ஓஎம்ஆர் சாலை.. பொங்கிய நெட்டிசன்கள்.. தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்பி உடனே செய்த சூப்பர் விஷயம்
சென்னை: தென் சென்னையில் ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளை இணைக்கும் பெரும்பாக்கத்தில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பயன்படுத்துவதற்கு எந்த வகையிலும் லாயக்கற்ற வகையில் உள்ள ஐடி காரிடர் பகுதி சாலைகள் குறித்து நெட்டிசன்கள் புகார் அளித்தனர். இந்த விவகாரத்தில் தென் சென்னை எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் உடனே ஆக்சன் எடுத்துள்ளார்.
சென்னையின் ஐடி காரிடர் பகுதியான ஓஎம்ஆர் சாலை பகுதி தென் சென்னைக்கு மட்டுமல்ல, மொத்த தமிழ்நாட்டிற்குமே மிக முக்கியமான இடமாகும். வேளச்சேரி முதல் சோழிங்கநல்லூர் வரை உள்ள பகுதிகளில் தான் ஏராளமான ஐடி நிறுவனங்கள் இருக்கின்றன. லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டின் முதல் ஐடி காரிடர் பகுதி என்றால் ஓஎம்ஆர் பகுதி தான். ஆனால் இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால், மடிப்பாக்கம் முதல் சோழிங்கநல்லூர் வரை பல பகுதிகளில் சாலைகள் என்பது படுமோசமான நிலையில் இருக்கிறது. இங்குதான் ஐடி நிறுவனங்களில் வேலை செய்யும் பலரும் தங்கியுள்ளார்கள். சாலைகள் பல இடங்களில் சிறிய மழைக்கே தாங்காத அளவிற்கு உள்ளது. அதேபோல் அதிகமான மழை பெய்தால் சாக்கடைகள் அப்படியே பொங்கி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும். பலர் விபத்தில் சிக்காமல் வீடு வந்து சேருவதையே சாதனையாக பார்க்கிறார்கள்.
சென்னை ஓஎம்ஆர் சாலைகளில் மழை வெள்ளம் வந்தால் அந்த பகுதியை ஒட்டியுள்ள சிறிய சாலைகளில் பயணிக்கவே முடியாது. அந்த அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது. பலரும் கடந்த சில நாட்களாக பெரும்பாக்கம், மடிப்பாக்கம் பகுதிகளில் உள்ள சாலைகளை புகைப்படம் எடுத்து தென் சென்னை தொகுதி எம்பியான தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் ஆகியோரை டேக் செய்து புகார் அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யா இரண்டு நாள் முன்பு வெளியிட்ட பதிவில், தென்சென்னை பெரும்பாக்கம் மக்களின் துயரங்களுக்கு முடிவே இல்லையா.. குளோபல் ஹாஸ்பிடல் சாலை எப்போதுமே பரிதாபகரமான நிலையில் இருக்கிறது. கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் மோசமாக உள்ளது. இன்றும் அங்கு ஒரு மாடு இறந்துள்ளது. தென் சென்னை எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் ஆகியோரை தொகுதியில் எங்குமே பார்க்க முடியவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும் பெரும்பாக்கம் சாலையின் நிலை குறித்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார்.
இதற்கு நன்றி தெரிவித்து இந்து என்பவர் வெளியிட்ட பதிவில், இந்த பிரச்சனையை வெளிக்கொண்டு வந்த எஸ்ஜி சூர்யா அவர்களுக்கு நன்றி.. நாங்கள் கடந்த 1 வருடமாக பயணிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். பயணிக்க ஒரு சாதாரணமான சாலையைத்தான் கேட்டு வருகிறோம். இன்று ஒரு மாடு உயிர் இழந்துள்ளது. இந்த பகுதியில் 3 பள்ளிகள் உள்ளது. தினமும் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பயப்படுகிறோம். எங்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்பியை அவர் டேக் செய்திருந்தார்.

இந்த விவகாரத்தில் உடனே ஆக்சன் எடுத்த தமிழச்சி தங்கப்பாண்டியன், அதுபற்றி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், பொதுமக்களிடமிருந்து வந்த புகாரின் பேரில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க, நேற்று (20.06.2024), பெரும்பாக்கம் -மருத்துவமனை பகுதி சாலைகளில், செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி.அனாமிகா ரமேஷ் இ.ஆ.ப தலைமையிலான குழு ஆய்வு செய்துள்ளார்கள்.விரைவில் சாலை அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்கள் என்றார். மேலும் இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications