Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இதான் உள்குத்து".. ஆளுநருக்கு என்ன சர்ப்ரைஸ் தந்தார் தெரியுமா?.. ராஜ்பவனில் கெத்து காட்டிய ஸ்டாலின்

ஆளுநர் ரவியை சந்தித்து புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று ஆளுநர் ரவியை, தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ள நிலையில், மிக முக்கியமான ஒரு விஷயம் அனைவரையும் உற்று நோக்க வைத்துள்ளது.

இன்றைய தினம் ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.. ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ரவியை நேரில் சந்தித்த முகஸ்டாலின், நீட் விலக்கு மசோதாவை உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பின்போதுதான், முக்கிய பரிசு ஒன்றை ஆளுநருக்கு தந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.. அந்த பரிசு பற்றி சொல்வதற்கு முன்பு, இன்னொரு சம்பவத்தை இங்கே நாம் நினைவுகூர வேண்டி உள்ளது.. முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, ஸ்டாலின் டெல்லி சென்றிருந்தார்.. கடந்த ஜுன் மாதம் சென்றிருந்தார்..

வணக்கம்

வணக்கம்

பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்.. பிரதமருக்கு தமிழில் "வணக்கம்" சொல்லி உள்ளார்.. தமிழ்நாட்டின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தார்... அந்த மனுவில், தமிழக நலன் சார்ந்த பல விஷயங்கள் இருந்தாலும், 13வது பிரிவில் இடம்பெற்றிருந்த தமிழில் மொழி குறித்த கோரிக்கையில் தமிழை, இந்திய அரசின் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவிக்கவேண்டும் மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மீட்டுத் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இருந்தார்.

செம்மொழி

செம்மொழி

அப்படி வலியுறுத்திய நிலையில்தான், தன்னுடைய பரிசாக, "செம்மொழி சிற்பிகள்" என்ற புத்தகத்தை பிரதமருக்கு தந்தார் முதல்வர்.. அதுமட்டுமல்ல, இந்த புத்தகத்தின் முக்கியத்துவம் குறித்து பிரதமருக்கு ஸ்டாலின் பொறுமையாக எடுத்து சொல்லி உள்ளார்... அதாவது, மத்தியில் தமிழை ஆட்சி மொழியாக ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை நீதிமன்றத்தில், நீண்ட காலமாக நிலவி வரும் நிலையில், ஹிந்தி திணிப்பு, சமஸ்கிருதத்தை திணிக்கும் செயல்களை கடந்த காலங்களில் நாம் அதிகமாகவே பார்த்து வந்துள்ளோம்.

 முதல்வர் பரிசு

முதல்வர் பரிசு

இப்படிப்பட்ட சூழலில்தான், அந்த புத்தகத்தை பிரதமருக்கு முதல்வர் பரிசாக வழங்கியிருந்தார்.. இந்நிலையில், இன்று ஆளுநரை சந்திக்க சென்ற முதல்வர், அவருக்கும் ஒரு புத்தகம் பரிசாக வழங்கியிருக்கிறார்.. சமீபகாலமாகவே எந்த முக்கிய தலைவர்களை, ஸ்டாலின் சந்தித்தாலும், இதுபோன்று புத்தகங்களை பரிசாக வழங்குவதை கடைப்பிடித்து வருகிறார்.. அந்த வகையில்தான், இப்போதும் பரிசாக புத்தகம் வழங்கப்பட்டுள்ளது..!

 ஹைலைட்

ஹைலைட்


இந்த புத்தகத்திலும் ஒரு ஹைலைட் உள்ளது.. The Dravidian Model என்பதுதான் அந்த புத்தகத்தின் பெயர்.. இந்த முறை ஆட்சி அமைத்ததில் இருந்தே, திராவிட மாடல் என்ற முழக்கத்தை திமுக முன்னெடுத்து வருகிறது.. அதாவது, தமிழகத்தில் அனைத்துச் சமூகங்களையும், அனைத்து மாவட்டங்களையும், அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சிதான் திமுக-வின் 'திராவிட மாடல்' என்பதற்கான விளக்கம்.. எந்த கூட்டத்துக்கு ஸ்டாலின் சென்றாலும், திராவிட மாடல் வளர்ச்சி பற்றியே பிரதானமாக பேசி வருகிறார். 'திராவிட மாடல் வளர்ச்சியே எனது ஆசை என்றும் சொல்லி வருகிறார்.

ட்வீட்

ட்வீட்

நீட் விலக்கு சட்டத்தை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்புவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளார். அதில், 'The Dravidian Model' நூலை அன்போடு வழங்கி மாண்புமிகு ஆளுநரைச் சந்தித்தேன். #NEET விலக்கு சட்டமுன்வடிவு & நிலுவையில் உள்ள சட்டமுன்வடிவுகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரினேன். #NEET விலக்குச் சட்டத்தைக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்புவதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.

பேச்சு

பேச்சு

அதுமட்டுமல்ல, சில தினங்களுக்கு முன்பு தனது சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் பாகம் 1 வெளியியீட்டு விழாவில், ஸ்டாலின் பேசியபோது, "திராவிட மொழிக் கோட்பாடு இந்தியா முழுமைக்கும் விதைப்பதை தனது பணியாக மேற்கொள்ள உள்ளேன்" என்றும் கூறியிருந்தார்.. இந்த திராவிட மாடல் அரசியலை, அதிமுக உள்ளிட்ட பாஜக தரப்பினர் விமர்சித்து கொண்டு வருகிறார்கள்.. அதிலும் அண்ணாமலையும், எச். ராஜாவும் விடாமல் திமுகவின் திராவிட மாடலை திட்டி தீர்த்து வருகிறார்கள்.

 பேச்சு

பேச்சு

இப்படி மாற்றுக்கட்சிக்காரர்களை கிறுகிறுக்க வைத்தும், காரசாரமாக பேசவைத்தும் வருகிறது இந்த திராவிட மாடல்.. இந்நிலையில்தான், The Dravidian Model: Interpreting the Political Economy of Tamil Nadu' புத்தகத்தை ஆளுநருக்கு வழங்கியுள்ளார் ஸ்டாலின்.. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர்கள் ஆ.கலையரசன், ம.விஜயபாஸ்கர் இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். திராவிட மாடல் என்ற கருத்தாக்கம், தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய நூலாக இது அமைந்துள்ளது.

 திராவிட மாடல்

திராவிட மாடல்

ஆகமொத்தம், திராவிட மாடல் என்பது எல்லா சமூகங்களுக்குமான வளர்ச்சி.. திராவிட மாடல் என்பது எல்லா மாவட்டங்களுக்குமான , சமூகத்தின் எல்லாப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, திராவிட மாடல் என்பது, எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதையே பரிசாக ஆளுநர் கையிலேயே தந்துவிட்டு வந்துள்ளார், தமிழின தலைவர் கருணாநிதியின் மகன் முக ஸ்டாலின்...!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+