6 வயசுதான்.. கதறித் துடித்த சிறுமி! வடிவேலுவுடன் இணைந்து நடித்த காமெடி நடிகர் கைது! அதிர்ந்த சென்னை!
சென்னை : நடிகர் வடிவேலு நடித்த எலி படத்தில் அவருடன் இணைந்து நடித்த எலி ராஜு என்ற காமெடி நடிகர் துணை இயக்குனர் ஒருவரின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை விருகம்பாக்கம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் துணை இயக்குனர் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் அவரது ஆறு வயது மகள் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் என கூறப்படுகிறது.

பாலியல் தொல்லை
இந்நிலையில் நேற்று மாலை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மாடிப்பகுதிக்கு விளையாடுவதற்காக அந்த சிறுமி சென்றுள்ளார். அப்போது அதே குடியிருப்பில் வசிக்கும் துணை நடிகர் ராஜு என்பவர் அந்த சிறுமியை தனியே அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது பெற்றோரிடம் அந்த சிறுமி அழுது கொண்டே தெரிவித்துள்ளார் .

துணை நடிகர்
இதனால் அதிர்ச்சி அடைந்த துணை இயக்குனர் தனது மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த விருகம்பாக்கம் காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த துணை நடிகரான ராஜுவை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

வடிவேலுவுடன் நடித்தவர்
போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை மாடி பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது உண்மைதான் என ராஜு ஒப்புக்கொண்டார் இதையடுத்து ராஜுவை கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வாக்குமூலம்
நடிகர் ராஜு யார் எந்த திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறித்து விசாரித்த போது பல தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் வடிவேலு நடிகை சதா உடன் எலி திரைப்படத்தில் ராஜு நடித்திருப்பதும் தற்போதும் சில படங்களில் துணை நடிகராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது சினிமா வாய்ப்புகள் இல்லாத நிலையில் செக்யூரிட்டி உள்ளிட்ட வேலைகளை செய்து வரும் அவர் சம்பவத்தன்று சிறுமி தனியாக இருப்பதை அறிந்து அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications