விவசாயிகளுக்கு ஹேப்பி.. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த வேளாண் வணிக திருவிழா.. கோலாகலம்
சென்னை: சென்னையில் வேளாண் வணிகத் திருவிழா இன்று நடைபெற உள்ளது.. நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதல்வர் ஸ்டாலின் இந்த திருவிழாவை துவக்கி வைத்துள்ளார்.. இன்றும், நாளையும் 2 நாட்களுக்கு இந்த "வேளாண் வணிகத் திருவிழா 2025" நடைபெற உள்ள நிலையில், உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் இதில் பங்கேற்றுள்ளனர்..
வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதன் சுருக்கம்தான் இது:

நலத்திட்டங்களை வழங்கும் முதல்வர்
"வேளாண்மை மற்றும் தோட்டக்கலை விளைபொருட்களின் மதிப்புக்கூட்டுதல், பதப்படுத்துதல் போன்ற தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து உள்ளூர் மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்பினை அதிகரித்தல், கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்கள், உற்பத்தியாளர்கள்- வணிகர்கள் சந்திப்பு போன்ற பல்வேறு அம்சங்களுடன், உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்தும் அமைப்புகள், ஏற்றுமதியாளர்கள், இயற்கை நல ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த ஆண்டின் 2வது நிகழ்வாக "வேளாண் வணிகத் திருவிழா-2025 "நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் 27.09.2025 மற்றும் 28.09.2025 ஆகிய இரு தினங்களில் நடத்தப்பட உள்ளது.
இவ்விழாவினை மிகச்சிறப்பாக நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. வேளாண் வணிகத் திருவிழா 2025-ஐ முதலமைச்சர் ஸ்டாலின் 27-ம் தேதி தொடங்கி வைத்து, உழவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி விழா சிறப்புரை ஆற்றுகிறார்.
கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள்
இந்த விழாவில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, சர்க்கரைத்துறை, விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம்(ஆவின்), தமிழ்நாடு உணவு பதப்படுத்தல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம், பட்டு வளர்ச்சித்துறை, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், மத்திய அரசின் வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகம் போன்ற அரசுத் துறைகள் மற்றும் அவை சார்ந்த கல்வி நிறுவனங்களும் பங்கேற்கின்றன.
இதுதவிர முன்னணி வேளாண் தொழில் முனைவோருடன் கலந்துரையாடலும் நடைபெறும். இக்கருத்தரங்குகளில், தொழில்நுட்ப வல்லுநர்களும், அனுபவமிக்க வேளாண் பெருமக்களும், ஏற்றுமதியாளர்களும், உயர் அலுவலர்களும் கலந்து கொண்டு பல்வேறு பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.
வேளாண் விளைபொருட்கள்
வேளாண் விளைபொருட்கள் விற்பனை, சந்தைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியினை மேம்படுத்துவதற்காக, வேளாண் விளைபொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் மதிப்புக்கூட்டும்,பதப்படுத்தும், ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுடன் வணிகர்கள் சந்திப்பும் நடைபெறும். இவ்விழாவில், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
வேளாண் வணிகத் திருவிழா 2025-ல் உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வணிகர்கள், ஏற்றுமதியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், இந்த வேளாண் வணிகத் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த வணிக திருவிழாவையொட்டி, 200க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகளும், வேளாண் பொருள்கள், விதைகள் உள்பட வேளாண் சம்பந்தப்பட்ட அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளதால், இந்த அரங்குகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
இதையடுத்து அங்கு நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, புவிசார் குறியீடு பெற்ற வேளாண் பொருட்கள் அடங்கிய நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
இந்த 2 நாள் விழாவை தொடர்ந்து, மதுரை மற்றும் நெல்லை மாவட்டங்களில் வேளாண் வணிக திருவிழா நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதை தொடர்ந்து, ஜனவரி மாதம், மதுரை மற்றும் நெல்லையில் வணிக திருவிழா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications