மாமியாராமே.. தமிழிசைக்கு நம்ம அருள் மருமகனா.. குடும்ப உறவு தெரிந்து வியந்த தமிழகம்.. அதான் "லெஜண்ட்"
லெஜண்ட் சரவணா அருளுக்கு தமிழிசை சவுந்தராஜன் மாமியார் உறவு ஆகிறதாம்
சென்னை: சாதனையாளர்களையும், வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களையும், உற்று கவனித்தால் ஒன்று நமக்கு விளங்கும்.. அதுதான் அவர்களது தன்னடக்கம்.. அதற்கு உதாரணம்தான் சரவணா ஸ்டோர் அருள்.. அப்படிப்பட்ட செய்திதான் இது.
சினிமாவில் நடித்து புகழ்பெற்று, ஒருகட்டத்தில் வாய்ப்புகளை இழந்துவிட்ட நிலையில், சம்பந்தப்பட்ட நடிகர்கள், அரசியலில் கால்பதித்து விடுவது வழக்கம்.. இல்லாவிட்டால் தாங்கள் சம்பாதித்ததை வைத்து, பிசினஸில் இறங்கிவிடுவார்கள்..
ஆனால், தொழிலதிபராக உயர்ந்து, அதற்கு பிறகு சினிமாவுக்குள் என்ட்ரி தந்தவர்தான் லெஜண்ட் அருள்.. ஒரே கடையில் எல்லாப் பொருட்களும் கிடைக்கும் என்ற கான்செப்டை முதன்முதலில் கொண்டு வந்து, அதன்மூலம் தமிழக மக்களை ஈர்த்தவர்கள் சரவணா ஸ்டோர்ஸ் சகோதரர்கள்.

ஷாப்பிங்
அந்த குடும்பத்தின் வாரிசான அருள், பெற்றோர்கள் சேர்த்து வைத்த சொத்தை மட்டுமே நம்பாமல், பிசினஸில் தன் உழைப்பையும், நம்பிக்கையையும் அபரிமிதமாக கொட்டி திணற வைத்தார்.. இந்தியாவிலேயே பெரிய மல்ட்டி ஸ்டோர் கடையை கொண்டுவந்து, அசர வைத்தார்.. உலகிலேயே அதிகளவு தங்கநகை டிஸ்ப்ளே செய்யும் கடையை துவங்கி மிரள வைத்தார்.. விளம்பர படங்களில் நடித்து, தொடர்ந்து குவியும் விமர்சனங்களை தன்னம்பிக்கையால் தகர வைத்தார்.. ஷாப்பிங் என்றாலே தி.நகர் என்பதை மாற்றி, சென்னையின் புறநகரான பாடி பக்கமும் மக்களை திரண்டு வர வைத்தார்..

பிரம்மாண்டம்
கோடிக்கணக்கான நிதியை மக்களுக்கு வழங்கிய மனிதாபிமானத்தால், வடிவேலுக்கு பிறகு அதிகமாக டிரோல் செய்தவர்களின் வாயை அடைத்துப்போக வைத்தார்.. இன்று இளம் தொழிலதிபர்களுக்கு ஊக்கத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகிறார் அருள்.. சினிமாவில் பிரம்மாண்டம் என்றாலே சங்கர் என்பதுபோல், விளம்பரங்களில் பிரம்மாண்டம் என்றால் அருள் என்று சொல்லக்கூடிய அளவுக்கு, புதுமைகளை கொண்டு வருகிறார் அருள்.. உழைப்பால் உயர்ந்தவர்களுக்கு என்றுமே தோல்வியில்லை என்பதை, ஆழமாகவும், நிதானமாகவும், பக்குவமாகவும் நேரடியாகவே வாழ்ந்து காட்டி வருகிறார் அருள்..!

மாமியார்
இத்தனை சிறப்புகளை அருள் தனித்துவமாக பெற்றிருந்தாலும், இன்னொரு சிறப்பும் அவரது குடும்பத்துக்கு உள்ளது என்பது பரவலாக யாரும் அறியாத உண்மை.. சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருளின் மனைவியும், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் நெருங்கிய உறவுகாரர்களாம்.. முதலில் இந்த தகவல் வெளிவந்ததும் யாருமே நம்பவில்லை.. பிறகுதான், குடும்ப உறவுகள் பின்னணி பற்றி உறுதியான தகவல்கள் வெளியாகி வருகின்றன.. தமிழிசையின் அம்மாவும், அருள் மனைவியின் அம்மாவும் சின்னம்மாள் உறவு முறை.. அப்படியானால், தமிழிசைக்கு, அருள் மனைவி அக்காள் மகள் உறவு என்று தெரியவந்துள்ளது.. அப்படியானால் அருளுக்கு தமிழிசை மாமியார் உறவுமுறை...
Recommended Video

லெஜெண்ட்
இந்த விஷயம் தெரிந்ததுமே தமிழக மக்கள் ஆச்சரியப்பட்டு, தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.. இத்தனை காலமாக நம் தமிழக அரசியலில் மிகப்பெரும் செல்வாக்காக வலம் வருபவர் தமிழிசை.. பாஜக மாநில தலைவராக இருந்தபோதும் சரி, இப்போது தெலுங்கானா ஆளுநராக உயர்ந்தபோதும்சரி, அக்கா என்ற அடைமொழியுடன் நம் மக்கள் பாசத்தை பொழிந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. ஆனாலும், இப்படி ஒரு குடும்ப உறவு இருப்பதை அருள் இப்போது வரை தன்னடக்கத்தால் வெளியே சொல்லவில்லை.. அதனால்தான் அவர் "லெஜெண்ட்"!












Click it and Unblock the Notifications