உதயசந்திரன் புட்டு புட்டு வெச்சிட்டாரே.. "மானியம்" பற்றி நிதித்துறை செயலர் சொன்னதுமே, கவனித்த டெல்லி
சென்னை: ''தமிழகத்தில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. இது தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது என்று நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், 2024-25 நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 3.44 சதவீதமாக இருக்கும் எனவும் நிதித்துறை செயலாளர் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இன்றைய தினம் கிட்டத்தட்ட 2.07 மணி நேரம் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றினார்.

முக்கிய அம்சம்: அப்போது, பல்வேறு புதிய திட்டங்களையும், விரிவாக்க திட்டங்களையும் தன்னுடைய உரையில் அறிவித்தார். எம்பி தேர்தல் நெருங்கும் நிலையில் சிறு, குறு தொழில்கள், மகளிர் மேம்பாடு, இளைஞர் நலன் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு ரூ.12,000 கோடியில் மெட்ரோ ரயில் சேவை, மகளிர் உரிமைத் தொகைக்கு ரூ.13,720 கோடி, புதுப்பெண் திட்டம் அரசு உதவிப் பெறும் பள்ளிகளுக்கு விரிவுப்படுத்துதல் உள்ளிட்டவைகள் பட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ளன.
தங்கம் தென்னரசு: அதுமட்டுமல்ல, நாட்டின் அனைத்து தளங்களிலும் தமிழகம் முத்திரை பதித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்தார். இதையடுத்து, பட்ஜெட்டின் முக்கிய அம்சம் குறித்து நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி தந்தார். அப்போது அவர் சொன்னதாவது:
"தேசிய பணவீக்கத்தை விட தமிழ்நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. 2024-25 நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 3.44 சதவீதமாக இருக்கும். நிதி பற்றாக்குறை 3.5% ஆக இருக்க வேண்டும்; அந்த வரம்பிற்குள் தமிழ்நாடு அரசு உள்ளது. மத்திய அரசிடம் இருந்து வரும் நிதிப்பகிர்வு, மானியம் குறைந்துகொண்டே வருகிறது. தமிழ்நாட்டின் பொருளாதார நிலை ஆரோக்கியமாக உள்ளது.
வருவாய் : தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் ரூ.1,95,17 கோடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பத்திரப்பதிவு துறையில் கடந்த வருடம் எதிர்பார்த்த அளவு வரி வருவாய் கிடைக்கவில்லை. இயற்கை பேரிடர்களால் தமிழகத்தின் வருவாய் குறைந்திருக்கிறது.. நிவாரண தொகைக்காகவே அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது. 2 பேரிடர்களுக்கான நிதியும் அரசின் வரி வருவாயில் இருந்து செலவிடப்பட்டது.
10ஆவது நிதிக் குழுவில் 6.64சதவீதமாக இருந்த நிதிப் பகிர்வு 15ஆவது நிதிக் குழுவில் 4.08சதவீதமாக குறைந்துள்ளது. மத்திய அரசு வழங்கும் மானியங்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது. வரி திரட்டுவதற்கான முயற்சிகளை கவனமாக கையாண்டு வருகிறோம். மோட்டார் வாகனம் மூலம் கிடைக்கும் வரி வருவாய் திருப்திகரமாக உள்ளது.
பயிற்சிகள்: இந்த வருடம் 15 சதவீதம் வணிக வரியில் வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு அலுவலகங்களில் தமிழக இளைஞர்களின் பங்களிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இதற்காக போட்டி தேர்வு பயிற்சிக்காக ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார் உதயச்சந்திரன்.
சென்னையில் கடந்த ஜனவரி மாதம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். அப்போது, "தமிழகத்தில் இருந்து பெற்ற வரியை விட தமிழக அரசுக்கு அதிகமாக நிதி வழங்கப்படுகிறது" என்று தெரிவித்து, வரி பகிர்வு குறித்து கருத்துகளையும் கூறியிருந்தார்.
நிர்மலா சீதாராமன்: ஆனால், நிர்மலா சீதாராமனின் இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், உடனடியாக செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்தார் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. நிர்மலா சீதாராமன் பேசிய வரி பகிர்வு குறித்து, விளக்கத்தையும் தந்திருந்தார்.
அதில், "மத்திய அரசு மாநில அரசுக்கு உதவும் வகையில் எதாவது செய்துள்ளதா என்று பார்த்தால் இல்லை என்பதே வருத்தமளிக்கக் கூடிய விஷயமாக உள்ளது" என்று கூறியிருந்ததுடன், மத்திய அரசு இதுவரை வழங்கிய நிதி குறித்து புள்ளி விவரங்களை வெளியிட்டு மிக நீண்ட விளக்கமளித்தார். அமைச்சர் தென்னரசுவின் இந்த விளக்கத்தை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டிருந்தார்.
தமிழகம்: "நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன? "தமிழகத்துக்கு மத்திய அரசு ஒன்றுமே செய்வது இல்லை என்கின்றனர். "நாங்கள் கொடுக்கும் வரியைதானே கேட்கிறோம், அதிகாரத்தோடு, உரிமையோடு கேட்கிறோம்" என்று சொல்பவர்களுக்கு சில விஷயங்களை கூற விரும்புகிறேன். வரியில் இருந்து கிடைக்கும் தொகையைதான் மத்திய அரசு பங்கிட்டு வழங்குகிறது. தமிழகத்துக்கு உரிய மானிங்கள் வழங்கப்படவில்லை" என்று கூறியிருந்தார்.
எனவே, மத்திய அரசு உரிய பங்களிப்பை அளித்தால் இன்னும் வேகமாக பணிகளை முடிக்க முடியும் என்று கூறிய முதல்வர், தமிழகத்துக்கு கிடைத்த மானியங்கள் எவ்வளவு என்பதையெல்லாம் பட்டியலாக வெளியிட்டிருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில்தான் இன்றைய பட்ஜெட் நடந்து முடிந்தது.. மத்திய அரசு வழங்கும் மானியங்கள் தொடர்ந்து குறைந்து வருவதாக நிதித்துறை செயலரும் அதிரடியாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications