ரொம்ப வெக்கமாக இருக்கு.. ரூ.1000க்கும், ரூ.500க்கும் விலை போறது கேவலமான விஷயம்..ஆர்கே செல்வமணி
சென்னை: தேர்தலின் போது ரூ.1000க்கும், ரூ.500க்கும் விலை போறது கேவலமான விஷயம் என்றும் ரொம்ப வெக்கமா இருக்கிறது என்றும் ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என்றும் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கருத்து தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் திருவிழா தொடங்கிவிட்ட நிலையில், 7 கட்டங்களாக இந்தியாவில் தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் முதற்கட்ட தேர்தலிலேயே தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிக்கும் தேர்தல் நடைபெற போகிறது.. லோக்சபா தேர்தலில் வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் மாதம் நான்காம் தேதி நடைபெறுகிறது. அன்றுதான் இந்தியாவின் அடுத்த பிரதமர் யார், எந்த கூட்டணி ஆட்சியமைக்க போகிறது என்பது தெரியும்.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் வரும் 20ம் தேதி தொடங்க உள்ளது. 27ம் தேதி வேட்பு மனுதாக்கல் நிறைவு பெறுகிறது. கட்சிகள் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியிலும், கூட்டணியை இறுதி செய்வதிலும் மும்முரமாக உள்ளன.. அதேநேரம் பிரச்சாரம் செய்வதிலும் அரசியல் கட்சிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்த ஒரு மாதம் பிரச்சாரங்களுக்கு செல்லும் தொண்டர்களுக்கு பணம், மது, பிரியாணி என களை கட்ட தொடங்கி உள்ளது.. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு அரசியல் கட்சிகள் பணம் கொடுக்கும் என்பதால் அது தொடர்பான எதிர்பார்ப்பும் மக்களிடையேஇருக்கிறது. அதேநேரம் இதை எல்லாம் தடுக்க தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கி உள்ளது. பணத்தை லட்சக்கணக்கில் ரொக்கமாக எடுத்து செல்வது இனி கடினம் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் மட்டுமல்ல, பல்வேறு முக்கிய பிரமுகர்களுமே பணம் வாங்கி கொண்டு வாக்களிக்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். அந்த வகையில் இயக்குனர் ஆர்கே செல்வமணி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது இந்த கருத்தை தெரிவித்தார். ஆந்திராவில் அமைச்சராக உள்ள நடிகை ரோஜாவின் கணவரான ஆர்கே செல்வமணி தேர்தலின் போது ரூ.1000க்கும், ரூ.500க்கும் விலை போறது கேவலமான விஷயம்.. ரொம்ப வெக்கமா இருக்கிறது.. ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என்றார்
தயாரிப்பாளர் சங்க தேர்தல் மற்றும் இயக்குனர் சங்க தேர்தலை குறிபிட்டு ஆர்கே செல்வமணி கூறுகையில், "இரண்டு விஷயத்தை மக்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.. 10 பேர் உறுப்பினர்கள் இருக்கும் போது, ஒரே ஒருவர் மட்டுமே ஓட்டு போட்டிருக்கிறார்.. அது உறுப்பினருக்கே கேவலமான விஷயம்... பணம் வாங்கினார்களா என்று தெரியவில்லை.. தயாரிப்பாளர் கவுன்சிலில் தான் இந்த நோய் ஆரம்பித்தது. துணை தலைவர் பதவிக்கு இரண்டு பேர் நிற்கிறார்கள் என்றால், ஒருவருக்கு மட்டும் ஓட்டுப்போடுவது.. இன்னொருவருக்கு துரோகம் செய்வது என அங்கே ஆரம்பித்தது.. 10 பேர் இயக்குனர்கள் இருக்கும் பிரிவில் ஒரே ஒருவருக்கு மட்டும் ஓட்டு போட்டுள்ளார்கள்.. எந்த வகையில் இது சரி..
10 பேருக்கு ஓட்டு போட வேண்டிய இடத்தில் ஒரே ஒருவருக்கு மட்டும் போடக்கூடாது.. நாம் மட்டும் வெல்ல வேண்டும் என நினைத்து பணமோ, சரக்கோ தர்றாங்க. ஒரு கோடி இல்லாமல் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவருக்கு நிற்க முடியாத நிலை இருக்கிறது. இயக்குனர் சங்க நிர்வாகிகள் ஓட்டுக்கு பணம் வாங்குவது வெட்கக்கேடான விஷயம்.. ரூ.1000க்கும், ரூ.500க்கும் விலை போறது கேவலமான விஷயம்" என்றார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications