சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சிக்ஸர்".. தேங்காயை விடுங்க.. விரைவில் ரேஷன் கடையில் "இது" தரபோறாங்களாம்.. படக்குனு பார்க்குதே பாஜக

ரேஷன் கடைகளில் விரைவில் தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என்று தெரிகிறது

Google Oneindia Tamil News

சென்னை: ரேஷன் கடைகளில் விரைவில் முக்கிய பொருள் ஒன்றினை நமக்கு தரப்போகிறார்களாம்.. அந்த நல்ல செய்தியைதான் தமிழக அமைச்சர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.. இதை பாஜக உற்றுநோக்கி வருகிறது.. என்ன காரணம்?

இந்த முறை, பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்தனர்.. இதனால், விவசாயிகளும் ஏமாற்றமடைந்தனர்.

எனவே, பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்பும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு உடனடியாக வெளியானது..

ராமநாதபுரத்தில் மோடிக்கு சவால்.. மண்ணைக் கவ்வுவது உறுதி.. அதுக்கு நாங்க கேரண்டி.. பரபரத்த போஸ்டர்! ராமநாதபுரத்தில் மோடிக்கு சவால்.. மண்ணைக் கவ்வுவது உறுதி.. அதுக்கு நாங்க கேரண்டி.. பரபரத்த போஸ்டர்!

திருப்பியடி

திருப்பியடி

முன்னதாக, பரிசு தொகுப்பில் முழுக் கரும்பை வழங்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால், ஜனவரி 2ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார்.. ஆனால், தமிழக அரசு, அந்த போராட்டத்துக்கு முன்னதாகவே கரும்பு அறிவிப்பினை வெளியிட்டது.. இந்த அறிவிப்பை பார்த்ததுமே எடப்பாடி பழனிசாமி,, "அதிமுக போராட்டம் என்று அறிவித்த சில மணி நேரங்களிலேயே பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது, இது அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி".. என்றார்.. ஆனால், இதற்கு திமுக பதிலடி தந்தது..

நூல் நூல்கள்

நூல் நூல்கள்

இதற்கு பிறகு கரும்பை விட்டுவிட்டு, பொங்கலுக்கு இலவச வேட்டி சேலைகள் விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி.. இலவச வேட்டி சேலைகள் நெய்வதற்கு தரமற்ற நூல்களை அரசு வழங்கியுள்ளதாகவும், வேட்டி சேலை வழங்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றார்.. இந்த அறிக்கைக்கும் திமுக அரசு பதிலடி தந்தது.. "இலவச வேட்டி சேலை வழங்குவது தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் 19ம் தேதியே முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தியிருந்தார். இலவச வேட்டி சேலைகளுக்காக ரூபாய் 487.92 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அந்த விவகாரத்தையும் முடிவுக்கு கொண்டுவந்தது.

பாமாயில்

பாமாயில்

இதற்கு பிறகு, பாஜகவினர் தேங்காய் பிரச்சனையை ஆரம்பித்தனர்.. பொங்கல் பரிசு தொகுப்புடன் தமிழக அரசு தேங்காய்கள் வழங்க வேண்டும் என்று கூறி, தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். மேலும், பள்ளி -மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்த கோரியும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.. இதற்கு திமுக அமைச்சர், "மோடி வேண்டுமானால் தேங்காய் கொடுக்கட்டுமே.. அப்படி தந்தால், நாங்கள் அதனை வரவேற்கிறோம்" என்றும் கருத்து கூறியிருந்தார்.

சூப்பர் தகவல்

சூப்பர் தகவல்

இப்போது விஷயம் என்னவென்றால், ரேஷனில் தேங்காய் எண்ணெய்யை தர போகிறார்களாம். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சாணம்பட்டியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கு உள்ளது. இங்கு பொங்கல் பரிசு தொகுப்பு அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்டவைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அவைகளை தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேரில் ஆய்வு செய்தார்.. அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் சொன்னபோது, கடந்த ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.

ஹேப்பி நியூஸ்

ஹேப்பி நியூஸ்

தொடர்ந்து அவர் பேசும்போது, "பாஜக கட்சி அரசியல் ஆதாயத்துக்காக போராட்டம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் விவசாயிகள் தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்... இந்த கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆக, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விரைவில் வழங்கப்படும் என தெரிகிறது.. ஒருவேளை தேங்காய் எண்ணெய் வழங்கப்பட்டுவிட்டால், அது பாஜகவுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுமா என்பது தெரியவில்லை.. எப்படியோ, ரேஷன் தேங்காய் எண்ணெய்யால், விவசாயிகளும், மாணவ மாணவிகளும் பலன் பெற்றால் நமக்கு மகிழ்ச்சிதான்..!!

10000

10000

நியாயவிலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோவை மாவட்ட ஆட்சியரும் பரிந்துரை செய்திருக்கிறார் என்று தெரிவித்த அமைச்சர் சக்ரபாணி, இன்னொரு முக்கிய தகவலையும் தெரிவித்துள்ளார்.. "தமிழகம் முழுவதும் 2 கோடியே 10 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ரொக்க பணம் வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை, ரேசன் கடை ஊழியர்கள் மட்டுமே வழங்குவார்கள்.. இதில் 100 சதவீதம், அரசியல் தலையீடு எதுவும் இருக்காது.. கரும்பு கொள்முதலில் விவசாயிகளுக்கு கரும்புக்கு 33 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது...

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

மழைக்காலங்களில் திறந்த வெளியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் தானியங்கள் நனைவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.. அதன் அடிப்படையில் மேற்கூரை வசதியுடன் 108 தானியக்கிடங்குகள் கட்டப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.. 2.19 கோடி மக்கள் குடும்ப அட்டைதார்களுக்கும், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகளுக்கும் பொங்கல் பரிசு தொகை வழங்கும் திட்டம் நாளை மறுநாள் தமிழக முதல்வர் துவங்கி வைக்க உள்ளார். பொருளை வாங்க முடியாதவர்கள் 16- ம் தேதி பொருட்களை பெற்று கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூடுதல் தகவல்களை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

English summary
Sweet news by tn minister sakkarapani and action to distribute coconut oil in ration shops
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X