கடலோர மாவட்டங்களில் வியர்வை மழை... மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை
மகாராஷ்டிரா முதல் தென் தமிழக கடலோர பகுதிவரை வளிமண்டல சுழற்சி நிலவுவதால் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் இந்த மாதம் முழுவதும் வெக்கை- புழுக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை அதிகம் இல்லாத நிலையில் வெக்கை அதிகமாக இருக்கும் வியர்வை மழையில் நனையப்போகிறீர்கள் என்றும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் அனல்காற்று வீசினாலும் ஆங்காங்கே கோடை மழை பெய்து குளிர்வித்து வருகிறது. கடந்த இரு தினங்களாகவே மீண்டும் வெப்பம் சுட்டெரித்து வருகிறது.
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வெக்கையும் புழுக்கமும் அதிகரித்து வியர்வை மழையில் நனைந்து வருகின்றனர்
இதற்கான காரணத்தை வானிலை மையம் இன்று அறிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், மகாராஷ்டிரா முதல் தென் தமிழக கடலோர பகுதிவரை வளிமண்டல சுழற்சி நிலவுவதாக கூறினார்.

எங்கெங்கு மழை பெய்யும்
இன்றைய தினம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், திருப்பத்தூர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

உள் மாவட்டங்களில் மழை
24ஆம் முதல் 27ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும்.

வியர்வை புழுக்கம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.

காரணம் என்ன?
காற்றில் நீரின் அளவு கூடுவதால் இந்த விளைவு ஏற்படுகிறது. இந்த மாதம் முழுவதும் வெக்கை புழுக்கம் அதிகமாக இருக்கும். வெப்பநிலை அதிகம் இல்லாத நிலையில் வெக்கை அதிகமாக இருக்கும் என்றும் புவியரசன் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications