பஸ்ஸுக்குள்ளே கவனிச்சீங்களா? சென்னை பேருந்தில் டிரைவர் சீட்டில் ஜிலீர் காற்று! தமிழக அரசு வேற லெவல்
சென்னை: சென்னை மாநகர பஸ்களில் டிரைவர்களின் இருக்கை அருகே பேட்டரி ஃபேன் பொருத்தும் பணி ஆரம்பமாகி உள்ளது. இதுகுறித்து 2 நாட்களுக்கு முன்பேயே அறிவிப்பு வெளியாகிய நிலையில், தற்போது கூடுதல் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் துவங்கிஉள்ளது.. மற்றொருபக்கம் கோடை மழையும் ஆங்காங்கே பெய்து வருகிறது.. எனினும் வெயிலின் தாக்கம் அதிகரித்தபடியே உள்ளது..

பகல்நேரம்: காலை முதல் மாலை வரை சாலைகளில் நடமாடவே பொதுமக்கள் பயப்படுகிறார்கள்.. அந்த அளவுக்கு வெயில் வாட்டுகிறது.. அதனால்தான், பகல்நேரங்களில் தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம் என்று தமிழக சுகாதார துறையும், மருத்துவர்களும் தொடர்ந்து அறிவுறுத்தியபடியே உள்ளனர்.
எனினும், இந்த வெயிலிலிருந்து தப்பிக்க ஓரளவு உதவ வேண்டும் என்பதற்காகவே, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. குறிப்பாக, நிழல் தர வேண்டும் என்பதற்காக, சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலுள்ள சிக்னல்களில், பசுமை பந்தல்களை அமைத்து வருகிறது..
ஓஆர்எஸ் கரைசல்: அதேபோல, ஓஆர்எஸ் கரைசலும் வழங்கப்பட்டு வருகிறது.. வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கு வைரஸ் தொற்றுதான் முக்கிய காரணியாக உள்ளது.. இதனால், வயிற்றுப்போக்கு அதிகமாக ஏற்பட்டு,, அதிகப்படியான நீர் மற்றும் உப்புச்சத்து குறைபாடு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.. இதனை தடுப்பதற்காகவும், உடலில் நீர்ச்சத்து, உப்புச்சத்து குறைபாடு ஏற்படக்கூடாது என்பதற்காகவும், இந்த கரைசல் வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களை தவிர, தான் வெயிலில் இருந்து டிரைவர்களை காக்க சென்னை மாநகர போக்குவரத்து கழகம் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதன்படி, பேருந்துகளில் டிரைவர் இருக்கையின் முன்பு அல்லது பின்புறம் இந்த பேட்டரி ஃபேன் பொருத்தப்பட்டு வருகிறது.
அனல் காற்று: காரணம், டிரைவர்கள் நீண்ட நேரம் உட்கார்ந்து பஸ் ஓட்டுவதால் என்ஜின் சூடாகிவிடுகிறது.. இந்த உஷ்ணத்துடன் சேர்த்து, அனல்காற்றும் சேர்ந்து வீசுவதால், டிரைவர்களின் உடல்நிலை கடுமையாக பாதிக்கிறது.. அதனால்தான், மொத்தம் 1,000 பஸ்களில் பேட்டரி ஃபேன் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், இப்போதைக்கு 250 பஸ்களில் பேட்டரி ஃபேன் பொருத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், இந்த பணிகள் தற்போது துரிதமாகியிருப்பதாக கூடுதல் தகவல் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து, போக்குவரத்து அதிகாரிகள் சொல்லும்போது, "இன்னும் ஒன்றரை மாத காலத்துக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்பதால் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் டிரைவர்களுக்கு மின்விசிறி ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. 250 மின்விசிறிகள் முடிந்த நிலையில், மேலும் 250 மின்விசிறிகள் தற்போது பொருத்தப்பட்டுவிட்டது.
கட்டணமில்லா பேருந்துகள்: அந்தவகையில், மொத்தம் 500 பஸ்களில், டிரைவர் இருக்கைக்கு மேலே மின் விசிறி இப்போது பொருத்தப்பட்டுள்ளது... மகளிர் கட்டணமில்லா பேருந்துகள் உட்பட சாதாரண கட்டண பேருந்துகளின் ஓட்டுநர் இருக்கையிலும் இந்த பேட்டரி மின்விசிறி பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால், புதிதாக வாங்கப்பட்ட பஸ்களில் ஏற்கனவே இந்த வசதி உள்ளது..
அடுத்த சில நாட்களுக்குள் இந்த பணிகள் முழுமையாக முடிந்துவிடும். இந்த மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது, தங்களுக்கு மிகுந்த வசதியாக உள்ளதாகவும் டிரைவர்கள் கூறுகிறார்கள்.
வெந்நீர்: என்ஜின் சூட்டோடு சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கமும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதால் டிரைவர், கண்டக்டர்கள் அதிகளவில் தண்ணீர் குடிக்கிறார்கள். பாட்டிலில் அடைத்து வைக்கப்படும் தண்ணீரும் சிறிது நேரத்தில் வெந்நீராகிவிடுகிறது..
முக்கியமாக, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரைக்கும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் டிரைவர்களும் சோர்வடைந்து விடுகிறார்கள்.. வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், காற்றோட்டமில்லாமல் டிரைவர்கள் சிரமப்படுகின்றனர்..
பணியாளர்கள்: மற்றொருபுறம் பணியாளர்கள் நலன் சார்ந்து, பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். பணிமனை மற்றும் முக்கிய பஸ் நிலையங்களில் பணிபுரிவோருக்கு, மோர் வழங்கப்பட்டு வருகிறது.. அதேபோல, மாநகர பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு ஓ.ஆர்.எஸ். (ORS) உப்பு கரைசல் வழங்கப்பட்டு வருகிறது.. பேருந்து நிலையங்களிலும் குடிநீர் வசதிகள் எந்நேரமும் உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளனர் அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications