Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குட் நியூஸ்.. குஷியில் துள்ளும் விவசாயிகள்.. 25 லட்சம் ரூபாயா?.. தமிழக அரசு அடுத்த சர்ப்ரைஸ்.. மாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்முடைய விவசாயிகளின் நலனுக்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்துக்காகவும், பல்வேறு உதவிகளையும், அறிவிப்புகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில், இப்போதும் ஒரு சூப்பர் சர்ப்ரைஸ் தந்துள்ளது.

வேளாண் துறையில், தொழிலாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல, விதைப்பு முதல் அறுவடை முடிய அனைத்து சாகுபடி பணிகளையும் வேளாண் இயந்திரங்கள் மூலமாக மேற்கொள்வதற்காக நடவடிக்கையை மேற்கொண்டாலும், ஏராளமான விவசாயிகளுக்கு சொந்தமாக வேளாண் கருவிகள் கிடையாது.

Surprise for the farmers and Tamil Nadu Government announcement raised income loan ceiling to rs25 lakhs

தமிழக அரசு: எனவேதான், வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் தங்களுடைய வீட்டிலிருந்தபடியே, ஆன்லைனில் ரிசர்வ் செய்துகொள்ளும் "இ-வாடகை" என்ற செயலியை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்..

இதன்மூலம் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இயந்திரங்கள் வாடகைக்கு வழங்கப்பட உள்ளன. இதுபோலவே, தமிழக அரசு கொண்டுவந்த இன்னொரு திட்டம் உழவன் செயலி.. 22 வகையான சேவைகளை வழங்கி வருகிறது..

குறுவை சாகுபடி: இதைத்தவிர, பயிர் இழப்பீடுகளையும் அரசு அறிவித்து வருகிறது.. காவிரி பாசன மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்ட குறுவை பயிர் சாகுபடி குறித்து கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 இழப்பீடாக வழங்க முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஒரு சர்ப்ரைஸ் தந்துள்ளார். கூட்டுறவுத்துறையின் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வரும், தானிய ஈட்டுக்கடன் உச்ச வரம்பு10 லட்ச ரூபாயில் இருந்து 25 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது:

பயனாளிகள்: "கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொதுமக்களும், விவசாயிகளும் பயன்பெறும் வகையில் பல்வேறு வகைக் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதிக எண்ணிக்கையில் பயனாளிகள் பயன்பெறும் வகையில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் அனைத்து வகை கடன்களுக்கும் 2023-24-ம் ஆண்டிற்கான குறியீட்டினை அதிகரித்து மறுநிர்ணயம் செய்து வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள், தங்களது மாவட்டங்களில் விளைபொருட்களைச் சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும்போது விற்று பயன்பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சொந்த கிடங்கு வசதி இல்லாத சிறு மற்றும் குறு விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களுக்குச் சொந்தமான கிடங்குகளை பயன்படுத்தி, தானியங்களை பாதுகாப்பாக இருப்பு வைத்துக் கொள்ளலாம்.

தானிய ஈட்டுக்கடன்: மேலும், உடனடி நிதி தேவைக்காக, தானியங்களுக்கு ஈடாக தானிய ஈட்டுக் கடனும் பெறும் நடைமுறையும் வழக்கத்தில் உள்ளது. தானியங்களின் சந்தை மதிப்பில், 75 சவீதம் வரை, 10 சதவீதம் முதல் 11.75 சதவீம் வட்டியில் கடன் பெறலாம். இந்த தொகையை ஓராண்டு தவணையில், ஒரே நேரத்திலோ, மொத்தமாகவோ அல்லது பகுதியாகவோ திருப்பிச் செலுத்தலாம்.

தமிழ்நாட்டில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் 5,47,800 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 4,047 கிடங்குகளைக் கொண்டுள்ளது. அவற்றில் 1,164 கிடங்குகள் ஏற்கெனவே கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தின் அங்கீகாரம் பெற்று பதிவு செய்யப்பட்டுள்ளன.

வேளாண்மை கடன்: இக்கடன், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2023-24-ம் ஆண்டில் 2024-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை 202.98 கோடி ரூபாய் அளவிற்கு 4791 விவசாயிகள் கடன் பெற்று பயனடைந்துள்ளனர்.

அதன்படி, சில மத்தியக் கூட்டுறவு வங்கிகள், விவசாயிகள் அதிகம் பயன்பெறும் வகையில் தானிய ஈட்டுக்கடனின் உச்ச வரம்பை உயர்த்திட கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று கடன் குறியீட்டினை எய்த ஏதுவாகவும், பயனாளிகள் அதிக அளவில் பயனடையும் வகையிலும் தானிய ஈட்டுக்கடன் உச்ச வரம்பு 10 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு விற்பனை: இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு அறிவுரைகளைப் பின்பற்றி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் தானிய ஈட்டுக்கடன் வழங்குதல் தொடர்பாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ள நடைமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக உரிய துணை விதி திருத்தங்கள், ஒழுங்குமுறை விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் நெல், மணிலா, மஞ்சள், சாமை, தினை உள்ளிட்ட தானியங்களை கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்தமான கிடங்குகளில் சேமித்து வைத்து, தானிய ஈட்டுக்கடன் பெறலாம். அதிக விலை கிடைக்கும் போது, தானியங்களை விற்பனை செய்து பயன்பெறலாம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+