ஆரம்பமே அசத்தல்.. நாள் குறிச்சாச்சாமே.. தமிழகத்துக்கு விரைவில் புது அமைச்சர்?.. அனலடிக்கும் அறிவாலயம்
உதயநிதி ஸ்டாலினுக்கு விரைவில் அமைச்சர் பதவி கிடைக்கும் என்கிறார்கள்
சென்னை: விரைவில் அறிவாலயத்தில் இருந்து நல்ல செய்தி ஒன்று வரப்போகிறது என்கிறார்கள்.. இதனால், திமுக தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு கலந்த மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த முறை திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே உதயநிதிக்கான அமைச்சர் பதவி பேச்சு ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.. ஒவ்வொருமுறையும் அதுகுறித்த செய்திகளும் மீடியாவில் இடம்பிடிப்பதும், பிறகு சத்தமே இல்லாமல் காணாமல் போவதும் தொடர்ந்து கொண்டே வருகிறது.
கடந்த ஜுன் 3-ம் தேதி மறைந்த கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாடுவது குறித்த தீர்மானத்தோடு, திமுக உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

தர்மசங்கடம்
ஆனால், இதற்கு உதயநிதி அப்போதே ரியாக்ட் செய்திருந்தார்.. அமைச்சராக வேண்டும் என்று தொண்டர்கள் தொடங்கி அமைச்சர்கள்வரை பேசிவந்த நிலையில், இப்போது ஆங்காங்கே அதற்கான தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், இப்படித் தீர்மானங்கள் நிறைவேற்றி தலைமைக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று உதயநிதி அறிக்கை வெளியிட்டு கேட்டுக் கொண்டிருந்தார்.. அத்துடன் அமைச்சர் பதவியை ஏற்கவே மாட்டேன் என்றோ அல்லது அமைச்சர் பதவி கிடைத்தாக வேண்டும் என்றோ உதயநிதி ஒருநாளும் சொன்னதில்லை என்பதையும் குறிப்பிட வேண்டி உள்ளது.

மெச்சூரிட்டி இல்லையே
உதயநிதிக்கு அமைச்சர் பதவி என்றதுமே, அதுகுறித்து 2 விதமான அலசல்கள் சோஷியல் மீடியாவில் வலம் வந்தன.. முதல் ஆளாக வழக்கம்போல் பாஜக கொந்தளித்தது.. ஸ்டாலின் பல ஆண்டுகள் அரசியல் அனுபவம் பெற்று முதல்வராக ஆட்சிபுரியும்போது, உதயநிதியின் அரசியல் முதிர்ச்சியின்மை உள்ளது.. மக்களின் தேவை குறித்த நல்ல சிந்தனை எந்த அளவுக்கு உள்ளதென்று தெரியவில்லை.. வாரிசு என்ற அடிப்படையில் அமைச்சராக்க வேண்டும் என்று சொல்வது மக்களைத்தான் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும்... மேலும் திமுகவில் இருக்கும் மூத்த தலைவர்களையும் முகம் சுளிக்கவைக்கும்...

மனசாட்சி
சட்டரீதியாகப் பார்த்தால் அவர்கள் செய்வது சரி என்றாலும், மனசாட்சியின்படி, ஜனநாயகத்தின்படி அதிகாரம் அனைத்தையும் தன் குடும்பத்தினருக்கே கொடுப்பது எந்த வகையில் சரியானதாக இருக்கும்? என்றெல்லாம் தங்கள் கருத்தை முன்வைத்தனர். மற்றொருபக்கம், உதயநிதியின் அரசியல் பிரமிப்பை கூட்டுவதாகவே உள்ளதாக, திமுக தொண்டர்கள் முதல் மூத்த தலைவர்கள் நெகிழ்ந்து சொல்கிறார்கள்.. இளைஞரணி செயலாளராக கட்சிக்கும், சட்டமன்ற உறுப்பினராக தொகுதி மக்களுக்கும் உதயநிதி செய்த பணிகள் அளப்பரியவை..

டாப் கியர்
சேப்பாக்கம் தொகுதி மக்களை போய் கேட்டுப் பாருங்க.. உதயநிதிக்கு அமைச்சர் போஸ்டிங் என்பது, முதலில் அமைச்சர்களின் கருத்தாக இருந்து, பிறகு தொண்டனின் கருத்தாக மாறி, கடைசியில் மக்களின் விருப்பமாகவும் மாறிவிட்டது என்று அடித்து சொல்கிறார்கள் உடன்பிறப்புகள். இப்படியான விவாதங்களும், சலசலப்புகளும், ஆதரவுகளும், எதிர்ப்புகளும் மாறி மாறி எழுந்த நிலையில், அவையெல்லாம் தற்போது ஓரளவு ஓய்ந்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.. அதனால்தானோ என்னவோ, மீண்டும் உதயநிதிக்கு அமைச்சர் பதவி என்ற பேச்சு, வட்டமடிக்க ஆரம்பித்துள்ளது..

பொதுமக்கள்
அமைச்சர்களின் தொகுதியில் நடக்கும் நலத்திட்ட உதவிகளைகூட, உதயநிதியை அழைத்து, அவர் கையாலேயே துவக்கி வைக்கும் அளவுக்கு, அவருக்கான முக்கியத்துவம் கட்சியில் உயர்ந்துள்ள நிலையில், விரைவில் உதயநிதிக்கு பதவி கிடைக்க போவதாக சொல்கிறார்கள்.. குறிப்பாக, டிசம்பர் மாதம் அமைச்சர் பதவி கிடைக்குமாம்.. அதுமட்டுமல்ல, பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும்படியான கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் துறைக்கு அமைச்சராக்கவும் ஆலோசனைகள் நடந்து வருவதாக சொல்கிறார்கள்.. இப்படி ஒரு யூகமான தகவல், சோஷியல் மீடியாவில் வலம்வரும் நிலையில், திமுக தொண்டர்கள் மிகுந்த குஷியில் காணப்படுகின்றனர்.. நல்ல செய்தி எப்போது வருமோ என்று உதயநிதி ஆதரவாளர்களும், அறிவாலயத்தை எதிர்நோக்கியே உள்ளார்களாம்..!!!












Click it and Unblock the Notifications