சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"1000 ரூபாய்" வரப்போகுது.. தமிழக அரசின் அதிரடி.. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்.. எப்படின்னு பாருங்க

1000 ரூபாய் பெறுவதற்கு மாணவிகள் அப்ளை செய்ய நாளையே கடைசி நாள் ஆகும்

Google Oneindia Tamil News

சென்னை: மாணவிகள் உதவித்தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்க, ஏற்கனவே 10 நாட்கள் நீட்டிக்கப்பட்ட நிலையில், அதற்கு நாளையே கடைசி நாளாகும்.

அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர் கல்வியில் இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் மாதம் 1000 ரூபாய் அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்தார்..

இந்த அறிவிப்பு பெற்றோர் மற்றும் மாணவிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது.. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு, திருமண நிதியுதவித் திட்டம் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுவதாகவும் அமைச்சர் பிடிஆர் தெரிவித்திருந்தார்.

 உங்களுக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்? மாணவி கேட்ட ஒற்றை கேள்வி.. வியந்து போன உதயநிதி! பரபர உங்களுக்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்? மாணவி கேட்ட ஒற்றை கேள்வி.. வியந்து போன உதயநிதி! பரபர

 1000 ரூபாய்

1000 ரூபாய்

6 முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், அதாவது, பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழிற்படிப்பு இது எதுவானாலும்சரி, இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் 1,000 ரூபாய், அந்த குறிப்பிட்ட மாணவிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவே செலுத்தப்படும்.. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 6 லட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளதாகவும், இதற்காகவே, வரவு-செலவுத் திட்டத்தில் 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் பிடிஆர் கூறியிருந்தார்.

 குஷியில் பெற்றோர்

குஷியில் பெற்றோர்

சமீபத்தில்கூட, செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இதை உறுதிப்படுத்தியிருந்தார்.. உயர்கல்வி உதவி தொகை திட்டம் இந்த கல்வியாண்டிலேயே தொடங்கப்படும் என்று கூறியிருந்தார்.. ஆனால், எப்போது அந்த திட்டம் அமலுக்கு வரும் என்று உறுதியாக கூறவில்லை.. அநேகமாக மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் ஜூலை 15ம் தேதி அதாவது காமராஜர் பிறந்தநாள் முதல் அமலுக்கு வரலாம் என்றார்கள்.

 ஆன்லைன்

ஆன்லைன்

மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும்கூட, இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் குஷியை ஏற்படுத்தி வருகிறது.. இந்நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்யும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டு அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பயனாளிகளுக்கான தேர்வு ஆன்லைன் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

பாடநெறி

பாடநெறி

ஸ்டூடென்ட் லாகின் முகவரி அறிமுகப்படுத்தப்பட்டு, இதன் மூலம் கல்வி வகை, கல்லூரி செயல்படும் மாவட்டம், கல்லூரியின் பெயர், பாடநெறி, பாடநெறி காலம் ,கல்லூரி சேர்ந்த ஆண்டு போன்று விவரங்கள் இடம்பெற்றுள்ளன. உயர்கல்வி தொகை பெற தகுதி வாய்ந்த மாணவியர்கள் விவரங்களை பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே ஜுன் 30-ஆம் தேதி கடைசி நாள் என்ற நிலையில் மேலும் 10 நாட்கள் உதவித்தொகைக்காக பதிவு செய்யும் காலம் நீட்டிக்கப்பட்டது.

 கடைசி நாள்

கடைசி நாள்

அந்த வகையில் உதவித்தொகை விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். அரசு மற்றும் தனியார் என அனைத்து வகை பாலிடெக்னிக் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் தவிர மற்ற இளநிலை பட்ட மாணவியர் https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதளத்தில் நாளைக்குள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

English summary
super announcement rs 1000 to college students and tomorrow is the last day to apply for student aid 1000 ரூபாய் பெறுவதற்கு மாணவிகள் அப்ளை செய்ய நாளையே கடைசி நாள் ஆகும்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X