"இந்த" தேதிக்கு போங்க.. டோக்கனை வாங்காமல் விட்டவர்கள், பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவது எப்படி தெரியுமா
பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்கள் குறித்து ஐஏஎஸ் ராதாகிருஷ்ணன் பேட்டி தந்துள்ளார்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு ரூ.1,000 ரொக்கம், அரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் நேற்று தொடங்கியது. இதையொட்டி டோக்கன் பெற்றவர்கள் காலையிலேயே ரேஷன் கடைகள் முன்பு கூடினர்.

பயோமெட்ரிக்
ஆனால் சில இடங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தாமதமாக தொடங்கப்பட்டதால் குடும்ப அட்டைதாரர்கள் அவதிக்கு உள்ளாகினர். மேலும் பயோமெட்ரிக் எந்திரத்தில் குடும்ப அட்டைதாரர்களின் கைரேகை பதியப்பட்டு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டதால் தாமதம் ஆனதாகவும் சொல்லப்பட்டது.. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான ரேஷன் கடைகளிலும், அரியலூர் மாவட்டத்தில் சில கடைகளிலும் சர்வர் கோளாறு காரணமாக பயோ மெட்ரிக் எந்திரத்தில் கைரேகை சரியாக பதியாததால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

வெய்யில் தாக்கம்
சில கடைகளின் முன்பு வரிசையில் நின்றிருந்த குடும்ப அட்டைதாரர்கள் விற்பனையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை காண முடிந்தது. நேரம் ஆக ஆக வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் குடும்ப அட்டைதாரர்கள் வரிசையில் நிற்க முடியாமல் நிழல் இருந்த பகுதியில் ஆங்காங்கே அமர்ந்து கொண்டனர். குடிநீர் வசதி இல்லாததால் பலர் தாகத்தால் தவித்தனர். சிலர் பிறகு வந்து வாங்கி கொள்ளலாம் என்று வீட்டிற்கு சென்று விட்டனர். சிலருக்கு டோக்கன் வழங்கப்படவில்லை சில குடும்ப அட்டைதாரர்களுக்கு வீட்டிற்கு சென்று டோக்கன் வழங்கப்படாததால், அவர்கள் ரேஷன் கடைக்கு வந்து டோக்கன் வாங்கி சென்றதை காண முடிந்தது.

சர்வர் கோளாறு
சர்வா் கோளாறால் ஒரு குடும்ப அட்டைதாரர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கி சென்றதையும் காண முடிந்தது. இந்நிலையில், கூட்டுறவுத்துறை செயலாளர் ஐஏஎஸ் ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களுக்கு பேட்டி தந்திருக்கிறார்.. அதில், ரேஷன் கார்டுகளில் டோக்கன்களை பெறுவது குறித்தும், டோக்கன்களை டோக்கனை வாங்காமல் விட்டவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவது எப்படி என்பது குறித்தும் விளக்கமாக சொல்லி உள்ளார்.

அமைச்சர் பெருமக்கள்
"மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர், மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர், ஆகியோர் ஆய்வு கூட்டங்களை நடத்தி அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சனையின்றி நடப்பதற்கு 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது.. வீடு பூட்டப்பட்டதாலோ, அல்லது அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்றவர்களை தவிர, மற்ற 95 சதவீதம் பேருக்கும் டோக்கன்கள் எந்த நேரத்திலும் கிடைக்க தயாராக உள்ளது.. பதட்டப்படாமல், உங்களுக்கு குறித்த நேரத்தில் நீங்கள் போய் வாங்கி கொள்ளலாம்.

1000 ரூபாய்
யாருக்காவது டோக்கன் விட்டுப்போயிருந்தால் 13ம் தேதி வரைக்கும் கடைகளை திறந்துவைக்க சொல்லி உள்ளோம்.. அதனால் தேவையற்ற பதற்றம் வேண்டாம். பச்சரிசி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.. சர்க்கரை 1 கிலோ வைத்திருக்கிறோம்.. அதே மாதிரி, முழு கரும்பும் எல்லா இடத்திலும் போய் சேர்ந்துள்ளது.. விவசாயிகளும் அதை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்துள்ளார்கள்.. 1000 ரூபாய் ரொக்கம் உட்பட, ஆக மொத்தம் இந்த திட்டத்துக்காக மட்டும் 2429 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இந்த திட்டத்தையொட்டி செய்யப்பட்டுள்ளது.. அடுத்த 4 நாட்களுக்குள் டோக்கன்கள் தந்து முடிக்கப்படும்..

நல்ல சர்க்கரை
எங்காவது சிறு பிரச்சனைகள் என்றாலும், மாவட்ட அளவிலேயே அதை சரி செய்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.. குடும்ப அட்டையில் உள்ள எந்த உறுப்பினர் வேண்டுமானாலும் சென்று டோக்கன் பெறலாம்.. வயதானவர்கள் அல்லது யாராவது வராமல் போய்விட்டால், அதற்கான பதிவேடும் தயார் செய்யப்பட்டு வருகிறது.. ஒன்றரை லட்சம் டன் கரும்பு கையிருப்பில் உள்ளது.. மொத்தமாக அனுப்பிவிட்டால் அவைகள் காய்ந்து போய்விடக்கூடாது என்பதால், படிப்படியாக அனுப்பி வைத்து வருகிறார்கள்.. இப்போது நல்ல சர்க்கரை, 6 அடிஉயரமுள்ள கரும்பு நமக்கு கிடைத்துள்ளது.. பொங்கல் பரிசு தொகுப்பு குறைவில்லாமல் அனைவருக்கும் தரப்படும்..

பயோமெட்ரிக்
எல்லா இடத்திலும் கண்காணிப்பு வைத்துள்ளோம்.. அப்படியே குறைகள் இருந்தாலும் அதை சரி செய்ய தயாராக இருக்கிறோம். 97 சதவிதம் பயோமெட்ரிக்கில் பக்காவாக விழுந்துவிடுகிறது.. ஒருவேளை வயதானவர்கள் அல்லது வேறு காரணத்தினால், பயோமெட்ரிக்கில் விழாவிட்டால், அவர்களுக்காக பிரத்யேகமாக தனி கையேடும் தயார் செய்யப்பட்டு வருகிறது.. இந்த ஆண்டு, புதுமையான 35 ஆயிரம் கடைகளில், "நம்ம பகுதி, நம்ம கடை ரேஷன் கடைகள்" திட்டத்தின்கீழ் 4585 கடைகள் புதுக்கப்பிட்டுள்ளது.. " என்றார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications