பம்பர் கார், ஜம்ப்பிங் டிராம்பில் ஆசை தீர விளையாடிய தலிபான்கள்.. கடைசியில் மொத்தமாக எரித்து நாசம்!
சென்னை: ஆப்கானிஸ்தானையும் பிடித்து ஆட்சியையும் பிடித்த தலிபான்கள் பொழுதுபோக்கு பூங்காவில் டேஷிங் கார் விளையாடி, ஜம்ப்பிங் டிராம்புகளில் குதித்து விளையாடி பொழுதை கழித்து வருகிறார்கள். அது போல் ஜிம்களில் போய் உடற்பயிற்சியையும் செய்துள்ளார்கள். பின்னர் ஆசை தீர விளையாடிய அந்த பொழுதுபோக்கு பூங்காவை கொளுத்திவிட்டு அட்டூழியம் செய்துள்ளார்கள்.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்துவிட்டார்கள். இதனால் அங்குள்ள மக்கள் பீதியின் பேரில் காபூல் விமான நிலையங்களில் குவிந்து வருகிறார்கள். ஆனால் தலிபான்களோ எங்களால் பொதுமக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படாது என கூறியிருந்தார்கள்.
இந்த நிலையில் அவர்கள் நேற்றைய தினம் முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது மற்ற நாடுகள் மீது தாக்குதல் நடத்த ஆப்கன் மண்ணை பயன்படுத்த யாருக்கும் அனுமதி கிடையாது. சர்வதேச நாடுகள் எங்களை அங்கீகரிக்க வேண்டும். பெண்கள் வேலைக்கு செல்ல அனுமதி உண்டு, ஆனால் ஷரியத் சட்டத்தின் கீழ் அவர்கள் செயல்பட வேண்டும்.

ஆட்டத்தை நிறுத்த திட்டம்
நாங்கள் காபூல் நுழைவு பகுதி வரை எங்கள் ஆட்டத்தை நிறுத்திக் கொள்ள திட்டமிட்டிருந்தோம். ஆனால் துரதிருஷ்டவசமாக அஷ்ரப் கானி அரசோ செயலற்று எங்களை தடுக்கவில்லை. பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். பொதுவாக எந்த நாட்டிலும் ஆட்சியை பிடித்தவுடன் நாட்டின் வளர்ச்சிக்காக என்னென்ன பணிகளை செய்யலாம் என்பதை புதிய ஆட்சி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும்.

தலிபான்கள் என்ன செய்தார்கள்
ஆனால் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்த தலிபான்கள் என்ன செய்தனர் தெரியுமா? ஆப்கானிஸ்தானில் உள்ள ஷேர்பெர்கானில் பேகாவில் உள்ள போக்தி பொழுதுப்போக்கு பூங்காவுக்குள் சென்றனர். அங்கு குழந்தைகள் விளையாடும் டேஷிங் கார்களை விளையாடி மகிழ்ந்தனர். பின்னர் ரங்க ராட்டினத்திலும் உள்ள குதிரை மீது அமர்ந்து சுற்றினர். இதையடுத்து அவர் ஜம்பிங் டிராம்புகளிலும் ஏறி நின்று குதித்து விளையாடினர்.

ஆட்சி அமைத்து பொறுப்பில்லை
பின்னர் ஒரு உடற்பயிற்சிக் கூடத்திற்கு சென்று துள்ளி குதித்து விளையாடினார்கள். ஆட்சியை அமைத்துள்ள நிலையில் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் சின்னப்புள்ளத்தனமாக இவர்கள் விளையாடியது அதிர்ச்சியையும் நகைப்பையும் ஏற்படுத்துகிறது. இத்தனை ஆசை ஆசையாக விளையாடிய பொழுதுபோக்கு பூங்காவை கடைசியில் இவர்கள் என்ன செய்தனர் தெரியுமா?
|
கொளுத்திய சம்பவங்கள்
இவர்கள் விளையாடி மகிழ்ந்த நாளன்றே இரவோடு இரவாக அந்த பொழுதுபோக்கு பூங்காவையே எரித்துவிட்டனர். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், அந்த பொழுதுப்போக்கு பூங்காவில் இருந்த சிலைகள், உருவங்கள் இஸ்லாமிய நடைமுறைக்கு எதிரானது என்பதால் அவற்றை தீ வைத்து கொளுத்திவிட்டதாக அவர்கள் நியாயப்படுத்தியுள்ளார்கள்.
|
அதிர்ச்சியில் மக்கள்
ஏற்கெனவே தலிபான்கள் ஆட்சியை பிடித்ததால் அதிர்ச்சியில் உறைந்துள்ள மக்கள் காபூல் விமான நிலையத்தில் ஓடுதளத்தில் ரன்னிங்கில் விமானத்தில் ஏற முயற்சிக்கிறார்கள். 150 பேர் கொண்ட விமானத்தில் ஒரே நேரத்தில் 640 பேர் ஓடி சென்று அமர்ந்துக் கொள்கிறார்கள். இதெல்லாம் அச்சத்தின் காரணமாக இவர்கள் செய்கிறார்கள். அதை நாம் ஒன்றும் குறை கூற முடியாது. ஆப்கானிஸ்தான் மக்களை நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம் என தலிபான்கள் கூறினாலும் இவர்களது செயல்பாடுகள் அவர்களை நம்பும்படியாக இல்லை.
|
ஜாலியோ ஜாலி
சின்ன உதாரணம் காலையில் ஜாலியாக சிரித்து மகிழ்ந்து பொழுதை கழித்த இவர்கள் அன்று இரவே அந்த பொழுதுபோக்கு பூங்காவையே எரித்துவிட்டார்கள். ஆட்சி, அதிகாரம் இவர்களுடையது. இவர்கள் நினைத்திருந்தால் அந்த பூங்காவை புத்துயிர் பெற வைத்து இவர்களுக்கு பிடிக்காத விஷயங்களை மாற்றியிருக்கலாம். ஆனால் இவர்கள் செய்ததோ புத்தாக்கலை விட்டுவிட்டு அழித்துள்ளார்கள். இதெல்லாம் எங்கு போய் முடிய போகிறதோ என நினைக்க தோன்றுகிறது.












Click it and Unblock the Notifications