த நேரத்தில், கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால், அது செயல்பாட்டுக்கு வரவில்லை.. அதனால்தான், இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது... இதன் முதல்கட்டமாக, 150 மாநகர பேருந்துகளில், இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்கள் குறித்த குறிப்புகளும் இந்த ஸ்பீக்கர்களில் சொல்வார்களாம்.. நடுநடுவே தனியார் விளம்பரங்களும் ஒலிக்க உள்ளது... இன்று துவங்கப்பட்டுள்ள இந்த திட்டமானது சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications