ஆளுநர் ரவி மனதில் இருப்பதை தமிழக அரசு எப்படி தெரிந்து கொள்ள முடியும்? உச்சநீதிமன்றம் மீண்டும் கேள்வி
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை எந்த ஒரு காரணமும் தெரிவிக்காமலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி வைக்கிறார்; மசோதாவை ஏன் திருப்பி அனுப்புகிறோம் என்ற காரணத்தை தெரிவிக்காவிட்டால் ஆளுநர் ஆர்.என்.ரவி மனதில் என்ன இருக்கிறது என்பதை எப்படி தமிழக அரசால் தெரிந்து கொள்ள முடியும்? என உச்சநீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு விசாரணையில் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்ததாவது: தமிழக அரசு மசோதா ஒன்றை ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறது; ஆனால் ஆளுநர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பி வைக்கிறார்.

2-வது முறையாக மசோதாவை ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்புகிறது. அப்படி மாநில அரசு 2-வது முறையாக அனுப்பும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும். ஆனால் அப்படி ஒப்புதல் தராமல் நீண்டகாலமாக மசோதாக்களை கிடப்பிலேயே போட்டு வைத்திருப்பது ஏன்? ஒப்புதல் தந்தாக வேண்டும் என்பதை தவிர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துவிட்டு கிடப்பிலேயே போட்டு வைக்கிறாரா ஆளுநர்?
மாநில அரசு அனுப்பி வைத்த மசோதாவை நிறுத்தி வைக்கும் முடிவை எடுத்துவிடுகிறார் ஆளுநர். அப்படி ஒரு மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைப்பது என முடிவு எடுத்துவிட்டாலேயே அது காலாவதியாகிவிடும். அப்படியான ஒரு மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு ஆளுநர் ரவி அனுப்பியும் வைக்கிறார். இது ஏன் என்பதற்கு? ஆளுநர் தரப்பில் பதில் தெரிவித்தாலே வழக்கின் விசாரணையும் முடிவடைந்துவிடும்.
தமிழ்நாடு அரசு அனுப்பும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்புகிறார் அல்லது நிறுத்தி வைக்கிறார்.. சரி என்ன காரணத்துக்காக ஆளுநர் இப்படி செய்கிறார்? ஆளுநர் தரப்பில் இந்த காரணம் தெரிவிக்கப்பட வேண்டும்; அப்படி தெரிவிக்காத நிலையில் ஆளுநர் ரவியின் மனதில் என்ன இருக்கிறது என்பது மாநில அரசுக்கு எப்படித்தான் தெரியவரும்? இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதா? மாநில அரசுக்கு இருக்கிறதா? என்ற கேள்வியையும் உச்சநீதிமன்றம் இன்று எழுப்பியது. உச்சநீதிமன்ற நீதிபதி பர்திவாலா பெஞ்ச் இந்த வழக்கு விசாரணையை நடத்தி வருகிறது.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications