சர்க்கரை நோயாளிக்கு தித்திப்பு செய்தி.. ஊசி குத்தாமலே சுகர் லெவலை பார்க்க வாட்ச்! சென்னை ஐஐடி சக்சஸ்
சென்னை: சென்னை ஐஐடி பொதுமக்களுக்கு பயன்படும்விதத்தில் ஏராளமான ஆராய்ச்சிகளை செய்து, மகத்தான கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த செலவில் பல்வேறு கருவிகளை தயாரிப்பதே சென்னை ஐஐடியின் முக்கிய குறிக்கோளாக இருந்து வருகிறது.. அந்தவகையில் மீண்டும் ஒரு சாதனையை சென்னை ஐஐடி செய்துள்ளது.. இது நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
கடந்த 2023ல், ICMR என்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.. அதில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், 10.1 கோடி பேர் நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதிகரித்து வரும் நோயாளிகளுக்கு ஏற்ப, பரிசோதனைகளும் மேம்பட்டு வருகின்றன.

பயனுள்ள சாதனம்
வழக்கமாக ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் முறையான சுய-ரத்த குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தில் நாளொன்றுக்கு பலமுறை விரலில் ஊசி மூலம் ரத்த மாதிரிகளை எடுக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் இந்த SMBG சாதனத்தில் தினமும் பலமுறை விரலில் குத்தி குத்தி ஒரு துளி ரத்தத்தை எடுக்க வேண்டியிருக்கிறது.. இது பயனுள்ள சாதனம் என்றாலும், ஊடுருவக் கூடியதாகும். மேலும் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு, வேறு பொருத்த வேண்டியிருக்கிறது. இதற்கு கூடுதல் செலவாகிறது.
ரத்த சர்க்கரை அளவு
எனவேதான் செலவை குறைக்கவும், விரைந்து சர்க்கரை அளவை தெரிந்து கொள்ளவும், நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும்வகையில், மிக மிக குறைந்த செலவில் ரத்த சக்கரையை அளவிடும் அதிநவீன கருவியை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.
சென்னை ஐ.ஐ.டி.,யின் உலோகவியல் மற்றும் பொருட்கள் இன்ஜினியரிங் துறையின் மின்னணு பொருட்கள் ஆய்வகத்தின் பேராசிரியர் சுவாமிநாதனின் தலைமையிலான குழுவினர் இந்த புதிய கருவியை கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அதன்படி, தினமும் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை, நம்முடைய செல்போனிலேயே தெரிந்து கொள்ள முடியும்.. அப்படியொரு கருவியைதான் சென்னை ஐஐடி கண்டுபிடித்துள்ளது.. வாட்ச் வடிவத்தில் கை பட்டை போல இந்த கருவியை உருவாக்கியிருக்கிறார்கள்.. இதற்கு லைன்சையும் பெற்றாகிவிட்டது.
வாட்ச் வடிவ சாதனம்
இந்த கை கடிகாரத்திற்கு கீழே, சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இதிலுள்ள 1 மி.மீ., அளவிலான ஊசியானது, ரத்த நாளங்களுக்கு மேல் இருக்கும் திரவங்கள் வழியே, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை உடனடியாக கணக்கிட்டு, கை கடிகாரத்தின் ஸ்கிரீனில் காட்டிவிடும்.. இந்த கருவியில் ஊசியை மட்டும் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்.
தங்களின் புதிய கண்டுபிடிப்பு குறித்து பேசிய பேராசிரியர் பரசுராமன் சுவாமிநாதன், "நீரிழிவு உள்ளவர்கள் ஒரு நாளைக்கு பலமுறை விரலை குத்தி ரத்தத்தை வெளியேற்றும் செயலுக்கு நாங்கள் மாற்றத்தை கொண்டு வந்துள்ளோம். கை விரல்களில் ஊசியை குத்தி, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை அறியும், அசவுகரியத்தை தாங்கள் கொண்டுவந்துள்ள புதிய கண்டுபிடிப்பு மூலம் தவிர்க்கலாம்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு
இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது: "ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கண்டறியப் பயன்படுத்தப்படும் ரத்த கண்காணிப்பு கருவியானது, ஒருசில வரைமுறைகளுடன் அதிக செலவு கொண்டதாக இருக்கிறது. இது ஏழை மற்றும் எளிய மக்களுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தும்.
அதோடு, இந்தக் கருவிகளின் மூலம் எடுக்கப்படும் மாதிரிகளில் உள்ள சர்க்கரை அளவைத் தெரிந்து கொள்ள அதிநவீன சாதனங்களும், திரைகளும் தேவைப்படுகின்றன.
இந்நிலையில் மிக குறைந்த செலவில் சென்னை ஐஐடி இரத்த சர்க்கரையை கண்டறியும் கருவியை கண்டுபிடித்துள்ளது. மேலும் இந்த சாதனம் துல்லியமான அளவீடுகளைக் கொடுப்பதால் அதிக நம்பகத்தன்மை கொண்டதாகவும் உள்ளது.
நுண்ணிய ஊசிகள்
ஒருமுறை ரத்த மாதிரியை எடுத்த பிறகும் கூட, இந்த சாதனத்தை மீண்டும் பயன்படுத்த முடியும். குறைந்த சக்தி கொண்ட திரைகளின் மூலம் சர்க்கரை அளவை பார்த்துக் கொள்ளலாம். மேலும் இதில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நுண்ணிய ஊசிக்காண தொலை உணர்வு அமைப்பும் உள்ளது.
உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே இந்த சாதனம் தயாரிக்கப்பட்டு இருப்பதால், இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் மருத்துவ தொழில்நுட்ப சாதனங்களை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications