Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மின்சார வாரியம் சர்ப்ரைஸ்! இபி பில், லோ வோல்டேஜ் இருக்கா? இன்று ஸ்பெஷல் முகாம்.. மின்வாரியம் சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின்சார வாரியம் அடுத்தடுத்த சர்ப்ரைஸ்களை மின்நுகர்வோர்களுக்கு தந்து வருகிறது.. வீடுகளில் ரீடிங் எடுக்கும்போது, மின்கட்டணம் அதிகரித்து வருவதாக கவலைப்பட்டு வரும்நிலையில், மின்கட்டண நடைமுறையையே மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது. அதேபோல, பொதுமக்களின் மின்தொடர்பான பிரச்சனைகளை களையவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தமிழகத்தில் மின் கட்டண முறையில் பெரிய மாற்றம் விரைவில் ஏற்பட போகிறது.. இப்போது 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும்நிலையில் இந்த நடைமுறையை மாற்றி, மாதந்தோறும் மின் கட்டண கணக்கீட்டு முறையை அமல்படுத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

TNEB electricity board Special Camp

இந்த புது நடைமுறையின் மூலம் மக்கள் குறைந்த கட்டணத் தொகையை மாதம் ஒரு முறை செலுத்த முடியும்.. எனவே, இதற்கு பொதுமக்களிடமிருந்து அபரிமிதமான வரவேற்பு கிடைத்து வருகிறது.

புதிய நடைமுறை அமலாகிறது

தமிழகத்தில் வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட மொத்தம் 3.04 கோடி மின் இணைப்புகள் உள்ள நிலையில், இந்த மின் இணைப்புகளுக்கான கட்டணத்தை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கிறது. வீடுகளில் முதல் 100 யூனிட்கள் இலவசமாக வழங்கப்பட்டு, 101 முதல் யூனிட் வரையிலான பயன்பாட்டுக்கு கட்டண முறை அமலில் உள்ளது. இப்போது 2 மாதங்களுக்கு ஒருமுறை கட்டணம் வசூலிக்கப்பட்டு, தாமதமானால் மின் துண்டிப்பு செய்யப்படுகிறது.

இதனால் மாதந்தோறும் மின் கட்டண வசூல் நடைமுறைக்கு மாற்றம் செய்யக் கோரி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், புதிய நடைமுறை கொண்டுவரப்படுகிறது. இதற்கு முதலில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட வேண்டும். கடந்த மாதம் மின்வாரியம் இதற்கான டெண்டரையும் கோரியிருக்கிறது. இன்னும் 3 மாதங்களில் தகுதியான நிறுவனங்களுக்குப் பணி ஒப்படைக்கப்பட்டுவிடும் என தெரிகிறது.

சிறப்பு முகாம்கள்

இதுபோலவே பொதுமக்களின் பிரச்சனைகள், புகார்கள் ஒவ்வொன்றையும் மின்வாரியம் நிறைவேற்றி தந்து வருகிறது.. அந்தவகையில், மாதந்தோறும் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டுகின்றன.

காரணம், தமிழ்நாடு முழுவதிலும் மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து மின் வாரியம் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழக்கூடும்.. மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின்கம்பங்கள் போன்ற பிரச்சனைகளும் எழக்கூடும்.. மின் நுகர்வோரிடமிருந்து பெறப்படும் மின்சார தொடர்பான இதுபோன்ற புகார்கள் உடனடியாக துரிதமாக சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மின்சார துறை அறிவிப்பு

இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் இன்று ஏப்ரல் 5 சனிக்கிழமை சிறப்பு முகாம் நடக்கிறது. இது தொடர்பான மின்சாரத்துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், "தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக 05.04.2025 அன்று தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் சிறப்பு முகாம் மின் நுகர்வோர் & பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணத் தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் இருப்பின், அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு வரும் 05.04.2025 சனிக்கிழமை அன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர்கள்/இ&ப (Executive Engineer/O&M Office) அலுவலங்களிலும் ஒரு நாள் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறைதீர் முகாம் - பொதுமக்களுக்கான வாய்ப்பு

அன்றைய தினம் பெறப்படும் மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு நுகர்வோர் மற்றும் பொதுமக்களுக்கு தீர்வு தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்படும். மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மின்கட்டணப் பிரச்சனை, மீட்டர் பிரச்சனை, வோல்டேஜ் குறைவு, கம்பம் சேதம் போன்ற புகார்களை, இந்த முகாமில் கலந்து கொண்டு பொது மக்கள் தீர்வை பெறலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+