ரூட் கிளியர்.. "பச்சை, மஞ்சள், சிவப்பு".. சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. என்னன்னு பாருங்க..!
சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புது முயற்சி எடுக்கப்பட்டுள்ளது
சென்னை: சென்னை என்றாலே டிராபிக் என்ற சொல் இனி மாற போகிறது.. ரிமோட் சிக்னல்களை வைத்து புது முயற்சியை போக்குவரத்து துறையினர் கையில் எடுத்துள்ளது, சென்னைவாசிகளை வியக்க வைத்து வருகிறது.
தமிழகத்தின் தலைநகர் என்பதால், சென்னையை யாராலும் தவிர்க்க முடிவதில்லை.. சென்னையில் பல பிரதான இடங்கள் எந்த அளவுக்கு புகழ்பெற்றதோ, அதே அளவுக்கு பேசுபொருளாகிவிடுவது சென்னையின் போக்குவரத்து நெரிசலும்தான்..!
பள்ளி கல்லூரி நேரங்களிலும் டிராபிக்.. வாகனங்களின் அதிக எண்ணிக்கையால் டிராபிக்.. விழா என்றாலும் டிராபிக்.. ஊர்வலம் என்றாலும் டிராபிக்.. போராட்டம் என்றாலும் டிராபிக்.. வெயில் மழை என்றாலும் டிராபிக்.. என நெரிசலை அடையாளப்படுத்தி கொண்டே இருக்கிறது சென்னை..!

ரயில், மெட்ரோ
இதனால் சென்னைவாசிகள் மட்டுமல்ல, வெளியூரில் இருந்து யார் சென்னைக்கு வந்தாலும், அவர்கள் அஞ்சி நடுங்குவதே இந்த டிராபிக்கை பார்த்துதான்.. இதற்கு பயந்துகொண்டே மக்கள், ரயில், மெட்ரோ என தாவிவிடுகிறார்கள்.. அதேசமயம், குறிப்பிட்ட நேரத்துக்கு குறிப்பிட்ட இடங்களுக்கு மக்களால் செல்ல முடியாத நெருக்கடியும் ஏற்பட்டுவிடுகிறது.. எவ்வளவுதான் டிராபிக்குகளை போலீசார் கிளியர் செய்தாலும், அவர்களாலும் கட்டுக்கடங்காத வாகனங்களை சமாளிக்க முடிவதில்லை..

கூண்டுகள்
விதிமீறல்களையும் கவனிக்க வேண்டி உள்ளது.. கூண்டுக்குள்ளேயே நிற்பதால், விபத்து ஏற்படாமல் இருப்பதை முழுவதுமாக தடுக்கவும் முடியவில்லை. அதனால்தான், இதற்கெல்லாம் ஒரு தீர்வு தற்போது எடுக்கப்பட்டுள்ளது.. இதனால் விபத்துகளை குறைக்கவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் ரிமோட் முறையில் இயங்கும் சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... இதன் முதற்கட்டமாக 5 இடங்களில் சோதனை ஓட்டமும் தொடங்கப்பட்டுள்ளது..

சிக்னல்கள்
இதனை சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் போக்குவரத்து கூடுதல் ஆணையர் தலைமையிலான போலீசார், ரிமோட் மூலம் இயங்கும் போக்குவரத்து சிக்னல்களை அமைக்க முடிவு செய்தனர்... முதல்கட்டமாக வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் அருகேயுள்ள ஈவிகே.சம்பத் சாலை, எழும்பூர் காந்தி இர்வீன் சாலை, வேப்பேரி ரித்தர்டன் சாலை, எழும்பூர் நாயர் பாலம் பகுதி, புரசைவாக்கம் தாசப்பிரகாஷ் ஆகிய 5 இடங்களில் ரிமோட் மூலம் இயங்கும் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டு, சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது.

சென்னை
விரைவில் சென்னையில் முழுவதும் ரிமோட் மூலம் இயங்கும் சிக்னல்கள் படிப்படியாக அமைக்கப்பட உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிமோட் மூலம் போக்குவரத்து சிக்னல்களை இயக்குவதால், சாலை சந்திப்புகளில் நேரடியாக நின்றுகொண்டு, வாகனங்களின் எண்ணிக்கை, நெரிசலுக்கு தகுந்தவாறு ரிமோட் மூலம் பச்சை, மஞ்சள், சிவப்பு சிக்னல்களை உடனுக்குடன் மாற்றி அமைக்க முடியும். ஆம்புலன்ஸ் வாகனம் வந்தால்கூட நெரிசலின்றி கடந்து செல்ல உதவ முடியும். மேலும், பாதசாரிகள் சாலையைக் கடக்கவும் உதவ முடியும் என்று போக்குவரத்துதுறை போலீசார் கூறினர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications